அறிமுகம் :

உணவு பொருட்கள் சில உடனடியாக உட்கொள்ளப்படுவதாக இருக்கிறது. மற்ற சில பொருட்கள் எக்காலத்திலும் உண்பதற்கு ஏற்றவாறு பதப்படுத்தி உண்பதாக இருக்கிறது. அப்படி ஒரு உணவு பொருள் தான் காய்ந்த திராட்சை. காய்ந்த திராட்சைகள் பல உடல் குறைபாடுகளுக்கு சிறந்த உணவாக இருக்கிறது.
ஆண்மை குறைபாடுகள் :

நரம்புகள் பாதிப்படைவதால் சில ஆண்களுக்கு நரம்பு தளர்ச்சி மற்றும் உடலுறவு சார்ந்த குறைபாடுகள் ஏற்படுகின்றன. காய்ந்த திராட்சைகளை சூடான பசும்பாலில் சிறிது ஊற வைத்து அருந்தி வர நரம்புகள் வலுவடைந்து, ஆண்மை குறைபாடுகள் நீங்கும்.
அதீத மனஅழுத்தம் :

அவசரமான இன்றைய வாழ்க்கை முறையால் பலரும் அதீத மனஅழுத்ததால் பாதிக்கப்படுகின்றனர். இரவு உறங்கும் முன்பு காய்ந்த திராட்சைகளை பாலில் ஊறவைத்து அருந்தி வர கூடிய விரைவில் மன அழுத்தங்கள் குறையும்.
சிறுநீரகம் :

உடலின் கழிவுகளை வெளியேற்றி உடலின் வெப்பநிலையை சீராக வைப்பதில் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுகின்றன. காய்ந்த திராட்சைகள் சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தி, சிறுநீர் நன்கு பிரிய உதவும் சிறுநீர் கற்களை கரைக்கும்.
ஈரல் :

உணவை செரிமானம் செய்வது மற்றும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருவது போன்ற காரியங்களில் ஈரல் முக்கிய பங்கு வகிக்கிறது. காய்ந்த திராட்சைகள் தொடர்ந்து உண்ண ஈரலுக்கு வலு சேர்த்து உடலின் சீரான இயக்கத்திற்கு உதவும்.