அறிமுகம் :
இளம் வயதில் இருந்தே அனைவரும் பால் குடித்து தான் வளர்ந்திருப்போம். பாலில் இருக்கும் சத்துக்கள் தான் நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கும், உடல் வலுப்பெறுவதற்கும் உதவி வருகிறது. தாய்ப்பாலுக்கு பிறகு நாம் அனைவரும் பருகுவது விலங்குகளின் பால் தான். மாட்டுப்பால், ஆட்டுப்பால், ஒட்டகப்பால் இவையெல்லாம் விலங்குகளிடம் இருந்து பெறப்படுகிறது. இவை தவிர தாவரங்களின் விதைகளில் இருந்து பெறப்படும் பால் தான் தேங்காய் பால், பாதாம் பால், பருத்திப்பால். இந்த ஒவ்வொரு பாலுமே உடலுக்கு வலிமை தரக்கூடியவை தான்.
வயிற்று புண் :
வயிற்று புண், குடல் புண் இருப்பவர்கள் வெறும் வயிற்றில் பருத்திப்பாலை குடிப்பது நல்லது. விரைவாக வயிற்றில் உள்ள புண்கள் அழிந்து உடலை பாதுகாப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. வயிறு சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் பருத்திப்பால் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.
முதுகு வலி :
பருத்தி பாலுடன் வறுத்து அரைத்த கோதுமையை சேர்த்து காய்ச்சி குடிப்பதன் மூலம் கை, கால், மூட்டு வலி, முதுகு வலி போன்றவை குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இந்த பால் உதவி வருகிறது.
மலச்சிக்கல் :
இந்த பாலில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே மலச்சிக்கல் உள்ளவர்கள் ஒரு டம்ளர் பருத்தி பால் குடிப்பதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
தாய்ப்பால் :
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பால் சுரக்க பயன்படுகிறது. அது மட்டும் இல்லாமல் தாய்மார்களுக்கு உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது.
பருத்தி பாலில் விட்டமின்கள், புரதம், கொழுப்பு போன்ற சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு தேவையான அனைத்து சக்தியும் கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.