அறிமுகம் :
கொத்தமல்லி இலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கொத்தமலை இலைகளை அரைத்து முகத்தில் பூசுவதால் தோல் சுருக்கம் மற்றும் கருமை மறையும். மிக எளிதாகவும், விலை மளிவாகவும் கிடைக்கக்கூடிய ஒன்று கொத்தமல்லியாகும்.
கண் பிரச்சனைகள் :
கொத்தமல்லி அரைத்து கண்களுக்கு மேலெ பற்று போடுவதால், கண் பிரச்சனைகள் குறைகிறது. கண்களுக்கு பலம் கிடைக்கிறது. கண்கள் பிரகாசம் ஆகிறது. கண்களுக்கு கீழே உள்ள சுருக்கங்கள் மற்ரறும் கண்களில் உள்ள கருவளையங்கள் ஆகியவை முகத்திற்கு முதிச்சியான தோற்றத்தை தரக்கூடியது.
வயிற்று வலி :
வயிற்று வலி, அஜீரண கோளாறுகல் போன்றவற்றை போக்குகிறது, இது ஈரலை பலப்படுத்துகிறது. கொத்தமல்லி ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இது அம்மை நோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது. இந்த மருத்துவம் வெளிநாடுகளில் கூட மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
சிறுநீர் :
கொத்தமல்லி விதைகளை தேநீராக்கி குடித்தால், சிறுநீர் உடலில் தேக்கி வைக்கப்படாமல் உடலை விட்டு வெளியேறும். சிறுநீர் தேங்கினால் கை, கால்களில் வீக்கம் உண்டாகும். தனியா தேநீரை பருகுவதினால், வாயு பிரச்சனைகள் அகலும், அடிக்கடி ஏப்பம் உண்டாவது, ஏப்பத்தினால், நெஞ்செரிச்சல் உண்டாவது போன்றவை குணமாகும்.
நாளமில்லா சுரப்பி :
கொத்தமல்லிக்கு ஆற்றும் குணம் அதிகம் உண்டு. இது நாளமில்லா சுரப்பிகளை நன்கு இயங்கச் செய்யும். மாதவிலக்கு ஒழுங்கின்மை, வலி ஆகிய பிரச்சினைகளை உடையவர்கள் தினம் கொத்தமல்லி இலை ஜூஸ் அருந்துவது நல்லது.
காய்ச்சல் :
கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும். தாது விருத்திக்கும் நல்லது. கொத்தமல்லி பசியைத் தூண்டும் சக்தி படைத்தது. இக்கீரையின் சாறு பிழிந்து பித்தத் தழும்புகள் மீது பூசினால் விரைவில் குணம் கிடைக்கும்.
இரும்புச்சத்து :
கொத்தமல்லி இலையில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தசோகை வருவதற்கான வாய்ப்புக் குறைகிறது. உடலின் ஆற்றலை அதிகரிக்க, எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு, உறுப்புக்களின் இயல்பான இயக்கத்துக்கு என்று பெரிதும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.