அறிமுகம் :

கோடை என்றால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது இளநீர் தான். மற்ற பானங்களை விட இளநீருக்கே மவுசு அதிகம். இது இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பானம் என்பதால் இதை அதிகம் விரும்புவர். மேலும் இது தாகத்தை தணித்து புத்துணர்ச்சியும் அளிக்கிறது.
வைட்டமின்கள் :

இந்த நீரில் வைட்டமின்கள், கனிமங்கள், மின்பொருட்கள், என்சைம்கள், அமினோ அமிலங்கள் மற்றும் சைட்டோகைனின் வளமாக இருக்கின்றன. இளநீர் அதன் ருசிக்கும், நமக்கு அளிக்கும் புத்துணர்ச்சிக்கும், மருத்துவ குணங்களுக்கும் உலகம் முழுவதும் புகழ் பெற்று திகழ்கிறது.
உடல் வறட்சி :

உடல் வறட்சி பிரச்சனைக்கு இளநீரை நரம்பின் வழியாக உடம்பில் ஏற்றலாம். மிகவும் தொலைவில் எந்த ஒரு மருத்துவ வசதியும் இல்லாத இடத்தில் வசிக்கும் நோயாளிகளுக்கு, இப்பிரச்சனை ஏற்பட்டால் தற்காலிகமாக இந்த அணுகுமுறையை கையாளலாம்.
ஆல்கஹால் :

ஆல்கஹால் உடலை வறட்சியடையச் செய்கிறது மற்றும் இது சரக்கு அடித்த மறுநாள் தலைவலி மற்றும் குமட்டல் உணர்வை வரத் தூண்டும். இந்நிலையில் ஒரு இளநீரைக் குடித்தால், அது இப்பிரச்சனைகளில் இருந்து விடுவிப்பதோடு, இழந்த எலக்ட்ரோலைட்டுக்களை மீண்டும் பெற உதவி புரிந்து, நன்கு உணர வைக்கும்.
மன அழுத்தம் :

நல்ல சுவையான இளநீரை இரவு தூங்குவதற்கு முன் குடித்தால், அது மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, இதயத் துடிப்பை மெதுவாக்கும் மற்றும் மனதை அமைதிப்படுத்தி, இரவு நல்ல தூக்கத்தைப் பெற உதவும். மேலும் இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது, உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவி புரிந்து, தொற்றுகள் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளைத் தடுக்கிறது.