அறிமுகம் :
இந்த பூமியில் உள்ள எந்தவொரு உயிரினத்திற்கும் தேங்காய் நன்மையை மட்டுமே அளிக்கிறது. இது உங்கள் உடலை குளிர்வித்து புத்துணர்ச்சியூட்டும் உணர்வைத் தருகிறது. தேங்காய் எண்ணெயின் பயன்பாடுகள் ஒன்றோ இரண்டோ அல்ல பல நன்மைகளை கொண்டுள்ளது.
தேங்காய் எண்ணெய் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை காக்கிறது. ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை உருவாக்குகிறது. தேங்காய் எண்ணெயை சமையலில் சேர்த்துக்கொள்வதிலும், வெளிப்புறமாகத் தோலில் பூசுவதாலும் பல பலன்கள் இருக்கின்றன. தேங்காய் எண்ணெய் உடலுக்கு நலம் தருவதோடு, சருமத்தைப் பொலிவாக்கும் ஆற்றல் கொண்டது.
எடை குறைப்பு :
ஹார்மோன்கள் நமது உடல் பருமனுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளன. ஹார்மோன்களை சமநிலையில் வைத்து உடல் பருமனாகாமல் பார்த்து கொள்கிறது. மேலும், அடிக்கடி எதையாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தையும் இது குறைத்து விடுகிறது. அத்துடன், இதிலுள்ள நல்ல கொலஸ்ட்ரால் உடல் எடையை கூடாமல் வைக்கிறது.
சிறுநீர் தொற்றுக்கு சிகிச்சை :
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளால் பெண்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தேங்காய் எண்ணெயை உட்கொள்வது வைரஸ்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும். இது சிறுநீர்ப்பை நோய்கள் மற்றும் சிறுநீரக கல் உருவாவதையும் தடுக்கிறது. போதுமான அளவு நீர் அருந்தாத பலருக்கு சிறுநீரக தொற்றுகள் ஏற்பட கூடும். தேங்காய் எண்ணெய் இயற்கையிலே ஒரு ஆன்டி-பையோட்டிக். எனவே, உங்களின் சிறுநீரக பாதையில் உள்ள தொற்றுக்களை முற்றிலுமாக சரி செய்ய தினமும் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சாப்பிடுங்க. இவை சிறுநீர் பாதையில் உள்ள தொற்றுக்களை அழிக்க கூடிய ஆற்றல் கொண்டவை.
அரிக்கும் தோல் அழற்சி :
இது வறண்ட சருமத்தின் திட்டுக்களால் வகைப்படுத்தப்படுகிறது, அவை வீக்கம், அரிப்பு, சிவத்தல், மற்றும் புண் ஆக மாறுகின்றது. தேங்காய் எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற (ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ்) பண்புகள் உள்ளன. அவை, சரும ஆரோக்கியத்தை மீட்டு எடுக்கவும், சேதமடைந்த சருமத்தை குணப்படுத்தவும், மற்றும் வடுவைத் தடுக்கவும் உதவுகின்றன. அரிக்கும் தோல் அழற்சிக்கு (சிரங்கு) சிகிச்சை அளிக்க, பாதிக்கப்பட்ட தோலின் மீது ஒரு நாளைக்கு மூன்ற அல்லது நான்கு முறை எக்ஸ்ட்ரா விர்ஜின் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துங்கள்.
சிறுநீர் தொற்று :
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளால் பெண்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தேங்காய் எண்ணெயை உட்கொள்வது வைரஸ்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும். இது சிறுநீர்ப்பை நோய்கள் மற்றும் சிறுநீரக கல் உருவாவதையும் தடுக்கிறது. போதுமான அளவு நீர் அருந்தாத பலருக்கு சிறுநீரக தொற்றுகள் ஏற்பட கூடும். தேங்காய் எண்ணெய் இயற்கையிலே ஒரு ஆன்டி-பையோட்டிக். எனவே, உங்களின் சிறுநீரக பாதையில் உள்ள தொற்றுக்களை முற்றிலுமாக சரி செய்ய தினமும் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சாப்பிடுங்க. இவை சிறுநீர் பாதையில் உள்ள தொற்றுக்களை அழிக்க கூடிய ஆற்றல் கொண்டவையாம்.