தேங்காய் எண்ணெய் பயன்கள் :
கடையில் விற்கும் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் அல்லது வீட்டில் சொந்தமாக தயாரிக்கப்பட்ட எண்ணெயை பயன்படுத்துவது நல்லது. கேரளா போன்ற மாநிலங்களில் தேங்காய் எண்ணெயில் சமைக்கப்பட்ட உணவுகள் தான் பயன்படுத்தப்படுகின்றன.
நோய்களை குணப்படுத்த :
தேங்காய் எண்ணெயில் இருக்கும் மீடியம் செயின் ட்ரை கிளிசரைட் எனும் பொருள் நேரடியாக கல்லீரலை சென்றடைகிறது. இது கல்லீரலுக்கு சென்று ketone body என்று சொல்லக்கூடிய வேதி பொருளை உருவாக்குகிறது. இந்த ketone body உடலில் உருவாகுவதால் அவை வலிப்பு நோயை சரி செய்யவும், அல்சைமர் நோய், மன நோய்களை சரி செய்யவும் உதவுகிறது.
இதயத்தை பாதுகாக்க:
இதயத்தை பாதுகாப்பதற்கு உதவுகிறது. தேங்காய் எண்ணெயில் இருக்கும் லாரிக் அமிலம் LDL எனப்படும் கெட்ட கொழுப்பு உடலில் சேராமல் பாதுகாத்து HDL எனும் நல்ல கொழுப்புகளை உடலில் அதிகரிக்க உதவுகிறது
உடல் எடை குறைய:
உடல் எடையை குறைக்க உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடிப்பதன் மூலம் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை குறைக்கலாம்.
வாய் துர்நாற்றம் நீங்க :
தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி நன்கு கொப்பளித்தால் (Oil Pulling) வாய் துர்நாற்றம், பற்சொத்தை, ஈறு பிரச்சனைகள் போன்றவற்றை சரி செய்ய உதவும்
சருமத்திற்கு:
தேங்காய் எண்ணெய் பயன்கள்: ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தேங்காய் எண்ணெயில் இருப்பதால் சருமத்தில் இருக்கும் தேவையற்ற கிருமிகளை நீக்குவதற்கும், முக சுருக்கங்களை சரி செய்யவும் உதவுகிறது. கோடை காலங்களில் ஏற்படும் சரும பிரச்சனைகளை தடுப்பதற்கு தேங்காய் எண்ணெயை தோலின் மேல் தடவி வரலாம்.
தலைமுடி:
பொடுகு தொல்லை, இளம் வயதில் ஒரு சிலருக்கு ஏற்படும் நரை, பேன் தொல்லை போன்றவற்றை சரி செய்யவும், தலைமுடி நன்றாக வளர்வதற்கும் உதவுகிறது
உடல் சூட்டை தணிக்க:
தேங்காய் எண்ணெய் பயன்கள்: உடல் சூடு உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயை தலையில் தேய்த்து குளித்து வரலாம். இவ்வாறு செய்து வந்தால் உடல் உஷ்ணம் நீங்குவதோடு, கண்களும் குளிர்ச்சி பெறும்
காயங்கள்:
அடபட்டால் ஏற்படும் காயங்கள், ஒவ்வாமையால் ஏற்படும் புண்கள் போன்றவற்றை சரி செய்ய காயத்தின் மீது தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி வந்தால் விரைவில் புண்கள், காயங்கள் சரியாகிவிடும்