அறிமுகம் :
இந்த பிரக்கோலி மத்திய தரைக்கடல் பகுதியை சுற்றியுள்ள நாடுகளை பூர்வீகமாக கொண்டதாகும். பழங்காலத்தில் ரோமானியர்களின் உணவில் ப்ரோக்கோலியை அதிகம் பயன்படுத்தினர். தற்போது உலகெங்கிலும் உள்ள மக்கள் ப்ரோக்கோலியை அதிகம் விரும்பி உண்கின்றனர்.
நச்சு தன்மை :
இன்று நாம் சாப்பிடும் மற்றும் அருந்தும் உணவு பானங்கள் பல வகையான நச்சுக்கள் நிறைந்திருக்கின்றன. இவை உடலில் சிறிது சிறிதாக சேர்ந்து எதிர்காலங்களில் பல ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட வழிவகை செய்கிறது. ப்ரோக்கோலியில் சல்பர் கூட்டுப் பொருட்கள் மற்றும் குளுக்கோஸிநோலேட்டுகள் ஆகிய வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன.
இளமை தோற்றம் :
இளமை தோற்றத்தோடு இருக்க வேண்டும் என்பது நம் அனைவருக்குமே இருக்கின்ற ஆசை தான். ப்ரோக்கோலியில் அதிகம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ப்ரோக்கோலியை வாரத்தில் குறைந்தது இரண்டு முறையாவது சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் ஏற்படும் ப்ரீ ராடிக்கல்கள் செல்களின் அழிவினை தடுத்து, உடலுக்கு புத்துணர்ச்சி தந்து தோல் சுருக்கங்கள் ஏற்படுவதை தாமதப்படுத்தி எப்போதும் இளமை தோற்றத்தை இருக்குமாறு செய்கிறது.
சரும நலம் :
நமது உடலை வெளிப்புற பாதிப்புகளிலிருந்து காப்பதோடு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருக்கும் பணியை சருமம் மேற்கொள்கிறது. சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்கள் நமது சருமத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. சமயங்களில் தோல் புற்றுநோய் ஏற்படுவதற்கும் இவை காரணமாக அமைகிறது.
எலும்புகள் வலிமை பெற :
நமது உடலுக்கு அடிப்படையாக இருப்பது எலும்புகள் தான். எலும்புகள் வலிமையாக இருக்க வைட்டமின் கே சத்து அதிகம் தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் கே சத்து இல்லாத உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு எதிர்காலங்களில் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புத் தேய்மானம், எலும்பு முறிவு போன்ற குறைபாடுகள் ஏற்பட காரணமாகிறது. எலும்புகள் வலிமை பெற உதவும் ஒரு இயற்கை உணவாக ப்ரோக்கோலி இருக்கிறது.