அறிமுகம் :
மலர்கள் என்றாலே அவற்றிற்கு அதிக மணம் இருக்கும் என்பது இயல்பான ஒன்றே. ஆனால், அவற்றில் உள்ள மருத்துவ குணத்தை நாம் அறியாமலே இத்தனை காலம் கடந்து வந்து விட்டோம். ஒவ்வொரு பூக்களுக்குள்ளும் பல வித ஆரோக்கிய ரகசியங்கள் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது. பூக்களை ரசிப்பதற்கும், சூடுவதற்கும், அழகுக்காக வீட்டில் பயன்படுத்துவதற்கும் பெரும்பாலும் நாம் இவற்றை உபயோகிக்கின்றோம்.
வெப்பம் குறைக்க :
இந்தக் கொடியின் மூலம் கிடைக்கப்படும் நிழலில் இருந்து, வெப்பம் குறைக்கப்படுகிறது. அதாவது வெப்பத்தின் சூட்டை தணித்து, அந்த இடத்தினை குளிரவைக்கும் தன்மை இந்த கொடியில் உள்ள இலைகளுக்கும், பூக்களும் இயற்கையாகவே இருக்கிறது. உங்கள் வீட்டு வாசலில் முன்பு இந்த செடியை வளர விடுவதன் மூலம் உங்களது வீடு வெயில் காலங்களில் குளிர்ச்சியாக இருக்கும் என்பதும் ஒரு நன்மை.
இதய நோய் :
இன்று பெரும்பாலான மக்கள் அவதிப்படும் உடல் சார்ந்த பிரச்சினைகளில் இதய நோயும் முதன்மையான இடத்தில உள்ளது. இவற்றை குணப்படுத்த சங்கு பூ உதவுகிறது. சங்கு பூவின் விதைகள் மற்றும் வேர்களை பயன்படுத்தி, கஷாயம் தயாரித்து குடித்து வந்தால் இதய கோளாறுகள் நீங்கும்.
மருத்துவ குணம் :
இந்த சங்கு பூச்செடிக்கு மருத்துவ குணம் ஏராளமாக உண்டு. இதில் பட்டு வரும், காற்றை நாம் சுவாசித்தால், மூச்சுத் திணறல் சுவாசக் கோளாறு, இருதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் தீரும் என்று மருத்துவ குறிப்புகளிலும் சொல்லப்பட்டுள்ளது.
புற்றுநோய் :
உடலில் பல நாட்களாக இருந்து கொண்டே நமக்கே அறியாமல் பல வித செயல்களை செய்யும் ஒரு கொடிய நோய்தான் புற்றுநோய். சங்கு பூவில் உள்ள ஃப்ளேவனாய்ட்ஸ் புற்றுநோய் செல்களை உடலில் உருவாகாமல் தடுக்கிறதாம். மேலும், உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் நலனை மேம்படுத்துமாம்.
காய்ச்சல் :
உங்களுக்கு திடீரென்று காய்ச்சல் அதிகமாக இருந்தால் இந்த சங்கு பூ நலம் பெற செய்யும். இவை உடலின் தட்பவெப்பத்தை சீரான நிலையில் வைக்க உதவுமாம். அத்துடன் இதன் கஷாயத்தை குடித்த 4 மணி நேரத்தில் காய்ச்சல் நின்று விடுமாம்.