அறிமுகம் :
புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தானாக வளரும் கோவைக்காயை நாம் அன்றாட உணவுகளில் அதிகளவு சேர்த்து கொண்டால் நம் உடலுக்கு தேவையான அளவுக்கு ஆரோக்கியத்தை நாம் பெற முடியும்.

கோவைக்காய் நாம் தினமும் அதிகளவு உண்டுவந்தால் நம் உடலில் ஏற்படும் பலவகையான நோய்களை குணப்படுத்திவிட முடியும்.சரி வாங்க கோவைக்காய் மருத்துவ குணங்கள் பற்றி இந்த பகுதில் நாம் படித்தறிவோம்.
குணமாக்கும் நோய்கள் :

கோவைக்காயை தினமும் நாம் அதிகளவு உண்டுவர நம் உடலில் ஏற்படும் நோய்களான சொரியாசிஸ், படை, சிரங்கு, தேமல், முடி உதிர்வு, பொடுகு, பல் சார்ந்த பிரச்சனை, தொப்பை, சர்க்கரை நோய், சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, சிறுநீரகத்தில் கல், கெட்ட கழிவுகள் ஆகிய அனைத்தையும், இந்த கோவக்காய், குணமாக்குகிறது.
தோல் நோய் குணமாக :
இதில் இந்த சொரியாசிஸ், படை, சிரங்கு, தேமல் நோயிகளுக்கு தினமும் மூன்று வேளை இந்த கோவக்காயை அரைத்து குடித்து வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

மேலும் இந்த கோவக்காய் ஜூஸ் குடிப்பதற்கு முன்பு வயிற்றை நன்றாக சுத்தம் செய்த பின்பு குடிக்க வேண்டும்.
தலைமுடி பிரச்சனைக்கு :

தலையில் பொடுகு, முடி உதிர்வு, இவைகளுக்கு இந்த கோவக்காய் ஜூஸ் குடிப்பதோடு அரைத்த அந்த சக்கையை எலும்பிச்சை பழத்துடன் சேர்த்து தடவி வந்தால் பொடுகு ஏற்படுவது குறைந்து விடும்.
பல் பிரச்சனைகளுக்கு :

பல் வலி, ஈறுகளில் வலி-வீக்கம், ஈறுகளில் ரத்தக் கசிவு, மஞ்சள் கரை, அனைத்தையும் கோவக்காய் ஜூஸ் குறைக்கிறது.
தொப்பை குறைய :

சிலருக்கு சரியான உடல் எடை இருந்தாலும் தொப்பை குறையாது.இதை சரி செய்ய தினமும் இந்த கோவக்காய் ஜூஸ் குடித்து வந்தால் விரைவில் தொப்பை குறைந்து விடும்.
சர்க்கரை நோய் குணமாக :

சர்க்கரை நோயால் சிலருக்கு அதிகளவில் சிறுநீர் போக்கு ஏற்படும். இதை கட்டுப்படுத்த தினமும் கோவக்காய் ஜூஸ் குடித்து வந்தால் சிறுநீர் போக்கு அதிகளவில் ஏற்படுவது குறையும் மற்றும் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.
சிறுநீரகத்தில் கல் பிரச்சனைக்கு :

சிறுநீரகத்தில் கல் இருந்தால் இதற்கு கோவக்காயுடன் கத்திரிக்காய் சேர்த்து அரைத்து குடித்து வந்தால் கல் முழுமையாக நீங்கி விடும்.
உடலில் உள்ள கெட்ட கழிவுகள் வெளியேற :

உடலுள் சேரும் கெட்ட கழிவுகளை கோவக்காய் நீக்குகிறது. மசாலா அதிகம் சேர்க்கப்பட்டுள்ள உணவுகள், கடை சாப்பாடு இவைகளால் உடலில் கெட்ட கழிவுகள் அதிகரிக்கும்.கோவக்காய் கெட்ட கழிவுகளை நீக்கி உடலை ஆரோக்கியத்துடன் வைக்கிறது.