மிளகை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் :
மிளகை நாம் உணவில் சேர்ப்பதால் நல்ல வாசனையையும், சுவையையும் கூட்டி தருகிறது. தினமும் நாம் ஐந்து மிளகு சாப்பிடுவதால் நம் உடலிற்கு பல நன்மைகளை தருகிறது.ஏதேனும் பூச்சிகள் கடித்தால் அதனால் நம் உடலில் ஏற்படும் விஷத்தை வெளியேற்றி நம் உடலை காக்கும் தன்மை கொண்டது மிளகுமிளகு உடலிற்கு அதிக சத்துக்களை தரக்கூடியது. அவை, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுஉப்புக்களும், கரோட்டின், தயமின், ரியாஸின் போன்ற வைட்டமின்களும் அதிகமாக இருக்கிறது.
மிளகு நம் செரிமானத்தை சீர் செய்து குடலை வலுப்படுத்தி, வாயு தொல்லை, அஜீரணம் ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது.
மிளகு நெஞ்சு சளியை போக்கும் :
மிளகு நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனை அதிகரிக்கும். நெஞ்சு சளியை போக்கும்.நெஞ்சு சளியை போக்க 7 மிளகு, 1 வெத்தலை, ஒரு சிறிய துண்டு இஞ்சி இந்த மூன்றையும் இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு அரை டம்ளர் ஆகும் வரை கொதிக்க வைத்து பிறகு குடித்தால் நஞ்சு சளியை போக்கும்.
மிளகு புற்றுநோய் வருவதை தடுக்கிறது :
மிளகில் உள்ள புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.மிளகை மஞ்சளுடன் சேர்க்கும் போது புற்றுநோய் எதிர்ப்பு குணங்கள் இன்னும் அதிகரிக்கிறது. தவிர மிளகில் வைட்டமின் C, A, இவை அனைத்தும் நம் உடலிற்கு தீமையை விளைவிக்க கூடிய நச்சுக்களை வெளியேற்றி புற்றுநோய் மற்றும் இதர நோய்களில் இருந்து பாதுகாக்க கூடியது. இதர புற்றுநோய்களான சருமபுற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய் வளருவதை தடுக்க உதவுகிறது.
உடல் எடையை குறைக்க :
மிளகில் உள்ள கருப்பு மேல் தோலில் அதிகப்படியான பட்டோநியூட்ரியன்ஸ் இருக்கிறது. இது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை உடைத்து எரிக்கும் தன்மை உள்ளது. அதிகப்படியான வியர்வை மற்றும் சிறுநீர் கழிக்கும் அளவையும் அதிகரிக்கக்கூடியது. அதிகப்படியான நீர் உடலிலிருந்து வெளியேறுவதால் இதனுடன் சேர்ந்து உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறிவிடுகிறது.
ஜலதோஷத்தை குணப்படுத்தும் :
ஒரு டம்ளர் பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் சிறிதளவு மிளகு தூள் சேர்த்து காய்ச்சி காலை, மாலை என இருவேளை குடித்தால் ஜலதோஷம் குணமடையும்: ஜலதோஷத்தால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்தும். பசியின்மையை போக்கும்.
மன அழுத்தத்தை போக்கக்கூடியது :
மிளகில் உள்ள மூளையில் உள்ள அறிவுத்திறன் அமைப்பை அதிகரிக்க செய்யக்கூடியது. மன அழுத்தத்தையும் குறைக்க உதவக்கூடியது மிளகு. சீரான முறையில் மிளகை சேர்த்துக்கொண்டால் மூளையின் செயல்பாடு சீராக இருக்கும்.
ஊட்ட சத்துக்கு உதவுகிறது :
அன்றாட உணவில் இருக்கக்கூடிய அனைத்து ஊட்ட சத்துக்களையும் சீராக ஈர்த்து உடலில் பயணிப்பதற்கு மிளகு உதவியாக இருக்கிறது.