அறிமுகம் :
மாதுளை பழத்தின் அறிவியல் பெயர் புனிகாகிரனடம் எல். (புனிகாகேயி), இது இலையுதிர் புதர் வகையை சேர்ந்தது. இப்பழம் ஈரான் நாட்டில் தோன்றி, பல்வேறுபட்ட நாடுகளில் பயிரிடப்பட்டது. மாதுளை பழத்தின் தோல் சிவப்பாக இருந்தால், அது பழம் பழுத்துள்ளதை குறிக்கும்;
இப்பழத் தோலை யாரும் உண்பதில்லை. பழத்தின் உள்ளிருக்கும் மாதுளை பழ விதைகளை பயன்படுத்தி, மாதுளை பழச்சாறு தயாரிப்பர். பல்வேறு விதமான பிரச்சனைகளை சரி செய்ய, இந்த மாதுளை பழச்சாறு பயன்படுகிறது.
இப்பதிப்பில் மாதுளம் பழம் அளிக்கும் நன்மைகள், பயன்கள் குறித்து பார்க்கலாம்.
மாதுளம் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் :
மாதுளம் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இதய ஆரோக்கியம் :
மாதுளை பழம் கரோனரி இதய நோய், ஹைப்பர் டென்சன், பெரிஃபெரல் இதய நோய் முதலியவற்றை குணப்படுத்த உதவும் என்று மருத்துவ அறிவியலில் கூறப்பட்டுள்ளது.
நீரிழிவு நோய் /இரத்த சர்க்கரை :
மாதுளம் பழம் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்க மற்றும் டைப் 2 நீரிழிவு நோயை பாதிக்கும் கொழுப்பு பிரீஆக்சிடேஷன் நிகழ்வை குறைக்க உதவுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
புற்றுநோய் ஆபத்து :
மாதுளம் பழம், மாதுளையில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள், மாதுளம் பழச்சாறு போன்றவை தோல் புற்றுநோயை தடுக்கும் இயற்கை தீர்வுகளாக செயல்படுகின்றன.
மாதுளை பழச்சாறில் உள்ள டானின்ஸ், எல்லாஜிக் அமிலம், புனிக்காலஜின் மற்றும் ஆன்டி கார்சினோஜெனிக் முதலியவை பெருங்குடல் புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோய் அபாயத்தை தடுக்க உதவுகின்றன.
செரிமானம் :
மாதுளை பழ விதைகள் B- காம்ப்ளக்ஸ் வைட்டமின்களை கொண்டுள்ளதால், அவை செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகின்றன.
இந்த வைட்டமின்கள், உடலில் உள்ள கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட் போன்றவற்றை ஆற்றலாக மாற்ற உதவுகின்றன. மாதுளம் பழ விதைகளில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், அது செரிமானத்தை மேம்படுத்த மேலும் உதவி புரிகிறது; இந்நார்ச்சத்து மலச்சிக்கலை குணப்படுத்தவும் பயன்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் :
மாதுளம் பழ விதைகளில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்; இந்த ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து போராடி, மனித உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றன என்று ஆய்வு அறிக்கைகள் கருத்து தெரிவிக்கின்றன.
இது மட்டுமல்லாமல், பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்புடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சனைகளையும் சரி செய்ய மாதுளை பழங்கள் உதவுகின்றன.
கர்ப்ப காலம் :
மாதுளம் பழம் கர்ப்ப கால சிக்கல்களை குறைக்க உதவுகின்றன.ஆனால், இது குறித்து நன்கு ஆராய்ந்து அறிய வேண்டியது அவசியம்.
மாதவிடாய் ஆரோக்கியம் :
அழுத்தத்தை குறைக்க, கொலஸ்ட்ராலை குறைக்க, உடல் நலத்தை முன்னேற்ற, ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலரின் உடலுறவு செயல்பாட்டை அதிகரிக்க மாதுளம் பழச்சாறு உதவுவதாக ஆதாரப்பூர்வமான மருத்துவ ஆய்வறிக்கைகள் கருத்து தெரிவிக்கின்றன.
மாதுளம் பழம் பெண்களில் மாதவிடாய் ஏற்பட ஒரு தூண்டு காரணியாக செயல்படுகிறது; சரியான, தொடர்ந்த மாதவிடாய் சுழற்சி ஏற்படுவதற்கு முன்னர், 10 முதல் 15 நாட்களுக்கு மாதுளை பழச்சாறை, நாள் ஒன்றுக்கு மூன்று வேளை என்ற முறையில் பருகி வந்தால் அது நல்ல பலன்களை அளிக்கும்.
பலமான எலும்புகள் :
மாதுளையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் குறைபாட்டை சரி செய்ய உதவும். மாதுளையில் உள்ள உறுப்புகள் குருத்தெலும்பு சரிவை மெதுவாக்கி, ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் பிரச்சனையை ஏற்படுத்தும் என்சைம்களை முடக்க உதவுகின்றன.
(RA) எனும் முடக்கு வாதம், அழற்சி, வலி, விறைப்பு தன்மை ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது; இதனை மாதுளை பழச்சாறு உட்கொள்வதன் மூலம் சமாளிக்க முடியும்.
இரத்த அழுத்தம் :
மாதுளம் பழம் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.சிஸ்டோலிக் மற்றும் டையஸ்டோலிக் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க, மாதுளம் பழச்சாறு பருகுவது பலனளிக்கும்.
அழற்சி எதிர்ப்பு தன்மை :
மாதுளம் பழம் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் விறைப்பு தன்மை செயலிழப்பை ஏற்படுத்த காரணமான அழற்சி மற்றும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன.
உடல் எடையை குறைத்தல் :
மாதுளை பழம் உடல் எடையை குறைக்க உதவும். மாதுளையில் உள்ள நார்ச்சத்தால் உடல் எடை இழப்பு எளிதில் நிகழும்.
குண்டாதலை தடுக்க மாதுளை பழ விதைகள் பெரிதும் உதவுகின்றன என்று ஆய்வுகள் தகவல் தெரிவிக்கின்றன.
சிறுநீரக கற்கள் :
பல ஆய்வறிக்கைகள் ஆக்சிடேட்டிவ் அழுத்த குறைபாடு சிறுநீரக கற்கள் உருவாவதுடன் தொடர்புடையது என்று தெரிவிக்கின்றன.
மாதுளம் பழச்சாறு ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து போராட உதவும்.கால்சியம் ஆக்சிலேட் எனும் பிரச்சனையை குறைக்க மாதுளை பழச்சாறு உதவுகிறது.
கொழுத்த கல்லீரல் :
மாதுளை பழ விதைகள் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்க மற்றும் அழற்சியை குறைக்க உதவுகின்றன; இதன் மூலம் கல்லீரல் கொழுப்பு பிரச்சனையை குணப்படுத்த உதவுகின்றன.
தொடர்ந்து மாதுளை பழத்தை உட்கொள்வது ஆல்கஹாலால் ஏற்படாத கல்லீரல் கொழுப்பு நோயில் இருந்து நிவாரணம் பெற உதவும் மற்றும் அந்நோயை தடுக்க உதவும்.
மாதுளை பழத்தின் சரும நன்மைகள் :
சூரிய வெப்பத்தால் தோலில் ஏற்படும் கருமை, தோல் புற்றுநோயை தடுக்க, மாதுளம் பழத்தில் உள்ள `எல்லஜிக் அமிலம்’ உதவும்.
உடலில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளை குணப்படுத்த மாதுளம் பழ விதைகள் பயன்படும்; காயம் மற்றும் தழும்புகளை போக்க மாதுளம் பழச்சாறை தோலில் தடவலாம்.
மாதுளம் பழ விதைகள் முதுமையை தடுத்து, தோலிற்கு இளமையான தோற்றத்தை அளிக்க உதவுகின்றன.
முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு வழங்கி, உடல் தோலில் மெலனின் உற்பத்தியை சீராக்க மாதுளை உதவும்.
இயற்கையாகவே சருமத்தை சுத்தப்படுத்தி, மிருதுவான சருமம் பெற மாதுளம் பழம் உதவும்.
வறண்ட சரும பிரச்சனையை போக்கி, தோலிற்கு ஈரப்பதத்தை வழங்க மாதுளம் பழச்சாறு பயன்படுகிறது.
பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகளை எதிர்த்து போராட, மாதுளையில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் உதவுகின்றன.
தோல் அழற்சி பிரச்சனைகளை தடுத்து, சருமம் ஆரோக்கியமாக திகழ மாதுளை உதவுகிறது.
மாதுளை பழம் தலைமுடிக்கு வழங்கும் நன்மைகள் :
மாதுளம் பழம் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடியின் வேர்க்கால்களை உறுதிப்படுத்த உதவுகிறது.
மாதுளையில் இருக்கும் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் நல்ல முடி வளர்ச்சி, பளபளப்பான மற்றும் அடர்த்தியான கூந்தலை பெற உதவுகின்றன.
இள நரை, பொடுகு, பூஞ்சைத்தொற்று போன்ற எல்லா வித தலைமுடி பிரச்சனைகளையும் போக்க மாதுளையில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உதவுகின்றன.
வழுக்கை தலையில் முடி வளர உதவுவதோடு, முடி வளர்ச்சிக்கு தேவையான இரும்புச்சத்து, வைட்டமின் சி, துத்தநாகம் போன்ற சத்துக்களை கூந்தலுக்கு வழங்க மாதுளை உதவுகிறது.
மாதுளம் பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு :
மாதுளம் பழம் என்பது ஊட்டச்சத்துக்களின் கூடாரம் என்றே கூறலாம்; மாதுளையில் வைட்டமின்கள், தாதுக்கள், உணவு முறை நார்ச்சத்துக்கள், கொழுப்பு அமிலங்கள், ஜீரோ கொலஸ்ட்ரால் போன்றவை அடங்கியுள்ளன. இதில் உள்ள கலோரிகளும் மிகக்குறைவே!