அறிமுகம் :

மல்லிகை பூக்களின் மணம் மட்டும் அல்ல அதன் மருத்துவ குணங்களும் கூட ஆச்சரியம் அளிக்க கூடியவை தான்.
மல்லிகை பூ :

மல்லிகை பூவை கொண்டு செய்ய கூடிய வைத்தியங்கள் பலவும் உண்டு. மல்லிகை பூக்கள், இலைகள், வேர்ப்பகுதி என எல்லாவற்றையும் மருத்துவத்துக்கு பயன்படுத்துகிறார்கள்.
குடற்புழுக்கள் :
வயிற்று பூச்சிகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் குடலில் உண்டு. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இதை வெளியேற்ற வேண்டும். இல்லையெனில் அவை குடல் சுவர்களை அரிக்க செய்யும்.

செரிமானத்தன்மையை குறைக்கும் ஊட்டச்சத்து மிக்க உணவாக இருந்தாலும் உணவிலிருக்கும் ஊட்டச்சத்தை குடற்புழு உறீஞ்சுவதால் ஊட்டச்சத்து பற்றாக்குறை உண்டாகும்.
தாய்ப்பால் கட்டை உடைக்கும் :
குழந்தை பிறந்த இரண்டு மாதங்கள் வரை குழந்தை குறைவான அளவு தாய்ப்பாலே போதுமானதாக இருக்கும். அப்போது தாய்ப்பால் சுரப்பு அதிகமாக இருக்கும். இந்த காலத்தில் தான் பெரும்பாலும் தாய்ப்பால் கட்டு அதிகமாக இருக்கும். இதை வெளியேற்றாவிட்டால் காய்ச்சல் மார்பு வலி போன்றவை வரக்கூடும்.

இந்த பாலை குழந்தைக்கும் கொடுக்க முடியாது. அப்போது மல்லிகைப்பூக்களை அரைத்து இலேசாக நீர் விட்டு மார்பகத்தில் பற்றுபோட்டால் வலி குறைந்து பால் சுரப்பு வெளியேறி விடக்கூடும். மார்பகத்தில் நீர்க்கட்டிகள் இருந்தாலும் அதை குணப்படுத்த கூடும்
நரம்பு தளர்ச்சி :
ஊட்டச்சத்து பற்றாக்குறையாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் அது நரம்புகளுக்கு நன்மை செய்யாது. சத்தில்லாத உணவுகள் எடுத்துகொள்ளும் போது நரம்புகள் தளர்ச்சியடையும். நரம்பு மண்டலத்தில் பாதிப்பை உண்டாக்கும்.

நரம்புத்தளர்ச்சியை குணப்படுத்த மல்லிகைப்பூவை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி காயவிடவும்.
சருமத்தில் புண்கள் வியாதிகள்:
சரும நோய்கள் தீவிரமாக இருந்தால் மல்லிகைப்பூ செடியை வேரோடு பிடுங்கி வேரை மண் போக சுத்தம் செய்து காயவிடவும். அதை இடித்து பொடியாக்கி பிள்ளை வளர்த்தி என்னும் வசம்பை பொடித்து சேர்த்து அதில் எலுமிச்சம்பழச்சாறு விட்டு தேய்த்து குளித்துவந்தால் சரும வியாதிகள் எவ்வளவு தீவிரமாக இருந்தாலும் குணமாகும்.

சருமத்தில் கட்டிகள், புண்கள், வடுக்கள் இருந்தால் மல்லிகைப்பூவிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை அதன் மேல் தடவி வந்தால் நாள்பட்ட தழும்புகளாக இருந்தாலும் மறைய கூடும். சரும எரிச்சல் அரிப்பு இருந்தாலும் குணப்படுத்தும். பிரசவக்கால தழும்புகளையும் போக்கும்.
சிறுநீரக பிரச்சனை :
மல்லிகைப்பூக்களை கொண்டு சிறுநீரக கற்களையும் கரைக்கும் தன்மை கொண்டவை. சிறுநீரக கோளாறு, சிறுநீரக எரிச்சல், நீர் சுளுக்கு, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவற்றையும் மல்லிகையை கொண்டு குணப்படுத்தலாம்.

மல்லிகைப்பூவை நிழலில் உலர்த்தி பொடித்து வைத்து காஃபி டீக்கு மாற்றாக மல்லிகைப்பூ டீ குடித்து வந்தால் சிறுநீரக கோளாறுகள் நிவர்த்தியாகும்.
தலைவலி :
தலைவலி இருக்கும் போது அதிக நறுமணம் ஒவ்வாமையை குமட்டலை வலி உணர்வை தூண்டும் என்று சொல்வார்கள். ஆனால் மணம் மிக்க மல்லிகைப்பூக்கள்6 எடுத்து உள்ளங்கையில் கசக்கி நெற்றியி பூசி வந்தால் தலைவலி உபாதை குறையக்கூடும்.

தலையில் நீர் கோர்த்தல் ஒற்றைத்தலைவலி போன்ற பிரச்சனைகள் கொண்டிருப்பவர்கள் மல்லிகை எண்ணெயை இருப்பில் வைத்துக்கொண்டு வலி இருக்கும் போது தடவி வந்தால் வலிஅதிகரிக்காமல் தீவிரமாகாமல் தடுக்கலாம். இது வலி உணர்வை குறைக்கவும் செய்யும்.
கண்களுக்கு நன்மை :
பூ கண்களுக்கு சிறந்தது என்று பார்த்திருக்கிறோம். அதே போன்று மல்லிகைப்பூக்கள் தேநீரும் கண் கோளாறுகளை குறிப்பாக கண்களில் சதை வளர்வதை குறைக்கும். கண்களின் உஷ்ணத்தை தணிக்கும்.

கண்களில் எரிச்சலை போக்கவும் கூடியது. தலைவலி இருக்கும் போது கண் வலியும் கண் எரிச்சலும் இருக்கும். அப்போது நெற்றியின் இருபுறங்களிலும் மல்லிகைப்பொடியை பற்று போட்டால் கண் எரிச்சல் குணமாகும்.
எதிர்ப்புசக்தி அளிக்கும் :

மல்லிகை பூக்கள் உடலுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்க கூடியவை. அடிக்கடி உண்டாகும் தொற்று காய்ச்சலான சளி, இருமல் பிரச்சனைகளை தடுக்க கூடியது. உடலை போன்று மனதுக்கும் வலு கொடுக்கும்.மல்லிகையை தலையில் வைத்துகொண்டால் மன அழுத்தம் குறையும்.