அறிமுகம் :
கீரை வகைகள் அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்கு பல சத்துகளை தருகிறது. ஆனால் சில கீரைகளின் மகத்துவம் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. அப்படி பல பேருக்கு தெரியாமல் இருக்கும் கீரை தான் முடக்கத்தான் கீரை.
முடக்கு அறுத்தான் என்பதே மருவி முடக்கரு தான் என்றும் முடக்கறான் என்றும் அழைக்கப்படுகின்றது.
ஜலதோஷம் :
ஜலதோஷம் மற்றும் தலைவலியின் போது முடக்கத்தான் இலைகளை நன்கு கசக்கி, வெண்ணீரில் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி மற்றும் ஜலதோஷம் நீங்கும்.
தலைமுடி பிரச்சனை :
தலைமுடி எப்போது சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆனால் சிலருக்கு தலையில் பொடுகு வருவதினால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இப்பிரச்சனைகள் வராமல் இருக்க முடக்கத்தான் இலைகளினால் உற்பத்தி செய்யப்பட்ட எண்ணையை தலையில் தடவி வந்தால் இப்பிரச்சனை நீங்கும்.
புற்றுநோய் :
புற்று நோயாளிகளுக்கு உடலில் புற்று செல்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டியிருக்கும். அதன் அதிகரிப்பை தடுக்க முடக்கத்தான் கீரையை சாப்பிட வேண்டும். தொடந்து சாப்பிட்டு வந்தால் புற்று நோயின் கடுமை தன்மை குறையும்.
வாத பிரச்சனை :
முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் உடலில் இருக்கும் வாதத் தன்மை குறையும், உடலிலுள்ள அனைத்து மூட்டுகளின் வலியை போக்கும்.
காது வலி :
காலநிலை மாற்றங்களாலும், வேறு சில காரணங்களாலும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் காது வலி ஏற்படுகிறது.
காது வலி ஏற்படும் போது முடக்கத்தான் கீரையை நன்கு அரைத்து, சாறு போல் ஆக்க வேண்டும். அந்த சாற்றின் சில துளிகளை காதுகளுக்குள் விட்டால் காது வலி குணமாகும்.
மாதவிடாய் பிரச்சனை :
பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு முடக்கத்தான் நல்ல மருந்தாக இருந்து வருகிறது.
முடக்கத்தான் கீரையை நன்கு அரைத்து குழந்தை பெற்ற பெண்கள் அடிவயிறில் பூசி வந்தால் கருப்பையில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும்.
மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு முடக்கத்தான் கீரை மிகவும் நல்லது.
தோல் வியாதி :
தோல் வியாதிகளுக்கு முடக்கத்தான் கீரை நல்ல மருந்தாக இருந்து வருகிறது.
மேலும் சொறி, சிரங்கு போன்ற வியாதிகள் இருந்தால் முடக்கத்தான் கீரையை அரைத்து உடம்பில் தேய்த்தால் சில நாட்களில் சொறி, சிரங்கு போன்ற நோய்கள் குணமாகும்.
மூட்டு வலி :
முடக்கு வாத நோய் மூட்டுகளை முடக்கி வைக்கிறது. இந்த கீரை முடக்கு வாத நோயினை சரி செய்வதால் முடக்கத்தான் என பெயர் பெற்றது.
வாயு பிரட்சனை :
வாயு சமபந்தபட்ட பிரச்சனைகள் உடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டு வருவதன் மூலமாக நல்ல பலன் கிடைக்கும்.
பொடுகு :
பெரும்பாலானோர் பொடுகு தொந்தரவினால் அவதிப்படுகிறார்கள்.இவர்கள் முடக்கத்தான் இலையினை கொண்டு ஆட்டப்பட்ட எண்ணையயைவ தலைக்கு தேய்த்து வருவதன் மூலம் இதிலிருந்து விடுபடலாம்.
மூலம் :
நீண்ட நாட்கள் மலசிக்கல் மற்றும் நார் சத்து குறைவான உணவுகளினை சாப்பிடுவதாலும் மூலம் ஏற்படுகிறன்றது.
தினமும் சிறிதளவு முடக்கத்தான் கீரையினை பச்சையாக சாப்பிட்டு வந்தால் மூல நோய்க்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.