அறிமுகம் :
எண்ணற்ற வகையான பழங்கள் விளைகின்ற நமது நாட்டில், சாப்பிடுபவர்களுக்கு பல விதமான உடல் நோய்கள் பாதிப்புகளை நீக்கும் ஒரு பழமாக “அத்திப்பழம்” இருக்கிறது.

இந்த அத்திப்பழத்தை ஜூஸ் போட்டு அருந்தினாலும், உலரவைத்து வத்தல் பதத்தில் சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும். அந்த அத்திப்பழத்தினால் கிடைக்கும் பலவகையான நன்மைகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.
அத்திப்பழம் பயன்கள்

மூலம் :
மூலம் நோய் நாட்பட்ட மலச்சிக்கல் மற்றும் உஷ்ணம் நிறைந்த சூழல்களில் அதிகம் இருப்பதாலும், உலகின் வெப்பத்தை அதிபடுத்தும் உணவு பொருட்களை அதிகம் உண்பதாலும் ஏற்படுகிறது.

மூல நோயில் பல வகைகள் உண்டு. எந்த வகை மூல நோயாக இருந்தாலும் காய்ந்த அத்திப்பழங்கள் மற்றும் அத்திப்பழ ஜூஸ் அதிகம் சாப்பிட்டு வந்தால் நூலாம் விரைவில் குணமாகும்.
இதய நோய்கள் :
நமது உடலின் அனைத்து பாகங்களுக்கும் ரத்தத்தை பாய்ச்சும் பணியை செவ்வனே செய்யும் இதயம் ஆரோக்கியமாக இருக்க அத்திப்பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும்.

இதில் உள்ள பீனோல் மற்றும் ஒமேகா -6 வேதிப்பொருட்கள் இதயத்தை வலுப்படுத்தும் சக்தி கொண்டதாகும்.
மலச்சிக்கல் :
உணவுகளை சாப்பிட பின்பு சரியான அளவு நீர் அருந்தாமல் இருப்பது, இரவில் நெடு நேரம் கண் விழித்திருப்பது, சாப்பிட்டதற்கேற்ற உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படலாம்.

காய்ந்த அத்திப்பழங்களையோ அல்லது அத்திப்பழ ஜூஸ் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும்.
கொலஸ்ட்ரால் :
உடலில் நன்மை பயக்கும் கொழுப்புகள் அளவுக்கு அதிகமாக சேர்ந்து விடுவததை கொலஸ்ட்ரால் என்கின்றனர்.

இந்த கொலஸ்ட்ரால் பிரச்சனையை போக்க அத்திப்பழங்களை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.
இதிலுள்ள பெக்டின் எனப்படும் நார்ச்சத்து பொருள், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து கொலஸ்ட்ரால் அளவை சமப்படுத்துகிறது.
உடல் எடை :
நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உணவில் இருக்கும் கொழுப்பு, உடலில் சேராமல் தடுக்கப்படுகிறது.

அந்த நார்ச்சத்து அத்திப்பழத்தில் அதிகம் உள்ளது. எனவே அதை ஒரு நாளைக்கு ஒருமுறையாவது சில அத்திப்பழங்களை சாப்பிடுவது நல்லது.
புற்று நோய் :
அத்திபழங்கள் மற்ற எல்லா பாதிப்புகளையும் விட வயிற்றில் ஏற்படும் புண்கள், அமில சுரப்பு குறைபாடுகள் போன்ற்வற்றை சரி செய்வதில் சிறந்த செயலாற்றுகிறது.
பெருங்குடலில் தங்கியிருக்கும் சில நச்சுக்களால் நாளளவில் பெருங்குடலில் புற்று நோய் ஏற்பட காரணம் ஆகிறது.

அத்திப்பழங்களை தின்தோறும் சாப்பிட்டு வருபவர்களுக்கு குடலில் தங்கியிருக்கும் நச்சுகள் அனைத்தும் நீங்கி குடல் சுத்தமாகி, குடல் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
ரத்த அழுத்தம் :
நமது உடலில் ஓடும் ரத்தத்தில் பல வகையான உப்புகள் கலந்திருக்கின்றன.
அதில் சோடியம் உப்பின் அளவு அதிகமாகவும், பொட்டாசியம் உப்பின் அளவு குறைவாகவும் இருக்கும் போது ரத்த அழுத்தம் மற்றும் உயர் ரத்த அழுத்தம் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

அத்திப்பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வரும் நபர்களுக்கு ரத்தத்தில் இந்த உப்புகளின் அளவு சமநிலை பெற்று ரத்த அழுத்தம் பாதிப்புகளை குறைக்கிறது.
உடல் பலம் :
உடலில் சிலருக்கு வலுவில்லாமல் இருப்பதால் எத்தகைய வேலைகளிலும் அதிக நேரம் ஈடுபட முடியாமல் போகிறது.

உடல் பலம் பெற நினைப்பவர்கள் தினமும் இரவில் பசும்பாலில் சில காய்ந்த அத்திப்பழங்களை ஊற வைத்து காலையில் அப்பழங்களை சாப்பிட்டு அப்பாலை அருந்தினால் உடல் பலம் பெற தொடங்கும். நரம்பு சம்பந்தமான குறைபாடுகளும் நீங்கும்.
கல்லீரல் :
மது பழக்கம் கொண்டவர்கள் அதிகளவில் மதுவை அருந்துவதால் சில சமயங்களில் அவர்களின் கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு விடும்.

இந்த கல்லீரல் வீக்கத்தை போக்க சில அத்திப்பழங்களை வினிகரில் ஒரு வாரம் ஊறவைத்த பின்பு சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.
கல்லீரலில் சேர்ந்திருக்கும் போதை பொருட்களின் நச்சுக்களை நீக்கும்.
கண்பார்வை :
நமது உடலின் முக்கிய உறுப்புகளான கண்களின் பார்வை திறன் தெளிவாக இருக்க வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை மிகவும் முக்கியமாகும்.

அத்திப்பழங்களில் இந்த சத்துக்கள் அனைத்தும் அதிகம் இருக்கின்றன. எனவே அத்திப்பழங்களை வாரத்திற்கு இருமுறையாவது சாப்பிடுவது கண்பார்வை மேம்பட உதவும்.