அறிமுகம் :
மொச்சை கொட்டை வறட்சியான நிலங்களில் விவசாயம் செய்ய மிகவும் உகந்த பயிர் ஆகும். இது மொச்சை பயறு, லிமா பீன்ஸ், பட்டர் பீன்ஸ் என்ற பெயரிலும் அழைக்கபடுகிறது .

அவரை போன்று இருக்கும் இதன் தோலை உரித்தால் அதற்குள் இருக்கும் பருப்பே கொட்டை மொச்சையாகும். ஒரு காயில் இரண்டு முதல் நான்கு கொட்டைகள் சிறுநீரக வடிவத்தில் இருக்கும்.
மொச்சை கொட்டை வகைகள் :

மொச்சை கொட்டையில் வெள்ளை மொச்சை,கருப்பு மொச்சை,சிவப்பு மொச்சை, மர மொச்சை,நாட்டு மொச்சை என பல வகைகள் இருக்கின்றன. அதன் வகைக்கு ஏற்ப பல்வேறு வடிவம், அளவு, நிறங்களில் மொச்சை இருக்கும்.
மொச்சையில் உள்ள சத்துக்கள் :
மொச்சை கொட்டை நமது உடலுக்கு தேவையான புரதம், நார்சத்துகள், மினரல்ஸ் போன்றவற்றை அதிகமாக கொண்டிருக்கிறது.

மொச்சையில் டானின், டிரைப்சின் போன்ற வேதிபொருட்கள் இருப்பதால் சமைப்பதற்கு முன் ஊறவைத்து, மேற்கண்ட வேதிப்பொருட்களை நீக்க வேண்டும். அவித்தே உண்ண வேண்டும்.
மருத்துவ பயன்கள்

இதய ஆரோக்கியம் :
மொச்சைக் கொட்டையில் குறிப்பிட்ட அளவு நார்ச்சத்து, பொட்டாசியம், போலேட் மற்றும் சபோனின் போன்றவை உள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது.

மலச்சிக்கலைத் தடுக்கும் :
மொச்சையில் உள்ள கரையாத நார்ச்சத்து, சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. இதனால் மலச்சிக்கலுக்கான வாய்ப்பு குறைக்கிறது.

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மொச்சைக் கொட்டையை உணவில் சேர்த்து கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
புற்றுநோயை தடுக்கும் :

மொச்சைக் கொட்டையில் உள்ள நார்சத்து, குடலில் நச்சுப்போருட்களின் வெளிப்பாட்டைக் குறைப்பதன் மூலம் பெருங்குடல் அழற்சியைத் தடுக்கிறது. பெருங்குடல் பகுதியில் புற்று நோய் உண்டாக்கும் ரசாயனங்களைத் தடுக்கிறது.
செல்களை புதுப்பிக்கும்:
மொச்சைக் கொட்டையில் அதிக அளவு புரதச் சத்து உள்ளது. உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்த புரதம் உடலுக்கு மிகவும் அவசியம்.

புரதம் என்பது உடலில் உள்ள அணுக்கள் மற்றும் செல்களின் வளர்ச்சிக்கும் சேதம் ஏற்பட்டால் பழுது பார்க்கவும் தேவையான சத்தாகும்.
உடல் எடை :

மொச்சை கொட்டை உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து கலோரிகளை எரிக்கும். இதன் காரணமாக உடல் எடை வேகமாக குறையும்.
வாயுத்தொல்லையை தடுக்க :
பெரும்பாலோனார் மொச்சையை சாப்பிட்டால் வாயுத் தொல்லை ஏற்படும் என்ற காரணத்தினால் ஒதுக்கி வைக்கின்றனர்.

இதனால் மொச்சையை ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதில் மொச்சையை வேக வைக்கும் போது இஞ்சி, பூண்டு சேர்த்து சமைத்தால் வாய்வுத்தொல்லை ஏற்படாது.