அறிமுகம் :
பொதுவாக நார்ச்சத்து தேவைக்காக தேடித் தேடி நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வோம். ஆனால் அவகேடோவில் நார்ச்சத்து மிக அதிகம். அதனால் தினமும் இந்த பழத்தை எடுத்துக் கொள்ளும்போது நம்முடைய நார்ச்சத்து உட்கொள்ளல் அதிகமாகும்.
சத்து :
அவகோடா பழத்தில் அதிக அளவு நல்ல கொழுப்புகள்,நார்ச்சத்து, பொட்டாசியம்,மெக்னீசியம் போன்றவை நிறைந்து இருப்பதால் உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. இதனால் உடல் எடையை குறைக்கவும் பக்கவாதம், இதய நோய்கள் வராமல் தடுக்கவும், இப்பழத்தை அடிக்கடி எடுத்துக் கொள்வது சிறந்தது.
அழகு :
பலவிதமான அழகு சாதன பொருட்களில் இப்பழம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பழம் விட்டமின் சி,விட்டமின் இ நிறைந்துள்ளதால் சரும வளர்ச்சி, சருமத்தில் சுருக்கம் ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளை குறைக்கிறது. சரும செல்களை புதுப்பிக்கவும் வயது முதிர்வு தோற்றம் ஏற்படாமல் தடுக்கிறது.
எலும்பு :
தினசரி அவகேடோவை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அது வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். அதனால் தேவையற்ற ஸ்நாக்ஸ் மற்றும் சர்க்கரை உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க முடியும்.இந்த அவகேடோ எடையைக் குறைப்பதற்கு மட்டுமின்றி எடையை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உதவி செய்கிறது.
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் அனைத்து ஊட்டச்சத்துகளும் இந்த அவகோடா பழத்தில் நிறைந்துள்ளன.மூட்டு வலி எலும்பு தேய்மானம் அதிகம் இருப்பவர்கள் இப்பழத்தை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் இப்பழம் பிரச்சனைகளை குறைக்க செய்யும்.