அறிமுகம் :
உடலுக்கு அதிக நன்மை தரும் கீரைகளில் குப்பைக்கீரையும் ஒன்று. இது பெரும்பாலும் தரிசு நிலங்களிலும், குப்பை மேடுகளிலும்தான் வளருகிறது. இதற்கு முள்ளிக்கீரை என்ற பெயரும் உண்டு. இதன் தாவரப்பெயர் அமராந்தஸ் விரிடிஸ் ஆகும்.
குப்பைகள் அதிகம் உள்ள இடங்களில் செழித்து வளர்வதால் குப்பைக்கீரை என்ற பெயர் காரணம் ஏற்பட்டது.
நிறைந்திருக்கும் சத்துக்கள் :
குப்பை கீரையில் நார்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்து போன்றவை அதிக அளவில் உள்ளது.
மருத்துவ பயன்கள்
பசியை தூண்ட :
நன்றாக பசியைத் தூண்டும். குடலை ஆரோக்கியமாக பாதுகாத்து, மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும்.
குப்பைக் கீரையுடன் மிளகு, சீரகம் இரண்டையும் சேர்த்து, கஷாயமாக்கிக் குடித்தால், நன்றாகப் பசி எடுக்கும்.
புண்கள் ஆற :
இக்கீரையில் வைட்டமின் சி இருப்பதால் உடலில் ஏற்படும் புண்களை வேகமாக குணமாக்குவதற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.
உடல் எடை குறைய :
உடலில் தேவையில்லா கெட்டக் கொழுப்பைக் கரைத்து உடல் எடையை குறைக்க உதவும்.
இரத்த சோகை தடுக்க :
ரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்த சோகை ஏற்படாமல் பாதுகாக்கும்.
நரம்பு மண்டலம் வலுப்பெற :
கால்சியம் சத்தும், உப்பும் அதிகமாக இருப்பதால் கை, கால் நடுக்கம் குணமாகும், நரம்பு மண்டலமும் வலுபெறும்.
நரம்புத் தளர்ச்சியை நீக்க :
நரம்புத் தளர்சியைப் நீக்கும். வாதநோயை கட்டுப்படுத்தும். நரம்புத் தளர்ச்சி உடையவர்கள் குப்பை கீரையை சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
உடல் சூட்டை குறைக்க :
குப்பைக்கீரையுடன் பருப்பு சேர்ந்து கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.கீரைப்பொரியல் சளி, இருமலை போக்கும். சிறுநீர் நன்கு பிரியும்.
நெஞ்செரிச்சல் குணமாக :
ஒரு கைப்பிடி குப்பைக்கீரையுடன் இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள், அரை டீ ஸ்பூன் ஓமம் சேர்த்து நன்றாக காய்ச்சி அந்த சாற்றை பருகினால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
வீக்கத்தை குறைக்க :
உடலில் ஏதேனும் வீக்கம் ஏற்ப்பட்டால் குப்பைக்கீரையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் வீக்கம் குறையும்.
முகப்பரு மறைய :
உடலில் கட்டிகள், தழும்பு, மரு, முகப்பரு இருந்தால் அதன் மீது குப்பைக் கீரையை அரைத்து தடவினால் கட்டிகள் கரைந்துவிடும்.
குடல் புண்கள் குணமாக :
குப்பைக் கீரையுடன், துவரம் பருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால், குடல் புண்கள் குணமாகும்.
மூட்டுவலிக்கு :
குப்பைக்கீரை, முடக்கறுத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும்.
விஷமுறிவுக்கு :
விஷ ஜந்துக்களான பாம்பு மற்றும் தேள் கடிக்கு விஷ முறிவு மருந்தாக குப்பை கீரை விளங்குகிறது.
மலச்சிக்கலை தடுக்க :
குப்பை கீரையானது பசியைத்தூண்டும், குடலை சுத்தமாக்கும், மலசிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
கெட்ட கொழுப்புகள் கரைய :
குப்பை கீரையானது உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கெட்டக் கொழுப்பைக் கரைக்கும்.