அறிமுகம் :
ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற இரசாயனம் இல்லாத இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது. சருமத்தை முறையாக பராமரிப்பது நம்மை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
சன் ஸ்கிரீன்:
தினசரி வெளியில் செல்வதற்கு முன்பு சன் ஸ்க்ரீன் பயன்படுத்துவதை கட்டாயமாக்கி கொள்ளுங்கள். சன் ஸ்க்ரீன் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது. மாய்ஸ்சுரைசர் சருமப் புற்றுநோயைத் தடுக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. எனவே நல்ல தரமான மாய்ஸ்சரைசரை பயன்படுத்துங்கள்.
சூரிய ஒளியிலிருந்து குழந்தைகளின் சருமத்தைப் பாதுகாப்பது அவசியம் என்றாலும், ஆறு மாதங்களுக்குக் குறைவான குழந்தைகளுக்கு சன் ஸ்கிரீனை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை கலந்தாலோசியுங்கள்.
புகைப்பிடித்தல் :
புகைப்பிடிப்பது நம்முடைய சருமத்த்தை விரைவாக வயதானது போன்ற தோற்றத்தை அளிக்க முக்கியக் காரணமாகிறது.புகைப்பிடிப்பதன் காரணமாக தடிப்பு தோல் அழற்சி போன்ற சரும பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. எனவே உங்கள் சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்க புகைப் பிடிப்பதை தவிருங்கள்.
தோல் புற்றுநோய் சோதனை :
உங்கள் சருமம் ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்று அறிந்து கொள்ள குறிப்பிட்ட இடைவெளிகளில் தோல் புற்றுநோய் பரிசோதனையை செய்து கொள்வது நல்லது.இது சரும பிரச்சனைகள் இருந்தால் அதனை முன்கூட்டியே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க உதவும்.
சருமத்தை மென்மையாக கையாளுங்கள் :
முகம் கழுவும்போது சிலர் அழுக்குகளை நீக்குகிறேன் என்று சொல்லி, சோப்பு போட்டு, அழுத்தி தேய்ப்பது, நகங்களால் சொரிந்து தேய்ப்பது போன்றவற்றை செய்வார்கள். அது மிகப்பெரிய தவறு.
நம்முடைய சருமத்தை மென்மையாகக் கையாளுவது நமது அழகை மேலும் மெருகூட்ட உதவும்.வெதுவெதுப்பான நீரில் முகத்தை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ளவும். பின்னர் ஒரு லேசான கிளின்சரைப் பயன்படுத்தலாம்.
ஆரோக்கிய சருமமும் மன அழுத்தமும் :
மன அழுத்தத்தை சரிசெய்ய ஆரோக்கியமான வழிகளைக் கண்டறிவது நம்முடைய சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. சருமத் தடிப்புகள், தோல் அழற்சி போன்ற சில தோல் நோய்கள் இருந்தால் மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
மன அழுத்தம், முகப்பரு, அரிக்கும் தோலழற்சி, தடிப்பு தோல் அழற்சி போன்ற பல தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.