அறிமுகம் :
உலகெங்கிலும் இருக்கின்ற மக்கள் தங்களின் அன்றாட உணவு தயாரிப்பில் நல்லெண்ணெய் பயன்படுத்துகின்றனர். இந்த நல்லெண்ணெய் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவதாலும் அந்த நல்லெண்ணெய்யை மூலம் மனிதர்களுக்கு கிடைக்கும்.
இதயம் :
இதயம் காக்கும் நல்லெண்ணெய் நம் பாரம்பரிய உணவு பழக்கத்தில் தொன்றுதொட்டு இடம்பெற்று வந்து கொண்டிருக்கிறது. உடலுக்கு குளிர்ச்சியை அள்ளி தரும் இந்த நல்லெண்ணெயை அடிக்கடி உணவில் சேர்த்து வருவதால் ஏராளமான பிரச்சனைகளில் இருந்து நாம் பாதுகாப்பாக இருக்கலாம்.
புற்றுநோய் :
நல்லெண்ணெயில் போலேட் எனப்படும் கூட்டு வேதிப்பொருள் அதிகளவில் உள்ளது. மேலும் மக்னீசியச் சத்தும் நல்லெண்ணெயில் தேவைக்கு அதிகமான அளவிலேயே இருக்கின்றன. இந்த இரண்டு சத்துக்களும் குடல் மற்றும் ஈரல் பகுதிகளில் உண்டாகக்கூடிய புற்றுநோய்களை தடுப்பதில் பேருதவி புரிகிறது. அதனுடன் கால்சியம் சத்தும் நல்லெண்ணையில் அதிகமுள்ளது. இது வயிறு மற்றும் அவற்றுடன் தொடர்புடைய உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.
ரத்த ஓட்டம் :
உடல், மனம் உற்சாகமாக இருக்க உடலில் இருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் ரத்த ஓட்டம் சீராகவும், சரியான விகிதத்திலும் சென்றால் மட்டுமே நமது உடலும், மனமும் சுறுசுறுப்பாக இயங்கும். நல்லெண்ணெயில் அதீத செம்புச் சத்து மற்றும் ஜிங்க் சத்துக்கள் இருக்கின்றன. இதில் செம்புச்சத்து நமது உடலில் ரத்த அணுக்களின் உற்பத்திக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது.
எலும்புகளின் வளர்ச்சி :
நல்லெண்ணெயில் கால்சியம், செம்பு மற்றும் ஜிங்க் சத்து ஆகிய மூன்றும் சரியான அளவில் இருக்கின்றன. எலும்புகள் வலிமை பெறவும், வளர்ச்சி பெறவும் நல்லெண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். குறிப்பாக வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு நல்லெண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை கொடுப்பதால் அவர்களின் எலும்புகளின் வளர்ச்சி அதிகரிப்பதோடு வலிமையும் அதிகரிக்கிறது.
அதீத மன அழுத்தம் :
ஒரு சில மனிதர்களுக்கு காரணமற்ற அதிக படபடப்புத்தன்மை மற்றும் அதீத மன அழுத்தம் உண்டாகிறது. நல்லெண்ணெயில் இருக்கும் டிரோசின் எனப்படும் அமினோ அமிலங்கள் வேதிப்பொருள் நிறைந்துள்ளது. இந்த டிரோசின் எனப்படும் வேதிப்பொருள் செரட்டோனின் எனப்படும் ஒரு வேதிப்பொருளை நமது மூளையில் சுரக்கச் செய்து, உடலில் நன்மை செய்யும் என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களின் சுரப்பை அதிகரித்து, மனஅழுத்தம் மற்றும் பதட்டத்தை போக்கி மன அமைதி மற்றும் மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்துவதாக மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.