அறிமுகம் :
நாவல் பழம் மரம் ஒரு அற்புதம் நிறைந்த மரமாகும். இந்த மரத்தின் இலை, பட்டை, பழம், வேர், விதை என்று அனைத்துமே மருத்துவ பயன்களை பெற்றுள்ளது. மேலும் இந்த பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், தாமிரம், இரும்புச்சத்து, சோடியம் மற்றும் வைட்டமின் பி போன்ற சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது.மேலும் இவற்றில் உள்ள இரும்புசத்து இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது.
நீரிழிவு :
நாவல் பழத்தின் விதைகள் நீரிழிவு நோயை குணப்படுத்த சிறந்த மருந்து. இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ளவேண்டும்.பின் ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை என இரண்டு வேளைகளில் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்பட்டு விரைவில் குணமடையும்.
இதய தசைகள் :
பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயம் போல செய்து அதனுடன் தேன் அல்லது வெண்ணெய் கலந்து அளவோடு சாப்பிட்டால் மலட்டுத் தன்மை அகலும்.நாவல் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதய தசைகள் வலுவடைந்து, இதயம் தொடர்பான நோய்கள் குணமாகும்.
மருத்துவ குணம் :
மேலும் நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். மருத்துவ குணம் உள்ள பளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம் இந்த நாவல்பழம். ஏப்ரல் மாத மத்தியில் இருந்து நாவல் பழங்கள் சீசன் துவங்குகிறது.
மாதவிடாய் :
முற்றிய நாவல் மரத்தின் பட்டைகளை எடுத்து பட்டையை நன்கு நசுக்கி, அரை லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, பின் அந்த தண்ணீரை ஒரு டம்ளர் சுண்டக் காய்ச்சி, பின் ஆற வைத்து குடிக்கவேண்டும்.இவ்வாறு தினமும் இரண்டு வேளைகள் மற்றும் 10 நாட்கள் குடித்து வந்தால், பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது.