அறிமுகம் :
இந்தப் பழத்தில் ஒருவித வெறுக்கத்தக்க நாற்றம் அடித்தாலும், ஒரு சுளையைச் சாப்பிடத் தொடங்கியதும் முழுப் பழத்தையும் சாப்பிட வேண்டும் என்ற ஆசையைத் தூண்டிவிடும். அந்த அளவிற்கு இந்த துரியன் பழம் மிகவும் சுவையாக இருக்கும். பார்ப்பதற்கு பலாப் பழத்தை போலவே வெளியே கரடு முரடான முள் தோற்றம் கொண்டிருக்கும். இந்த துரியன் பழம் அதிக மருத்துவ குணங்கள் கொண்ட பழம் வகையாகும். அதிலும் இந்த துரியன் பழம் மட்டுமின்றி, இலைகளும் பல மருத்துவ பலன்களை கொடுக்கிறது.
தூக்கமின்மை :
தூக்கம் தொடர்பான செயல்பாடுகளிலும், வலிப்பு நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் அத்தியாவசியமான செயல்பாட்டை செய்யும் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலத்தை துரியன் பழம்பெற்றுள்ளது. ஆகவே தூக்கமின்மையால் பாதிக்கப்படும் நபர்கள் துரியன் பழத்தை எடுத்துக்கொள்ளும் போது நல்ல ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்த வழிவகுக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி :
அதிகளவு வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது என்பதால் துரியன் பழம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றது. ஆகவே நாம் இதனை உட்கொள்ளும் போது நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராட உடலுக்கு வலிமை தருகிறது.
விந்தணுக் குறைபாடு :
ஆண்கள் மேற்கொள்ளும் ஒருசில பிரச்சனைகளின் முடிவு தான் விந்தணு குறைபாடு. கருவுறுதலில் பிரச்சனையை ஏற்படுத்தும் இந்த விந்தணு குறைபாடு, ஆரோக்கியமற்ற சில வாழ்க்கை முறையின் காரணமாகவும் ஏற்படுகிறது. நாளமில்லா சுரப்பிகள் போதிய அளவில் டெஸ்டோஸ்டிரோன் எனும் ஹார்மோன் உற்பத்தி செய்யாவிட்டால், விந்தணுக் குறைபாடு ஏற்படும். ஆகவே ஆண்கள் துரியன் பழத்தை சாப்பிட்டால், விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இரத்த சோகை பிரச்சனை :
இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்களுக்கு துரியன் பழம் மிகவும் சிறந்த பலமாக பயன்படுகிறது. அதாவது இந்த துரியன் பழத்தில் இரும்பு மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகளவு இருப்பதால், இதனைச் சாப்பிட இரத்த சோகையை குணமாகும்.
எலும்புகள் வலுப்பெற :
உடலில் எலும்புகள் வலுப்பெற அவசியம் கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நமது உடலில் கால்சியம் குறையும் போது பலவீனமான எலும்புகளுக்கு வழிவகுக்கிறது. ஆகவே இது போன்ற சமயங்களில், எலும்புகளை பலப்படுத்த துரியன் பழம் பயனுள்ளதாக அமைகிறது. துரியன் பழத்தில் உள்ள கால்சியம் சத்து எலும்புகள் வலுப்பெற உதவிபுரிகிறது.