அறிமுகம் :
பொதுவாக நட்ஸ் என அழைக்கப்படும் விதை வகையை சேர்ந்த முந்திரி, பாதாம் போன்ற உணவுகள் அதிக ஆரோக்கிய சத்துக்களைக் கொண்டவை. எனவே மக்கள் பல்வேறு உணவுகளிலும், பலகாரங்களிலும் இவற்றை சேர்ப்பதைப் பார்க்க முடியும். எனவே முந்திரியும் கூட ஒரு ஆரோக்கியமான உணவாகவே பார்க்கப்படுகிறது.
சத்துக்கள் :
முந்திரியில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற சத்துக்கள் உள்ளன. இவ்வளவு சத்துக்கள் உள்ளபோதும் முந்திரி சில சமயங்களில் ஆபத்தை விளைவிக்கலாம் என சில ஆய்வுகள் கூறுகின்றன.
சிறுநீரகத்தில் பாதிப்பு :
அதிகமாக முந்திரியை சாப்பிடும்போது அது உங்களுக்கு ஒவ்வாமை அல்லது மலச்சிக்கலை ஏற்படுத்தலாம். அதிக அளவு முந்திரியை சாப்பிடும்போது அது சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். மேலும் நாள்பட்ட உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
இதய ஆரோக்கியம் :
முந்திரி பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்தல், இதய ஆரோக்கியம், உடல் எடையைக் குறைத்தல் போன்றவற்றிற்கு முந்திரி உதவுகிறது.
உடலில் ஏற்படும் வீக்கம் :
அவை உடலில் சேதத்தை ஏற்படுத்தும் செல்களை தடுக்க உதவுகின்றன, மேலும் இவை உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன, உடலில் ஏற்படும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு முந்திரி உதவுகிறது. பச்சையாக இருக்கும் முந்திரியை விட வறுத்த முந்திரியானது அதிக ஆக்ஸிஜனேற்ற திறனைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இரத்த சர்க்கரை :
முந்திரிப் பருப்புகள் உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இவை இரத்த சர்க்கரை அளவில் நேர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றன.எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு பயனளிக்கும் உணவாக முந்திரி உள்ளது.