அறிமுகம் :
இந்த அரிசியில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு அரிசியை சாப்பிடுவதால் ஒவ்வொரு வகையான உடல் நலன் சார்ந்த பலன்களை நாம் பெறலாம். அந்த வகையில் மிகவும் பாரம்பரியமான கருப்பு கவுனி அரிசி குறித்தும், அந்த அரிசியை நாம் உணவாக செய்து சாப்பிடுவதால், நமக்கு ஏற்படக்கூடிய உடல் நலன் சார்ந்த நன்மைகள்.
கல்லீரலில் ஆரோக்கியம் :
இந்த அரிசியில் அதிகம் நிறைந்துள்ள ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் எனப்படும் ஊட்ட பொருட்கள், நமது இரத்தத்தில் இருக்கின்ற பிரீ ராடிகல் எனப்படும் மூலக்கூறுகளால் ஏற்படுகின்ற நச்சுக்களை நீக்குகின்றது. மேலும் மனிதர்களின் கல்லீரலில் அதிகளவில் சேர்ந்திருக்கின்ற நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலில் ஆரோக்கியமான செயல்பாட்டை உறுதி செய்கிறது.
நீரிழிவு நோய் :
நீரிழிவு நோய் தங்களுக்கு ஏற்படக்கூடாது என நினைப்பவர்கள், அவ்வப்போது கருப்பு கவுனி அரிசியில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டும் எனவும் இந்த அரிசியின் மேல் இருக்கும் கருப்பு நிற பொட்டுகளில் குளுக்கோஸ் சத்து அதிகம் இருப்பதாகவும், இந்த அரிசியில் இருக்கின்ற நார்ச்சத்து இந்த குளுக்கோஸ் சத்துக்களை உடலில் சேர செய்து, ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை சீரான அளவில் இருக்குமாறு செய்து நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
உடல் எடை :
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கருப்பு கவுனி அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அவ்வப்போது சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வகை அரிசியில் நார்ச்சத்து மட்டுமே அதிகம் உள்ளதால் இந்த அரிசியை கொஞ்சம் சாப்பிட்டாலே அதிகளவு உணவு சாப்பிட்ட உணர்வைத் தந்து தேவைக்கு அதிகமாக உண்ணும் பழக்கத்தை தடுத்து நிறுத்துகிறது. இதனால் உடலில் கொழுப்புகள் சேர்ந்து உடல் எடை கூடுவதை தடுக்கிறது.
ஆஸ்துமா நோய் :
ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு நுரையீரல்களில் அதிகளவு மியூக்கஸ் எனப்படும் சளி சுரப்பு ஏற்படும் பொழுது அவர்களால் சரிவர சுவாசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. கருப்பு கவுனி அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடுவதால் இந்த அரிசியில் உள்ள அந்தோசயனின் சத்துக்கள் ஆஸ்துமா நோயாளிகளின் நுரையீரலில் அதிகளவு சளி சுரப்பு ஏற்படாமல் தடுத்து, அவர்களுக்கு சிறிது நோய் நிவாரணம் அளிப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.