மங்குஸ்தான் பழம் :
மரங்கள் மனிதர்கள் உண்பதற்கு சுவையான பழங்களை தருகின்றன. அந்த வகையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விளையும் பழமாகவும், அதிக மக்களால் சாப்பிடப்படும் ஒரு பழமாகும் மங்குஸ்தான் பழம் இருக்கிறது.
மங்குஸ்தான் பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
உடல் எடை கூட :
நவீன மருத்துவ அளவுகோலின் படி ஒவ்வொரு மனிதரும் அவரின் உடல் உயரத்திற்கு ஏற்ற அளவில் உடல் எடை பெற்றிருக்கவேண்டும் என அறிவுறுத்துகிறது. ஒரு சிலர் சராசரி உடல் எடைக்கு கீழாக இருக்கின்றனர். இத்தகையவர்கள் சீக்கிரம் உடல் எடை கூட்ட அடிக்கடி மங்குஸ்தான் பழங்களை சாப்பிட வேண்டும். இதில் இதில் இருக்கும் சத்துகள் உடல் எடை அதிகரிக்க உதவுகிறது.
மூலம் :
மூலம் நோய் நாட்பட்ட மலச்சிக்கல் மற்றும் உஷ்ணம் நிறைந்த சூழல்களில் அதிகம் இருப்பதாலும், உலகின் வெப்பத்தை அதிபடுத்தும் உணவு பொருட்களை அதிகம் உண்பதாலும் ஏற்படுகிறது. மூல நோயில் பல வகைகள் உண்டு. எந்த வகை மூல நோயாக இருந்தாலும் மங்குஸ்தான் பழங்கள் மற்றும் மங்குஸ்தான் பழ ஜூஸ் அதிகம் சாப்பிட்டு வந்தால் மூலம் விரைவில் குணமாகும்.
கல்லீரல் :
மது பழக்கம் கொண்டவர்கள் அதிகளவில் மதுவை அருந்துவதால் சில சமயங்களில் அவர்களின் கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு விடும். இந்த கல்லீரல் வீக்கத்தை போக்கவும், அதில் சேர்ந்திருக்கும் நச்சுகளை நீக்கவும் தினமும் சில மங்குஸ்தான் பழங்களை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும். கல்லீரலில் சேர்ந்திருக்கும் போதை பொருட்களின் நச்சுக்களை நீக்கும்.
கண்பார்வை :
நமது உடலின் முக்கிய உறுப்புகளான கண்களின் பார்வை திறன் தெளிவாக இருக்க வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை மிகவும் முக்கியமாகும் மங்குஸ்தான்பழங்களில் இந்த சத்துக்கள் அனைத்தும் அதிகம் இருக்கின்றன. எனவே மங்குஸ்தான் பழங்களை தினந்தோறும் அல்லது வாரத்திற்கு இருமுறையாவது சாப்பிடுவது கண்பார்வை மேம்பட உதவும்.