நட்சத்திரப் பழம் :
ஸ்டார் ஃப்ரூட் என்னும் நட்சத்திரப் பழத்தை பலர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. இது சமவெளியில் விளையக் கூடிய பழம். மலைப்பிரதேசங்களில் விளையக் கூடிய பழம். தமிழில் விளிம்பிப்பழம் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக நாம் செல்லக் கூடிய பழக் கடைகளுக்கு இவை பெரும்பாலும் விற்பனைக்கு வருவதில்லை.
நீர்ச்சத்து கொண்ட பழம் :
கொடைக்கானல், ஊட்டி போன்ற மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா சென்ற மக்கள் கட்டாயம் இதை ருசித்து பார்த்திருப்பீர்கள். அதிக நீர்ச்சத்து கொண்ட பழம் தான். கலோரி சத்து மிக, மிக குறைவு. அதேபோல கொழுப்புச்சத்து குறைவாகவே உள்ளது. விட்டமின் பி, விட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச்சத்து, எண்ணற்ற ஆண்டிஆக்சிடண்டுகள் நிறைந்த இந்த பழத்தை இனி கடைகளில் கேட்டு வாங்கி சாப்பிடுங்கள். ஒருவேளை நீங்கள் செல்லும் கடைகளில் இல்லை என்றாலும், எங்கு கிடைக்கும் என்று விசாரித்து வாங்கி விடவும்.
நார்ச்சத்து கொண்டது :
எண்ணற்ற ஊட்டச்சத்துக்களை கொண்டது இந்த ஸ்டார் பழம். குறிப்பாக நார்ச்சத்து இதில் சற்று அதிகம். நார்ச்சத்து அதிகமிருப்பதால் நம் உடலில் செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல் பிரச்சனை தீருவதற்கு உதவியாக இருக்கும். நன்மை தரக் கூடிய நிறைய நுண்ணுயிர்கள் வளர வகை செய்யும்.
இதய ஆரோக்கியம் :
நட்சத்திர பழத்தில் சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் உள்ளன. இது நம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இந்த தாதுக்கள் இதயத்துடிப்பை சமநிலையில் வைக்க உதவுகிறது. இதிலுள்ள கால்சியமும் இதயத்திற்கு மிகவும் அவசியம். ஏனெனில் கால்சியம் சரியான அளவு இருந்தால் உங்களுக்கு இதய பிரச்சனைகளான பக்கவாதம் மற்றும் மாரடைப்பு வராது. நட்சத்திர பழம் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி நீர்ச்சத்தை சமநிலையில் வைக்கிறது.