ஜாதிபத்திரி மருத்துவம்:
இந்த உலகில் ஏராளமான மூலிகை பொருட்கள் இருக்கின்றன. அதிலும் நமது நாட்டில் தான் வியக்கவைக்கும் ஏராளமான மூலிகை செடிகள் வளர்கின்றன. அவற்றில் ஒன்று தான் ஜாதிபத்திரி. இது மிகவும் நல்ல வாசனையாக இருக்கும். இதன் காரணமாகவே உணவின் சுவை மற்றும் மனத்தை அதிகரிக்க ஜாதிபத்திரையை சிறிதளவு பயன்படுத்துவார்கள். மேலும் ஜாதிபத்திரியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதால் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணத்தை வழங்குகிறது.
ஊட்டச்சத்துக்கள்:
100 கிராம் ஜாதிபத்திரில்
கலோரிகள் – 475
பைரிடாக்சின் – 0.160 மில்லி கிராம்
ரிபோப்ளவின் – 0.448 மில்லி கிராம்
தைமின் – 0.312 மில்லி கிராம்
புரோட்டீன் – 6.71 கிராம்
கொழுப்பு – 32.38 கிராம்
நார்ச்சத்து – 20.2 கிராம்
போலேட் – 76 மைக்ரோ கிராம்
நியசின் – 1.350 மில்லி கிராம்
விட்டமின் சி – 21 மில்லி கிராம்
சோடியம் – 80 மில்லி கிராம்
பொட்டாசியம் – 463 மில்லி கிராம்
கால்சியம் – 252 மில்லி கிராம்
காப்பர் – 2.467 மில்லி கிராம்
இரும்பு சத்து – 13.90 மில்லி கிராம்
மக்னீசியம் – 163 மில்லி கிராம்
மாங்கனீஸ் – 1,500 மில்லி கிராம்
பாஸ்பரஸ் – 110 மில்லி கிராம்
ஜிங்க் – 2.15 மில்லிகிராம்
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க:-
ஜாதிபத்திரியில் உள்ள மாங்கனீஸ் உடலில் உள்ள கெட்ட நச்சுக்களை அலசி ஆராய்ந்து முழுமையாக வெளியேற்றுகிறது, இதனால் நமது இரத்த ஓட்ட மண்டலங்கள் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகிறது. மேலும் ஜாதிபத்திரியில் உள்ள இரும்பு சத்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகளவு உற்பத்தி செய்ய பயன்படுகிறது. ஆகவே உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க நினைப்பவர்கள் ஜாதிபத்திரியை உணவில் சேர்த்து சொல்வதன் மூலம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம்.
பசியை தூண்டும் மருந்து:
உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், பசி என்கிற உணர்வே இல்லாதவர்கள், சரியாக சாப்பிடாத குழந்தைகள் ஆகியவர்களுக்கு ஜாதிபத்திரி சிறந்த மருந்தாகும். அதாவது ஜாதிபத்திரியில் உள்ள ஜிங்க் பசியை தூண்டும் பொருளாக செயல்படுகிறது. எனவே ஜாதிபத்திரியை உணவில் சேர்த்து வந்தால் பசி ஏற்பட்டு நேர நேரத்துக்கு சரியாக சாப்பிடுவார்கள்.
மன அழுத்தம் குறைய:
இப்போது உள்ள காலகட்டத்தில் பலவிதமான காரணங்களினால் மன அழுத்த பிரச்சனை ஏற்படுகிறது. இந்த மன அழுத்தம் நீங்க ஜாதிபத்திரியில் உள்ள விட்டமின் பி உதவுகிறது. மேலும் இவற்றில் உள்ள நியசின், தைமின் மற்றும் ரிபோப்ளவின் போன்றவை மன அழுத்தத்தை குறைத்து நம் மனதில் உள்ள பயத்தை போக்குகிறது.
தூக்கமின்மை நீங்க:
ஜாதிபத்திரி தூக்கமின்மை பிரச்சனைக்கு சிறந்த சிகிச்சையினை அளிக்கின்றது. அதாவது இவற்றில் உள்ள மக்னீசியம் நரம்புகளை அமைதிப்படுத்தி செரோடோனின் ஹார்மோனை சுரக்க செய்கின்றது.
இருமல் சரியாக:
இப்போதெல்லாம் அனைத்து காலங்களிலும் திடீர் திடீர் என்று காய்ச்சல், இருமல், தும்மல், சளி இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது இவற்றை குணப்படுத்த ஜாதிபத்திரியை பயன்படுத்தி கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் பிரச்சனை சீக்கிரம் குணமாகும்.