கலங்குட் கடற்கரை :
கலங்குட் அல்லது கலாங்குட் கோவாவில் உள்ள கிராமம் ஆகும். இது வடக்கு கோவாவில் உள்ளது. இது கடற்கரைக்குப் பெயர் பெற்ற ஊர் ஆகும். இது கோவாவின் உச்ச சுற்றுலா பருவம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் மே கோடை காலத்தில் இருக்கும்.
பருவமழையின் போது குறிப்பாக சூன் முதல் செப்டம்பர் வரை, கடல் அலைகள் கடினமான இருப்பதால், இக்காலத்தில் கலங்குட் கடற்கரையில் நீச்சல் தடை செய்யப்படுகிறது. கலங்குட்டில் அதிக உணவகங்களும் கடைகளும் உள்ளன.
கடற்கரைகளின் ராணி” என்றும் அழைக்கப்படும் கலங்குட் கோவாவின் முதன்மையான கடற்கரையாகும். கோவாவில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் இது மிகவும் வணிகமயமானது. அதன் அதீத புகழ் காரணமாக, உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளையும் பேக் பேக்கர்களையும் கலங்குட் கடற்கரை அழைக்கிறது.
தபால் மற்றும் மருத்துவ வசதிகள் :
மேலும் கடற்கரை ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. கடற்கரை குடிசைகளால் நிறைந்துள்ளது மற்றும் நிறைய கிளப்புகள் கடற்கரையில் திறக்கப்படுகின்றன. கடற்கரையில் ராக், பாப் பீட் நிகழ்ச்சிகள், திறந்தவெளி நடனங்கள் மற்றும் விழாக்கள் உட்பட பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
ஒரு தபால் அலுவலகம், வங்கிகள், அந்நிய செலாவணி அலுவலகங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் போன்ற அனைத்து நவீன வசதிகளையும் வழங்குகிறது.
தங்கு விடுதிகள் :
கடற்கரைகளில் ஓரங்களில், ஓய்வு எடுக்கும் படுக்கைகள் உள்ளன். இவற்றை உபயோகிப்பதற்கு, சில நேரங்களில் 2 மணி நேரத்திற்கு 200 முதல் 300 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் குடில்களில் ஹோட்டல் உடன் சேர்ந்தது.
இவற்றில் உணவருந்தும் பட்சத்தில், ஓய்வு எடுக்கும் படுக்கைகள் உபயோகிப்பதற்கு தனிக் கட்டணம் எதுவும் இல்லை. ஓய்வு எடுக்கும் படுக்கைகள் குடைகளின் கீழ் உள்ளதால், வெயிலின் தாக்கம் இல்லை.
விளையாட்டுகள் :
கலங்குட் கடற்கரை அருகில் அதிக தங்கு விடுதிகள் உள்ளன. இங்குள்ள விடுதிகளில் 1500 ரூபாய் முதல் வாடகைக்கு கிடைக்கின்றன. கலங்குட் கடற்கரையில் தண்ணீர் விளையாட்டுகள் உள்ளன. இங்கு உள்ள தண்ணீர் விளையாட்டுகள் வான்குடை மூலமாக பறப்பது(பாராசெய்லிங்), தண்ணீர் வண்டி(ஜெட் ஸ்கிங்) ஆகும்.
கலங்குட் கடற்கரை குளிப்பதற்கு உகந்த கடற்கரை ஆகும். இங்கு பாறைகள் இல்லை. கடலில் தத்தளிக்கும் சுற்றுலா பயணிகளைக் காப்பற்ற உயிர் காக்கும் படை உள்ளது. உயிர் காக்கும் படை ஜீப்களில் ரோந்து செல்கிறது. உயிர் காக்கும் படை மாலை 6.15 மேல் இல்லை. கோவா கடற்கரையில் ராட்சச அலைகள் இல்லாததால், குளிப்பதற்கு உகந்த கடற்கரையாக உள்ளது.
குளிப்பதற்கு உகந்த கடற்கரை :
கண்டோலிம், பாகா கடற்கரைகளுக்கு நடுவே கலங்குட் கடற்கரை அமைந்துள்ளது. கலங்குட்டில் இருந்து எளிதாக இரு சக்கர வாகனம் மூலம் சாலை வழியாக கண்டோலிம், பாகா கடற்கரைக்கு செல்லலாம். கலங்குட் கடற்கரை குளிப்பதற்கு உகந்த கடற்கரை ஆகும். இங்கு பாறைகள் இல்லை.