அறிமுகம் :
பெருஞ்சீரகம்ஒரு நல்ல மனம் நிறைந்த மூலிகை. இதன் மலர்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பெரும்பாலான உணவில் இந்த பெருஞ்சீரகம்ம் சேர்க்கப்படுகிறது. பெருஞ்சீரகத்தில் இருந்து கிடைக்கப் படும் எண்ணை மருத்துவ குணங்கள் நிறைந்தது. இது பெரும்பாலும் தமிழர்களால் பின்பற்றப் படும் சித்த வைத்தியத்தில் பயன்படுத்தப் படுகிறது.
பெருஞ்சீரகத்தில் நிறைந்துள்ள சத்துக்கள் :
இதில் வைட்டமின் C சத்து அதிகம் உள்ளது. இதில் நார் சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ், செம்பு, பாஸ்பரஸ் மற்றும் ப்போலேட் சத்துக்கள் நிறைந்துள்ளது. கால்சியம், இரும்பு மற்றும் நியாசின் சத்துக்களும் இருக்கின்றது.
பெருஞ்சீரகத்தால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள் :
உடலுக்கு மட்டுமல்லாது, பெருஞ்சீரகம் சருமம் மற்றும் தலை முடி பராமரிபிற்கும் பெரிதும் உதவுகின்றது. இதில் அதிகம் ஆக்ஸிஜனேற்றம் இருப்பதால், சருமத்திற்கு தேவையான போஷாக்கை பெற உதவுகின்றது. உங்கள் சருமத்திற்கு பெருஞ்சீரகம் உதவுகின்றது
பெருஞ்சீரகத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அதிக அளவில் இருப்பதால் முகத்தில் ஏதாவது பக்டீரியா மற்றும் வைரஸ்களால் ஏற்படும் பிரச்சனைகளை எளிதாக போக்க உதவும். மேலும் இதனால் உங்கள் சருமம் நல்ல தெளிந்த, சீரான தோற்றத்தை பெறுகின்றது.
இரத்த சோகையை குணப்படுத்தும் :
பெருஞ்சீரகத்தில் இரும்பு மற்றும் ஹிஸ்டிடெயின் என்று அழைக்கப்படும் அமினோ அமிலம் இருக்கின்றது. இது ஹீமோகுளோபின் (செந்நிற இரத்த அணுக்கள்) உற்பத்தியாக உதவுகிறது. ஹீமோகுளோபினுக்குத் தேவையான முக்கியப் பொருள் இரும்பு. இதனால் உடலில் உங்களுக்கு இரத்த சோகை ஏற்பட்டிருந்தால், அதனை எளிதில் குணப்படுத்த பெருஞ்சீரகம் உதவும்.
ஜீரணத்தை சீர்படுத்தும் :
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏதாவது அஜீரண பிரச்சனை ஏற்பட்டிருந்தால் இந்த பெருஞ்சீரகம் அதனை குணப்படுத்தும். இதில் உங்கள் உடலுக்குத் தேவையான எண்ணை சத்து இருப்பதால் செரிமான சாறுகள் மற்றும் நொதிகள் வயிற்றில் உற்பத்தியாக உதவுகிறது. இதனால் உங்கள் வயிற்றில் ஏதாவது புண், அல்லது அஜீரண பிரச்சனை இருந்தால் அதனை எளிதாக குணப்படுத்திவிடும்.
மாதவிடாயை சீர்படுத்தும் :
இன்று பெரும்பாலான பெண்கள் பல காரணங்களால் மாதவிடாய் ஏற்படுவதில் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதற்கு சரியான தூக்கமின்மை, விரைவாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை முறை, தவறான உணவு பழக்கம், மன அழுத்தம் மற்றும் உடலில் ஏற்படும் சீரற்ற மாற்றங்களே காரணம். எனினும், பெருஞ்சீரகம் உங்கள் மாதவிடாய் பிரச்சனைகளை சீர்படுத்தி சரியான இடைவேளையில் ஏற்பட உதவுகிறது.
தாய்பால் அதிகம் சுரக்க உதவும் :
தாய்பால் கொடுக்கும் பெண்கள் பெருஞ்சீரகத்தை உணவில் சேர்த்து பயன்படுத்தி வந்தால், சீராக தாய்பால் சுரக்கும். இதனால் குழந்தைக்கும் தேவையானத் தாய்பால் கிடைக்கும். பெருஞ்சீரகம் தாய்பால் அதிக அளவில் சுரக்க உதவுகிறது. இது தாய் மற்றும் சேய், இருவருக்கும் நல்ல ஆரோக்கியத்தைப் பெற உதவுகிறது.