அறிமுகம் :
அனைவருக்குமே இஞ்சி சாற்றில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது என்று தெரியும்.
இஞ்சி சமையலில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்க பயன்படுவது மட்டுமின்றி, பல பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த :
இஞ்சியில் உள்ள ஆன்டி-டயாபடிக் தன்மை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மூளை தொடர்பான பிரச்சனைகளுக்கு :
இஞ்சி ஜூஸைக் குடித்து வந்தால், மூளையில் புரோட்டீன் அளவு அதிகரித்து, மூளையின் ஆரோக்கியம் மேம்படும்.
இப்படி புரோட்டீன் அளவு அதிகரித்தால், மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.
புற்றுநோய்:
புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், இஞ்சியை ஜூஸ் செய்து குடித்து வாருங்கள். குறிப்பாக ஆண்கள் பருகினால், புரோஸ்டேட் புற்றுநோய் வராது.
செரிமானக் கோளாறுகளுக்கு :
இஞ்சி வயிற்றுப் பிரச்சனைகளான செரிமானமின்மை, பசியின்மை, வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சலில் இருந்து நிவாரணம் தருவதால், இஞ்சியை ஜூஸ் தயாரித்து அடிக்கடி பருகி வந்தால், இரைப்பைக் குடல் புற்றுநோய் வரும் அபாயம் குறைவதோடு, வராமலும் தடுக்கப்படும்.
இதய ஆரோக்கியத்திற்கு :
இஞ்சி இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுவதோடு, உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்து, சீராக பராமரிக்க உதவும். இதனால் இதய ஆரோக்கியமும் மேம்படும்.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க :
நோயெதிர்ப்பு சக்தியின்றி இருப்பவர்கள், அடிக்கடி காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றினால் அவஸ்தைப்படுபவர்கள், இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலிமையடைந்து, உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கலாம்.
நரம்பு மண்டலம் பாதுகாக்க :
குளிர் ஜுரம் அல்லது குளிரானால் நடுங்கும்போது இஞ்சி ஜூஸை குடித்தால் உடலுக்கு தேவையான சூட்டை அளித்து நடுக்கத்தை கட்டுபடுத்தும். மன அழுத்தம், நடுக்கம்,நரம்புத் தளர்ச்சி ஆகியவைகளுக்கு இந்த இஞ்சி ஜூஸ் நல்ல தீர்வை அளிக்கிறது.
நரம்பு மண்டலத்தை நலமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. ஜீரண மண்டலத்தை நன்றாக செயல்பட வைக்கிறது.