முகவுரை :
காய்கள் பெரும்பாலானவை உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கிறது. அப்படியான காய்களில் பலரும் விரும்பி சாப்பிடும் ஒரு காயாக வாழைக்காய் இருக்கிறது.
இந்த வாழைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
வாழைக்காய் பயன்கள்
சர்க்கரை வியாதி :
வாழைக்காய் உடலில் இருக்கும் ரத்த செல்களில் குளுகோஸ் அதிகம் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது.
வாழைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது.
புற்று நோய் :
புற்று நோய் என்பது ஒரு கொடுமையான வியாதி. அதிலும் வயிற்றில் வருகிற பெருங்குடல் புற்று ஒருவருக்கு மிகுந்த வேதனையை தரக்கூடிய ஒரு புற்று ஆகும்.
வாழைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும்,நச்சுக்களையும் வெளியேற்றுகிறது.
எலும்புகள் :
வாழைக்காயில் எலும்புகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் தேவையான வைட்டமின், கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இவைகள் எலும்பிற்கு போதிய பலம் தந்து எதிர்காலத்தில் மூட்டு வலி, ஆஸ்டியோ போரோஸிஸ் ஆகிய எலும்பு தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது.
உடல் எடை குறைக்க :
வாழைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதினால் உடலின் தசைகளில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைப்பதில் பேருதவி புரிகிறது.
மலச்சிக்கல் :
மலச்சிக்கல் இருப்பவர்கள் வாழைக்காய் சாப்பிடுவது நல்லது. வாழைக்காய் இருக்கும் நார்சத்து மற்றும் ஸ்டார்ச் சத்து குடல்களை சுத்தப்படுத்தி,அதன் இயக்கத்தை அதிகப்படுத்துகிறது.மேலும் மலத்தை இலகுவாக்கி,எளிதில் வெளியேற்றி மலச்சிக்கலை போக்குகிறது.
அதீத பசி :
வாரம் இருமுறை சற்று பழுத்த நிலையில் இருக்கும் வாழைக்காயை சமைத்து சாப்பிடுவதால் உடல் அதிகம் பருமன் ஆவதை தடுக்க முடியும்.
அதிக அளவில் எடுக்கும் பசி உணர்வை கட்டுப்படுத்தி, குறைவாக உணவை உட்கொள்ளும் நிலையை ஏற்படுத்தும்.
இதயம் :
வாழைக்காயில் இருக்கும் பொட்டாசியம் சத்து உடலில் இருக்கும் நரம்புகளில் இறுக்கத்தன்மை ஏற்படாமல் தடுக்கிறது.
ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர வாழைப்பழத்தில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது.
இதய நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க வாழைகாய்களை அதிகம் சாப்பிடலாம்.
கண்கள் :
கண்பார்வை நலமாக இருப்பது அனைவருக்கும் அவசியமாகும். வாழைக்காயில் வைட்டமின் எ அதிகம் நிறைந்திருக்கிறது.
இது கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் விழிப்படலம், கருவிழி ஆகியற்றின் நலத்தையும் மேம்படுத்துகிறது.
சுறுசுறுப்பு :
வாழைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அடிக்கடி வாழைப்பழம் சமைத்து சாப்பிடுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு, உற்சாகம் நிறைந்திருக்கும்.
மூளை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கச் செய்வதில் வாழைப்பழம் உதவுகிறது.