அறிமுகம் :
இயற்கையாக கிடைக்கும் பழ வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே நம் ஆரோக்கியத்திற்கு எந்தவகையான குறையும் ஏற்படாது.
அதிலும் சில வகை பழங்களில் உள்ள சத்துக்கள் நம் உடலில் ஏற்படும் பலவகையான பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. இந்த பட்டியலில் சப்போட்டா பழமும் அடங்கும்.
இனிப்பான சுவையையும், அழகான தோற்றத்தையும் கொண்ட இந்த சப்போட்டா பழ ஜூஸின் பயன்களை பற்றி இந்தப் பதிவின் மூலம் சற்று விரிவாக காண்போமா…
தேவையான ஆற்றலை பெற :
சப்போட்டா ஜூஸில் குளுக்கோஸ் சத்தானது அதிக அளவு இருப்பதால் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது.
இதில் உள்ள வைட்டமின் ரத்த நாளங்களை சீராக வைக்கவும்,ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை தடுக்கவும் பயன்படுகிறது.
கொலஸ்ட்ராலை குறைக்க :
நம் உடலில் இருக்கும் கொழுப்பு சத்தை குறைப்பதற்கு சப்போட்டா ஜூஸ் ஒரு இயற்கை மருந்தாக உள்ளது. தினந்தோறும் சப்போட்டா ஜூஸ் குடித்து வந்தால் இதயம் சம்பந்தமான பாதிப்புகள் நீங்கும்.
ஆரம்பநிலை காசநோய் குணமடைய :
காச நோயினால் பாதிக்கப்பட்ட ஆரம்ப காலத்திலேயே தினம்தோறும் சப்போட்டா பழ சாருடன், ஒரு நேந்திரன் பழமும் சாப்பிட்டு வந்தால் காச நோய் சில நாட்களில் குணமடையும்.
சீதபேதி குணமாக :
உடல் உஷ்ணம் ஏற்படும் சமயத்தில் ரத்தத்துடன் கலந்த பேதி உண்டாகும். இதனை சரிசெய்ய சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்து மூன்று நாட்கள் தொடர்ந்து பருகி வர வேண்டும். இப்படி செய்து வந்தால் உடல் உஷ்ணமானது குறைந்து சீதபேதி நிற்கும்.
பித்தம் நீங்க :
சிலருக்கு பித்தத்தினால் அடிக்கடி தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதனை நீக்க சப்போட்டா பழத்தை சாப்பிட்டு பின்னர் ஒரு ஸ்பூன் சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் நீங்கும்.
சாதாரண காய்ச்சல் குணமாக :
சப்போட்டா பழச்சாறை குடித்துவிட்டு, சிறிது சுக்கு, சித்தரத்தை பொடி, கொஞ்சம் கருப்பட்டி, இவைகளை ஒன்றாக சேர்த்து பொடியாக்கி தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சி குடித்துவர சாதாரண காய்ச்சல் குணமாகும்.
சளி பிரச்சனை நீங்க :
சப்போட்டா பழத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் சளி குணமாகும். நாளடைவில் இருமல் தொல்லையிலிருந்தும் விடுபடலாம்.
கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பெற :
ஒல்லியான தேகத்தை உடையவர்கள் நல்ல கட்டுக்கோப்பான உடலை பெற சப்போட்டா கொட்டைதூள், தோல் நீக்கிய சப்போட்டா பழத்துடன் 4 டீஸ்பூன் பால் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த விழுதுடன் ஒரு ஸ்பூன் வெள்ளரி விதை பவுடரை சேர்த்து குளிப்பதற்கு முன்பு முழங்கை, முழங்கால், விரல் போன்ற பகுதிகளில் நன்றாக மசாஜ் செய்துவிட்டு பின்பு குளித்தால் பொலிவு கிடைப்பதோடு கட்டுக்கோப்பான உடலையும் பெறமுடியும்.