முகவுரை :
சௌ சௌ, தமிழகத்தில் உள்ள பெரும்பான்மை மலைகள் மற்றும் மலை அடிவாரங்களில் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. கொடி வகையைச் சார்ந்த சௌ சௌ விதைகளை நிலத்தில் இட்டு, அவை முளைத்த பின் எடுத்து, வேறு இடங்களில் நட்டு வளர்க்கப் படுகின்றன.
பந்தலில் படரும் கொடிகளில் இருந்து, விதைகளை எடுத்து, நட்ட மூன்று மாதங்களில் பூக்கத் தொடங்கி, நான்காவது மாதத்தில் இருந்து, காய்த்து, ஓராண்டு வரை தொடர்ந்து காய்களைக் கொடுக்கும், தன்மை மிக்கது இந்த சௌ சௌ கொடி.
நிறைந்துள்ள சத்துக்கள் :
புரதம், வைட்டமின் C, கால்சியம், பொட்டாசியம் சத்துக்களுடன் நீர்ச் சத்தும் நிறைந்த சௌ சௌ காய்கள், சுவையான சமையல் உணவுப் பொருட்கள் தயாரிப்பில் மட்டுமல்ல, மனிதர்களுக்கு, சிறந்த வியாதி எதிர்ப்பு நிவாரணியாகவும், திகழ்கின்றன.
சௌ சௌ காயின் மருத்துவ நன்மைகள்
நரம்பு தளர்ச்சி :
உடல் தளர்ச்சிகளை போக்கி, தசைகளை வலுவாக்கி, நரம்பு தளர்ச்சி பாதிப்புகளை சரி செய்யும் ஆற்றல் மிக்கதாகத் திகழ்ந்து, வயிற்று நச்சுக்களை நீக்கி, உடலை சரியாக்கும் தன்மை கொண்டவை.
கருவுற்ற மகளிரிக்கு :
கருவுற்ற காலத்தில் சில பெண்களுக்கு, கை கால்களில் நீர் கோர்த்தது போன்ற வீக்கங்கள் ஏற்படும்.
இந்த வீக்கங்களை சரி செய்ய, சௌ சௌவை அடிக்கடி உணவில் சேர்த்து வர, வீக்கங்கள் வடிந்து விடும்.மேலும், கருவில் உள்ள மகவையும், வியாதிகளின் தொற்றுக்களில் இருந்து காக்கக் கூடியது, சௌ சௌ.
தைராய்டு பாதிப்புகள் நீங்க :
தைராய்டு சுரப்பிகளின் பாதிப்பால் ஏற்படும் கோளாறுகள் விலக, சௌ சௌவில் உள்ள தாதுக்களான, தாமிரம் மாங்கனீசு போன்ற சத்துக்கள் அரு மருந்துகளாக செயல் பட்டு, தைராய்டு பாதிப்புகளை உடலில் இருந்து விலக்கி, உடல் நலனை சரி செய்யும் ஆற்றல் மிக்கவை.
குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு :
சௌ சௌவில் உள்ள கால்சியம் சத்து, குழந்தைகளின் உடல் வளர்ச்சிகளை ஊக்கப் படுத்தி, அவர்கள் எலும்பு வளர்ச்சியை வலுவாக்கும்.
குழந்தைகள் உணவில் சௌ சௌவை சேர்த்து வர, குழந்தைகள் ஊட்டமும், உடல் நலமும் பெறுவர்.
புற்று வியாதியைத் தடுக்கும் :
சௌ சௌவில் உள்ள ஆற்றல் மிக்க வைட்டமின் வேதிப் பொருட்கள், புற்று வியாதிகளை ஏற்படுத்தும் கிருமிகளை, உடலினுள் நுழைய விடாமல் தடுப்பதில், ஆற்றல் மிக்கவையாகத் திகழ்கின்றன.
வயிற்றுக் கொழுப்புக் கரைப்பில் சௌ சௌ:
சிலருக்கு வயிறு மற்றும் இடுப்பில், அதிகமாகக் கொழுப்புகள் சேர்ந்து, நடக்கும் போதும், உட்கார்ந்து எழும் போதும், அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
இந்த பாதிப்புகளை சரி செய்து, அதிகப்படியாக வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்ற, சௌ சௌ சூப் உதவி செய்யும்.
மனச் சோர்வை போக்கும் :
சிலருக்கு, இள வயதிலேயே, உடலில், முகத்தில் சுருக்கங்கள் தோன்றி, வயது முதிர்ந்த தோற்றத்தை உண்டாக்கி, அவர்களுக்கு, மனச் சோர்வை அளித்து விடும்.
அவர்கள், உணவில் அடிக்கடி சௌ சௌவை சேர்த்து சாப்பிட்டு வர, முகம் மற்றும் உடலில் இருந்த சுருக்கங்கள் எல்லாம் விலகி, உடல் பொலிவு பெறும்.
சமையலில் சௌ சௌ :
இத்தகைய அற்புதப் பலன்கள் தரும் சௌ சௌவில் இருந்து வழக்கமாக வீடுகளில், சௌசௌ கூட்டு, சௌசௌ கார கறி, சௌசௌ துவையல் மற்றும் சௌசௌ பஜ்ஜி, அவியல், மோர்க்குழம்பு, சாம்பார் என்று பல பதார்த்தங்களைத் தயாரிக்கலாம்.