அறிமுகம் :
பாசிப் பயறு அல்லது மூங் டால் என்று அழைக்கப்படும் இவை (அறிவியல் பெயர்: விக்னா ரேடியாட்டா) இந்தியாவில் பிரபலமான பருப்புகளில் ஒன்றாகும். இது மருத்துவ குணங்கள் நிறைந்தது.
பாசிப் பயறு ஆரோக்கிய நன்மைகள்
ஊட்டச்சத்துக்கள் மிகுந்தது :
பாசிப் பயிறில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமங்கள் நம்பமுடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது.
ஊட்டச்சத்து விவரம் :
100 கிராம் பாசிப்பயறில் பின்வரும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
கலோரி: 347 kcal
கார்போஹைட்ரேட்: 62.62 கிராம்
கொழுப்பு: 1.15 கிராம்
புரதம்: 23.86 கிராம்
நார்ச்சத்து: 16.3 கிராம்
வைட்டமின் B6: 20% தினசரி மதிப்பில் (DV)
இரும்புச்சத்து: 6.74 மிகி (52% DV)
கால்சியம்: 132 மிகி (13% DV)
பொட்டாசியம்: 1246 மிகி (35% DV)
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது :
பாசிப் பயரில் பொட்டாசியம் மிக அதிகமாக உள்ளது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
மேலும், இரத்தக் கொழுப்பின் அளவைக் குறைக்க பாசிப் பருப்பு உதவும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
எனவே, பாசிப்பருப்பை வழக்கமாக உட்கொள்வது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த :
பாசிப் பருப்பு 41 என்ற குறைந்த கிளைசீமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. எனவே, இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை உடனடியாக உயர்த்தாது.
மேலும், பாசிப்பருப்பு டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.பாசிப் பருப்பை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இரத்த சோகை ஏற்படாமல் தடுக்க :
பாசிப் பருப்பு நிறைய இரும்புச் சத்தை கொண்டுள்ளது. எனவே, பாசிப் பருப்பை வழக்கமாக உட்கொள்வது இரத்த சோகையைத் தடுக்க உதவும்.
புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது :
பாசிப் பருப்பில் ஃப்ளோனாய்டுகள் போன்ற ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன.
இந்த ஆன்டிஆக்சிடன்ட்டுகள் புற்றுநோய் செல் உருவாவதற்கு எதிராக செயல்படுகின்றன.
எனவே, பாசிப் பருப்பை வழக்கமாக உட்கொள்வது புற்றுநோயின் அபாயத்தை குறைக்க உதவும்.
எடை இழப்பை ஊக்குவிக்கிறது :
பாசிப் பருப்பில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளன. அவை உங்களை நீண்ட நேரம் பசியின்றி வைத்திருக்க உதவுவதால் அதிகமாக கலோரிகள் எடுப்பதை தடுக்க உதவும்.
மேலும், உடல் கொழுப்புக்களைக் குறைப்பதன் மூலம் மூங் டால் உடல் எடையைக் குறைக்க உதவும் என ஆராய்ச்சிகள் கண்டுபிடித்துள்ளன.