தேனின் நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் :
இந்த உலகில், தேனினை விரும்பாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது; இதை உணவில் சேர்க்கும் பொழுது, இயற்கையாக கூடுதல் சுவையை உணவு பெறுகிறது; பிற எந்த ஒரு செயற்கை இனிப்பூட்டிகளும், தேன் வழங்கும் இச்சுவைக்கு நிகராக முடியாது. தேனை ஆங்கிலத்தில் Honey – ஹனி என்று வழங்குவர்.
தேனின் வகைகள் :
தேன் என்பது 80% சர்க்கரை மற்றும் 20% நீரை கொண்டது; தேனில் பல வகைகள் இருப்பதாக கூறப்படுகிறது; மிகவும் பிரபலமான தேனின் வகைகள் குறித்து கீழே காணலாம்
மனுகா பக்வீட் வைல்ட்ஃப்ளவர் அல்ஃபாஃபா ப்ளூபெர்ரி ஆரஞ்சு ப்ளாஸ்ஸம் க்ளோவர்
மேற்கூறிய தேனின் வகைகளில் மனுகா வகை தேன் தான், மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.
தேனின் நன்மைகள் :
தேனின் நன்மைகள்தேன் அற்புதமான நன்மைகளை வழங்குகிறது என்று முன்பே கூறியிருந்தோம்; தேன் வழங்கும் ஆரோக்கிய, சரும, கூந்தல் நன்மைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
தேன் வழங்கும் ஆரோக்கிய நன்மைகள் :
இயற்கையில் கிடைக்கும் வரப்பிரசாதமான தேன் அதிக நன்மைகளை வழங்கக்கூடிய ஒன்று; இரத்த கொழுப்பை கட்டுக்குள் வைக்க, இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களை தடுக்க என பல ஆரோக்கிய பயன்களை தேன் வழங்குகிறது.
தேன் மற்றும் எலுமிச்சையை சேர்த்து ஒரு கலவையாக உட்கொள்ளும் பொழுது, அது மேலும் அதிக பயன்களை அளிக்கும்; தேனையும் நீரையும் கலந்து உட்கொள்ளும் பொழுதும் அதிக நன்மைகள் கிடைக்கும்.
உடல் எடை குறைத்தல் :
தேனில் இருக்கும் இயற்கையான, தனித்துவமான இனிப்பு, உடல் எடையை குறைக்க உதவும் ஒரு சரியான உணவு ஆகும்; உணவு மற்றும் பானங்களில் சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்தினால், உடலில் பல நன்மைகள் ஏற்படும்.
இருமல் மற்றும் சளி :
சூடான எலுமிச்சை சாறு கலந்த நீர் மற்றும் தேன் கலந்த கலவை, சளித்தொந்தரவை குணப்படுத்தவும், தொண்டையில் ஏற்படும் நெரிசலை போக்கவும், நீர்ச்சத்து இழப்பை தடுக்கவும் பயன்படுகிறது. தேனை உட்கொள்வது, 2 நாட்களில் சளித்தொந்தரவை குறைக்க உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
நீரிழிவு நோய்/ இரத்த சர்க்கரை :
தேனினை உட்கொள்வது உடல் எடையை குறைக்கவும், சர்க்கரை நோயாளிகளின் உடலில் உள்ள இரத்த கொழுப்பை குறைக்கவும் உதவும். நீரழிவு நோய்க்கு எதிரான மருந்துகளை தேனுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால், அது சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக பலன்களை வழங்கும்.
காயங்கள்/ புண்கள்/ தீக்காயங்கள் :
காயங்கள் மற்றும் குறிப்பாக தீக்காயங்கள் ஆகியவற்றின் மீது தேனை தடவுவது, அவற்றில் காணப்படும் இறந்த, தேவையற்ற செல்களை நீக்கி, தழும்புகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்க உதவும் . இலேசான தீக்காயங்களை முதலில் தண்ணீரால் கழுவிய பிறகு, அதன் மீது நீங்கள் தேனை தடவலாம்.
தேன் காயங்களை குணப்படுத்தும் ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது; தேனின் காயங்களை குணப்படுத்தும் விகிதம் அதிகமாகவும் காணப்படுகிறது . காயங்கள் மீது தேனை தடவிய சிறிது நேரத்தில், நல்ல மாற்றங்கள் ஏற்படும் .
அல்சர் மற்றும் நாள்பட்ட காயங்களை குணப்படுத்தவும் தேன் உதவுகிறது.
கொலஸ்ட்ரால் :
இறந்த அல்லது தேவையற்ற செல்களின் பாதிப்பில் இருந்து, உடலை பாதுகாக்க தேன் உதவும்.
இதய ஆரோக்கியம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்த தேன் உதவுகிறது. உணவு முறையில் சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்துவது ஒரு புத்திசாலித்தனமான செயல் ஆகும்.
ஆற்றலை அதிகரிக்கும் :
தூய்மையான தேனில், என்சைம்கள், புரதங்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் ஆகியவை குறைந்த அளவே காணப்படும்; இது ஒருவரின் உடலுக்கு தேவையான ஆற்றல் அளவை சரிவர பங்களிக்க உதவுகிறது.
செயற்கையான இனிப்பூட்டிகளை காட்டிலும், இயற்கையான தேன் மிகவும் ஆரோக்கியமானது மற்றும் அதிக ஆற்றலை அளிக்ககூடியது.