அறிமுகம் :
இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் ஒன்றாக கரும்பு இருக்கிறது. கரும்பு தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பயிர் வகையாகும்.
மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள் கரும்பில் நினைத்து இருக்கிறது.
கரும்பு ஜூஸ் அதிகம் அருந்துவதால் மனிதர்களின் உடலுக்கு ஏற்படக் கூடிய மருத்துவ ரீதியான நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கரும்பு ஜூஸின் பயன்கள்
தோல் பளபளப்பு :
தங்களுக்கு வயதான முக தோற்றம் ஏற்படுவதை விரும்புபவர்கள் யாருமே இல்லை. வயது ஏற, ஏற உடலில் இருக்கும் செல்களின் வளர்ச்சி குறைந்து, முதுமைத் தோற்றம் ஏற்படவே செய்வதை தடுக்க முடியாது.
கரும்பு ஜூஸில் இருக்கும் ஆன்ட்டி – ஆக்ஸிடென்ட்ஸ், பிளேவனாயிட்ஸ், பினோலிக் கூட்டுப்பொருட்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தன்மையை கூட்டுகிறது. தோலில் ஒரு பளபளப்பு தன்மையை கொடுத்து உடலுக்கு இளமைத் தோற்றத்தைத் தருகிறது.
உற்சாக பானம் :
அதிக வெப்பத்தால் உடல் களைப்படைந்து விடுபவர்கள் உடனடியாக புத்துணர்ச்சி பெறுவதற்கு அருந்தவேண்டிய பானம் கரும்பு ஜூஸ் ஆகும்.
கரும்பு ஜூஸில் சர்க்கரை சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. இவை உடலில் சென்று ரத்தத்தில் இழந்த சக்கரை சத்துக்களை ஈடு கட்டி, உடல் உடனடியாக சுறுசுறுப்பு, உற்சாகம் அடைய உதவுகிறது.
கர்ப்பிணி பெண்கள் :
கருவுற்றிருக்கும் பெண்கள் அடிக்கடி அருந்த வேண்டிய சிறந்த பானமாக கரும்பு ஜூஸ் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இதில் போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி 9 சத்துகள் அதிகம் இருப்பதால், இவை குழந்தை குறைபாடுகளோடு பிறக்கும் நிலையை தடுக்கிறது.
மேலும் பெண்கள் கரும்பு ஜூஸை அடிக்கடி பருகி வந்தால், அவர்களின் கருப்பையில் கரு முட்டைகளை உற்பத்தி அதிகரித்து விரைவில் அப்பெண்கள் கருவுற உதவுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பற்சொத்தை நீங்க :
பற்களில் சொத்தை ஏற்பட்டவர்கள், சுகாதாரத்தை முறையாக பேணாதவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது.
உணவில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலும் இந்த வாய் துர்நாற்றம் உண்டாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு சிறந்த இயற்கை தீர்வாக கரும்பு ஜூஸ் இருக்கிறது.
கரும்பு பயிரில் நிறைந்திருக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்து பற்களின் எனாமலை வலுப்படுத்துகிறது.
பற்சொத்தை போன்றவை ஏற்படாமல் பற்களையும் ஈறுகளையும் பாதுகாக்கிறது. வாய் துர்நாற்றத்தையும் போக்குகிறது.
குழந்தைகளின் நோய் நீங்க :
பெப்ரில் குறைபாடுகள் என்பது வளரும் குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படும் ஒரு குறைபாடாக இருக்கிறது.
இக் குறைபாடு ஏற்பட்ட குழந்தைகள் அடிக்கடி அதிக உடல் உஷ்ணத்தை உண்டாக்கும் ஜூர நோய்களால் பாதிக்கப் படுவதும், அதனால் அவர்களின் உடலில் புரதச்சத்து இழப்பு அதிகரித்து, உடலை மிகவும் வலுவிழக்கச் செய்யக்கூடியதாகும்.
செரிமான திறன் மேம்பட :
பலருக்கும் சாப்பிட்ட உணவு முழுமையாக செரிமானம் அடையாமல் போவதற்கு காரணம் அவர்களின் வயிற்றினுள்ளே செரிமான அமிலங்களின் சுரப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் குறைபாடுகள் ஆகும்.
கரும்பு ஜூஸ் அடிக்கடி பருகுபவர்களுக்கு வயிறு மற்றும் குடல் சுத்தமாகிறது. மேலும் வயிற்றில் உணவு செரிமானத்துக்கு உதவும் அமிலங்களின் சுரப்பை அதிகப்படுத்தும்.
சிறுநீரக தொற்று நோய்கள் குணமாக :
சிறுநீரகம் சார்ந்த உறுப்புகளின் சுகாதாரத்தை முறையாக பேணாமல் இருந்தால் சிறுநீரக தொற்று வியாதிகள் உண்டாகின்றன.
இந்த நோய் ஏற்பட்டவர்கள் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகின்றனர். தினமும் இருவேளை கரும்புச் சாறில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து அருந்தி வந்தால் எத்தகைய சிறுநீரக தொற்று வியாதிகளும் வெகு விரைவில் குணமாக உதவும்.
நோய் எதிர்ப்பு திறன் வலுப்பெற :
நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிக வலுவாக இருப்பது அவசியம். கரும்புச்சாறு பருகுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பலம் பெறுகிறது.
இதில் நிறைந்திருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ரத்தத்தில் கலந்து நிணநீர் சுரப்பிகளில் வெளிப்படுத்தி, உடலை எளிதில் தாக்கக்கூடிய தொற்று வியாதிகள், சுரங்கள் போன்றவற்றை தடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.
குளுக்கோஸ் சத்து :
நமது உடலில் தசைகள் எப்போதும் வலுப்பெற்றிருக்க உடலில் குளுக்கோஸ் சத்து சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.
குளுக்கோஸ் சத்து குறையும் போது தசைகள் தளர்வடைந்து, உடல் பலவீனம் அடைகிறது. தினமும் கரும்புச் சாறு அருந்துவதால் உடலில் குளுக்கோஸ் அதிகம் கிடைத்து, தசைகள் வலுவடைந்து, நீண்ட நேரம் உடல் உழைக்கக்கூடிய பலத்தைத் தருகிறது.
நச்சுத்தன்மை நீங்க :
கரும்பு ஜூஸ் மாசுகளையும், நச்சுத்தன்மையை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் ஆற்றல் கொண்டதாகும்.
தினமும் காலையில் கரும்பு ஜூஸ் அருந்துபவர்களுக்கு உடலில் நச்சுத்தன்மை வருவது தடுக்கப்படுவதோடு, ஏற்கனவே இருக்கின்றன நச்சுகள் அனைத்தும் வியர்வை சிறுநீர் வழியாக வெளியேறி, உடலை தூய்மைப்படுத்துகிறது.