அறிமுகம் :

ஆவாரம் பூ வீட்டின் அருகில் கிடைக்கும் அற்புதமாக மூலிகை. ஆவாரம் பூ பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், அதிக மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ என்பது பழமொழி. இந்த பழமொழிகேற்ப அதிக மருத்துவ பயன்களை தருகின்றன.
மருத்துவக்குணங்கள் :

ஆவாரையின் இலை, பூ, காய், பட்டை, வேர் என அனைத்துமே மருத்துவக்குணங்களைகொண்டவை. உடலில் அதிகமாகும் சூட்டை குளிர்ச்சிபடுத்த உதவும். உடலில் உச்சந்தலையில் சூட்டை உணராமல் வைக்க ஆவார இலையை தலையில் போட்டால் போதுமானது. உச்சந்தலையில் சூடு இறங்காது. வறண்ட நிலங்களிலும் துளிர்விட்டெழும் ஆவாரை.
ஆவாரை துவர்ப்பு :

இதன் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு மருத்துவகுணங்களை கொண்டிருக்கிறது. ஆவாரை துவர்ப்புச்சுவையைக் கொண்டிருக்கிறது. அதனால் தான் ஆவாரை இருந்தால் சாவும் நெருங்காது அதாவது நோயால் நெருங்காது என்றார்கள் முன்னோர்கள்.
வயிறு வலி :

மாதவிடாய் காலத்தில் பெண்கள் அடி வயிறு வலியை அதிகம் சந்திப்பதுண்டு. அவர்கள் ஆவாரை இலையை எடுத்து வயிற்றில் கட்டிகொள்ள வேண்டும். மாதவிடாய் நாட்களில் தினமும் இரவு நேரத்தில் இப்படி கட்டிகொண்டால் வயிறு வலி நிச்சயம் குறையும்.
நீரிழிவு :

நீரிழிவை கட்டுப்படுத்த மாத்திரைகள், இன்சுலின் ஊசிகள் என்று பலவும் இருந்தாலும் கூட உணவு வகைகளிலும் கட்டுக்கோப்பாக இருக்கவேண்டும். அதோடு மருந்தே உணவாய் இருக்ககூடிய உணவு வகைகளையும் தவிர்க்காமல் எடுத்துகொள்ளவேண்டும். அந்த வகையில் ஆவாரை அற்புத மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் நீரிழிவுக்கான இயற்கை மருந்து என்றே சொல்லலாம்.
சிறுநீர் கடுப்பு :

கோடையில் அதிகம் சந்திக்கும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று சிறுநீர் கடுப்பு அல்லது சிறுநீர் போகும் போது எரிச்சல். கைப்பிடி அளவு ஆவாரம் பூவை எடுத்து இரண்டு டம்ளர் நீரிலிட்டு கொதிக்க வைத்து இனிப்புக்கு தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். வாரத்துக்கு மூன்று நாள் இதை குடித்துவந்தால் சிறுநீர்கடுப்பும் எரிச்சலும் விரைவில் மறையும்.