• Home
  • Contact
  • Translator
  • Benefits
  • Category
    • Benefits
    • Health
    • Beauty
Facebook Twitter Instagram
Tamilanwiki.ComTamilanwiki.Com
  • Home
  • Contact
  • Translator
  • Benefits
  • Category
    • Benefits
    • Health
    • Beauty
Home»Beauty»Kalyana Murungai Benefits in Tamil

Kalyana Murungai Benefits in Tamil

WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email

கிராமப்புறங்களில், வேலி ஓரங்களில் வளரும் கல்யாண முருங்கைக்கு எண்ணற்ற மருத்துவக் குணங்கள் உண்டு. சென்னை, மாதவரம் பால் பண்ணையை அடுத்தக் காட்டுப் பகுதியில் கல்யாண முருங்கை மரங்கள் நிறைய உண்டு.

பெண்களுக்கு குழந்தைப்பேறு :

இன்னொரு உசுரை உருவாக்குற பொம்மனாட்டிகளுக்கு இந்த மரம் சாமி கொடுத்த வரம். கன்னிப் பொண்ணுகளுக்கு மாதவிடாய் காலத்துல வவுத்து நோவு, உதிரப்போக்குனு நிறைய வலி இருக்கும். சிலருக்கு வரவேண்டிய நாள்ல மாதவிடாய் வராமக் கஷ்டப்படுத்தும். இது மாதிரியான பிரச்னை உள்ளவங்க கல்யாண முருங்கை இலையைக் கசக்கி சாறெடுத்து மாதவிடாய் வருவதற்கு முன்னாடி மூணு நாள், வந்ததுக்கு அப்புறம் மூணு நாள் காலையில வெறும் வயித்துல இந்தச் சாறைக் குடிக்கணும்.

குழந்தைப் பேறுக்கு இந்த மரம் ஒரு வரம்! இந்த மரத்து இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால் பெண்களுக்கு கருத்தரிப்பது தொடர்பான தடைகள் நீங்கி கருமுட்டை அதிக அளவில் உற்பத்தியாகும்.

இந்த மரத்தின் இலையை நறுக்கி, அதோடு வெங்காயம், தேங்காய் மற்றும் நெய் சேர்த்து வதக்கி அரைத்து ஒரு நாளைக்கு ஐந்து முறை சாப்பிட்டு வந்தால், நன்றாகத் தாய்ப்பால் சுரக்கும்.

இலையுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து பூசிக் குளித்தால், சொறி, சிரங்கு குணமாகும்.

சளி, வயிற்றுப் பூச்சித் தொந்தரவு உள்ள குழந்தைகளுக்கு இந்த இலையுடன் கல் உப்பை சேர்த்து அரைத்துக் கொடுக்க, வாந்தி வாயிலாகவும், காலைக்கடன் கழிக்கும்போதும் கிருமி, சளி வெளியேறிவிடும்.

இந்த இலைச்சாற்றை தொடர்ந்து அருந்தி வந்தால், உடல் பருமனும் குறையும். இதனுடைய பட்டை பாம்புக் கடிக்கு நல்ல மருந்து!’’ என கல்யாண முருங்கையின் மகத்துவங்களை விவரித்தார்.தோட்டத்துக்கு மட்டும் அல்ல… மக்களின் வாட்டம் நீக்கவும் கைகொடுக்கும் மகத்தான மரம் கல்யாண முருங்கை!

ஆண்மை பெருக்கும் கல்யாண முருங்கை :

சமீப வருடங்களாக குழந்தையின்மை பிரச்சனையில் பெண்களுக்கு இணையாக ஆண்களும் பல பிரச்சனைகளை கொண்டிருக்கிறார்கள். பெரிய குறைபாடு என்று இல்லாவிட்டாலும் தாம்பத்திய வாழ்க்கையில் நாட்டமின்மை, விந்தணுக்கள் வீரியம் குறைவும், ஆண்மை குறைவு என பலபிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.

ஆண்களின் இனப்பெருக்க மண்டலம் சீராக செயல்படவே அந்தகாலத்தில் உணவுகள் வழியாகவே இந்த குறைபாடில்லாமல் பார்த்துகொண்டார்கள். தற்போது மோசமான உணவு பழக்கங்களும் இந்த குறைபாட்டை அதிகரித்துவிட்டது.

உணவு வழியாக ஆண்மை பெருக பல மூலிகைகள் உண்டு. அதில் கல்யாண முருங்கையும் ஒன்று. கல்யாண முருங்கை இலையை எடுத்து வந்து தினசரி 3 எண்ணிக்கை வீதம் மிக்ஸியில் அரைத்து சாறெடுக்கவும். மாதுளை பழச்சாற்றில் கசகசாவை பொடித்து உடன் இந்த இலைச்சாறு சேர்த்து இனிப்புக்கு தேன் கலந்து குடித்தால் ஆண்மை பெருகும். தாம்பத்ய உறவிலும் ஆர்வம் உண்டாகும்.

தாய்ப்பால் சுரப்புக்கு கல்யாணமுருங்கை :

பிரசவத்துக்கு பிறகு குழந்தைக்கு தாய்ப்பால் சுரப்பில் பற்றாக்குறையில்லாமல் இருக்க கல்யாண முருங்கை எடுத்துகொள்ளலாம். முருங்கை இலை போன்று கல்யாண முருங்கை இலையையும் பொரியலாக்கி சாதத்தில் பிசைந்து சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பால் சுரக்கும்.

குழந்தைக்கு மூன்று மாதங்கள் தொடங்கும் போதே தாய்ப்பால் சுரப்பு குறையத்தொடங்கும். குழந்தை வளர்வதால் குழந்தையின் வயிற்றை நிரப்பும் அளவுக்கு தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கலாம்.

வாரம் மூன்று முறை இந்த கீரையை பொடியாக நறூக்கி நெய்விட்டு வதக்கி சாம்பார் வெங்காயம் தாளித்து தேங்காய்த்துருவல் சிறிது ( தேவையெனில் ) சேர்த்து வதக்கி சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

புழுக்களை வெளியேற்ற செய்யும் :

parasitic worm and food poisoning.

வயிற்றில் இருக்கும் பூச்சிகளை வெளியேற்ற கல்யாண முருங்கை உதவும். அதிலும் குழந்தைகளுக்கும் இதை கொடுக்கலாம். இயற்கையாகவே மாதம் ஒரு முறை இதை மருந்தாக கொடுக்கலாம். கல்யாண முருங்கை இலை சாற்றை 10 மில்லி அளவு எடுத்து வெதுவெதுப்பான நீர் கால் டம்ளரில் கலக்கி இனிப்புக்கு தேன் சேர்த்து கொடுத்தால் குழந்தைகள் குடித்துவிடுவார்கள்.

தொடர்ந்து இரண்டு நாள் காலை வேளையில் இதை கொடுத்து முதல் இரண்டு மணி நேரத்துக்கு வேறு எதையும் கொடுக்க கூடாது. பிறகு வயிற்றீல் இருக்கும் புழுக்கள் வெளியேறும். அன்றைய நாள் பத்திய சாப்பாடு போல் மோர் சாதம் மட்டுமே கொடுக்க வேண்டும். பெரியவர்களும் இதை குடிக்கலாம்.

சரும நோய்களை தீர்க்க :

சருமத்தில் சொறி, சிரங்கு போன்ற பிரச்சனைகள் இருக்கும் போது அதற்கு கை வைத்தியமாக மூலிகையை தேடும் போது இவை உங்களுக்கு உதவக்கூடும். அதிலும் குழந்தைகள் மண்ணில் விளையாடும் போது சருமத்தில் சொறி பிரச்சனையை அதிகமாகவே சந்திப்பார்கள்.

கல்யாண முருங்கை இலையை அரைத்து சாறை எடுக்கவும். இதில் மஞ்சளை அரைத்து சேர்த்து சொறி சிரங்கு என சரும பாதிப்பு இருக்கும் இடங்களில் தடவி விடவும். அவை உலர்ந்ததும் சருமத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி குளித்தால் சரும நோய் நீங்கும்.

கல்யாண முருங்கை இலை உணவாக :

இதை மருந்தாக அதிலும் தொடர்ந்து எடுப்பதாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனை அவசியம். அதே நேரம் இதை உணவாக எடுத்துகொள்வதன் மூலம் பக்கவிளைவில்லாத ஆரோக்கியம் கிடைக்கும்.

இதை அடையாக, சூப் போன்று செய்ய பார்த்தோம். இதை மாலை நேர சிற்றூண்டியாக வடை போன்றும் செய்து சாப்பிடலாம். கீரை வடை போன்று கல்யாண முருங்கை இலையையும் வடையில் சேர்த்து செய்யலாம்.

இதை உணவாக எடுத்துகொண்டாலே நெஞ்சில் இருக்கும் சளி கரைந்து வெளியேறக்கூடும். இனி கல்யாண முருங்கையை கேட்டு வாங்கி சாப்பிடுங்கள்.

breast milk childbirth cooking food masculinity periods skin allergy
Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Email
Previous ArticleTea Tree Oil Benefits In Tamil
Next Article Country Sugar Benefits in Tamil

Related Posts

Benefits For Ice Apple in Tamil

Benefits Drinks Fruits Health Juice Natural

Top 10 Places to Visit at Goa in Tamil Part 1

Beach Boat Ride Falls Islands Natural Places Swimming Tourist

Megamalai Famous Touriest Places

Falls Hills Natural Places Temple Tourist

Brief Information About Kothagiri

Falls Hills Natural Places Temple Tourist
Translate
Advertisment
Categories
  • Beauty (31)
  • Benefits (137)
    • Cereals (12)
    • Drinks (5)
    • Fruits (33)
    • Juice (27)
    • Leaves (22)
    • Plants (5)
    • Vegitables (28)
    • Yam (6)
  • Cooking (42)
    • Briyani (2)
    • Chicken (1)
    • Food (4)
    • Mutton (1)
    • Non Veg (2)
    • Veg (4)
  • Drawings (2)
    • Pencil Drawing (1)
    • Watercolor Painting (1)
  • Health (145)
  • History (2)
  • Natural (164)
  • Places (41)
    • Beach (10)
    • Boat Ride (11)
    • Church (23)
    • Falls (17)
    • Hills (11)
    • Islands (10)
    • Market (9)
    • Swimming (10)
    • Temple (36)
    • Tourist (39)
  • Stories (19)
    • Hindu (19)
    • History (19)
    • Kamba Ramayanam (19)
Facebook Twitter Instagram Pinterest Vimeo YouTube
  • Home
  • Benefits
  • Health
  • Natural
  • Beauty
© 2023 TamilanWiki.Com. All Rights Reserved

Type above and press Enter to search. Press Esc to cancel.