• Home
  • Contact
  • Translator
  • Benefits
  • Category
    • Benefits
    • Health
    • Beauty
Facebook Twitter Instagram
Tamilanwiki.ComTamilanwiki.Com
  • Home
  • Contact
  • Translator
  • Benefits
  • Category
    • Benefits
    • Health
    • Beauty
Home»Beauty»How To Reduce Body Heat Naturally

How To Reduce Body Heat Naturally

WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email

உடல் உஷ்ணம் :

உலகம் முழுக்க மக்கள் இந்த உடல் உஷ்ண பிரச்சனையை எதிர்கொள்ளவே செய்கிறார்கள். உடல் வெப்பநிலை என்பது சீராக இருக்கும் வரை உடலில் பாதிப்பு நேராது. பொதுவாக ஒருவருக்கு உடலின் வெப்பநிலை 36.5 முதல் 37.5 டிகிரி செல்சியஸ் வரம்புகளுக்கு இடையில் உள்ளது. உடல் வெப்பநிலைக்கு ஏற்றவாறு இல்லாமல் அதிக வெப்பத்தை கொண்டிருப்பதே உடல் உஷ்ணம் என்கிறார்கள்.

உடல் உஷ்ணம் என்பது காய்ச்சலை குறிக்கும் என்று நினைக்க வேண்டாம். அவ்வபோது உடலுக்குள் அனல் அடிக்க தொடங்கும். காய்ச்சல் இல்லாத இது உடல் உஷ்ணத்தை குறிக்கும்.

உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது,

  • உடலில் உஷ்ணம்,
  • கண்களில் எரிச்சல்,
  • வயிற்றில் அசெளகரியம்,
  • புண்கள்,
  • அமிலத்தன்மை அதிகரிப்பது,
  • வாயு

போன்ற செரிமான பிரச்சனைகளை உண்டாக்க கூடும். இது ஏன் உண்டாகிறது மற்றும் இதை எப்படி தவிர்ப்பது என்று பார்க்கலாம்.

உள்ளங்கால்களை நனைத்தல் :

உள்ளங்கால்களை குளிர்ந்த நீரில் நனைப்பதால் உடல் குளிர்ந்துவிடுமா என்று கேட்கலாம். ஆனால் உண்மையில் இது நல்ல பலன் கொடுக்கும். அகலமான பாத்திரத்தில் மிதமான நீர் விட்டு (தேவையெனில் ஐஸ் க்யூப் சிலதும் சேர்க்கலாம்) இதில் இரண்டு கால்களையும் சேர்த்து அரை மணி நேரம் வரை மூழ்க வைக்கவும்.

உடலை குளிர்விக்கும் ஆற்றல் தண்ணீருக்கு உள்ளது. உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்க இவை உதவும் என்பதால் உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும் போது 20 நிமிடங்கள் வரை உங்கள் கால்களை நீரில் நனைத்து வைக்கவும்.

​உடல் உஷ்ணம் :

எதனால் உடல் உஷ்ணம் உண்டாகிறது என்று சரியான காரணத்தை சொல்ல முடியாது. ஏனெனில் தீவிரமான வெப்பநிலையில் உடல் இருக்கும் போது, போதுமான நீரை காட்டிலும் மிக குறைவாக உடல் பெறுவது, அதிக கடினமான உணவு, மசாலா உணவுகளை மட்டுமே தொடர்ந்து பெறுவது என எல்லாமே உடல் உஷ்ணத்தை உண்டாக்க கூடியவை தான். இந்த உஷ்ணம் வரும் போது என்ன செய்யலாம் என்பதை தான் பார்க்க போகிறோம்.

​வெந்தய தேநீர் :

உடல் உஷ்ணமாக இருக்கும் போது டீ, காபி, பால், சத்துபானங்கள் போன்றவை தவிர்க்க வேண்டியது அவசியம். அதற்கு மாறாக வெந்தயத்தை கொண்டு தேநீர் தயாரித்து குடிக்கலாம். வெந்தய தேநீர் குடிக்கும் போது உடலில் இருந்து வியர்வை வெளியேறக்கூடும். பிறகு உடல் குளிர்ச்சியை அடையும். உங்களுக்கு சூடாக குடிக்க விருப்பமில்லையென்றால் அதை ஆறவைத்து ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து குடிக்கலாம்.

வெந்தயம் உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை வெளியேற்றி உடல் உஷ்ணத்தை குறைக்க செய்யும்.

இளநீர் :

இளநீருக்கே உரித்தான குளிர்ச்சி உடலுக்கு கிடைக்கும். இளநீர் உடலுக்கு உடனடி ஆற்றல் பானமாக உள்ளது. இது புத்துணர்ச்சி தரும் பானமாக செயல்படுகிறது. இளநீரில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் வெப்பநிலையை மாற்றி உஷ்ணத்தை தணிக்கும். இளநீர் குடிப்பது இரண்டு விதமான நன்மைகளை உடலுக்கு அளிக்கும். இது உடலுக்கு உண்டான நீரிழிப்பை தடுக்கும். உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

​புதினா தேநீர் :

புதினா இலைகள் உடலுக்கு குளிர்ச்சியூட்டும் தன்மை கொண்டவை. வைட்டமின் சி நிறைந்த புதினா இலைகள் உடலுக்கு ஆற்றலும் தரக்கூடியவை. ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து புதினா இலைகள் அரை கைப்பிடி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

சில நிமிடங்கள் கழித்து இலைகளின் சாறுகள் முழுக்க இறங்கி இருக்கும். பிறகு அதில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம். உடல் உஷ்ணத்தால் கண்களில் எரிச்சல் வயிற்று வலி போன்றவற்றை தடுக்கும்.

​நீர்ச்சத்துநிறைந்த உணவுகள் :

வெளியில் விலை அதிகமுள்ள நீர்ச்சத்து மிக்க உணவுகள் தேவை என்றில்லை. முள்ளங்கி, புடலங்காய், வெள்ளாரிக்காய், செள செள, காலிஃப்ளவர், முட்டை கோஸ், நூக்கல் என காய்கறிகள் பழங்களில் தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி போன்றவை அதிகமாக சேர்க்கலாம். இதை அதிக காரம் சேர்க்காமல் ஆவியில் வேகவைத்து சாப்பிடலாம். அல்லது (அப்படியே சாப்பிட கூடிய) பச்சையாக சாலட் போன்றும் சாப்பிடலாம். தயிரோடு சேர்த்தும் சாப்பிடலாம்.

​நீர் மோர் :

உடல் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு புத்துணர்ச்சி தரும் சத்தான பானம். தயிரை கடைந்து வெண்ணெய் நீக்கி நீர் மோராக்கி சிட்டிகை உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். மோரில் புரோபயாட்டிக், வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளன. உடல் உஷ்ணம் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் இந்த மோர் ஒன்றே போதும் உடலை குளிர்ச்சி செய்துவிடும். ஒருவேளை உங்களுக்கு குளிர்ச்சி இருந்தால் அதில் கால்டீஸ்பூன் அளவு இஞ்சிசாறு சேர்த்து கொடுக்கலாம்.

​வைட்டமின் சி :

வைட்டமின் சி நிறைந்த பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை என எல்லாமே உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியவை. உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைக்க மாதுளம்பழச்சாறை தினசரி உட்கொள்ளலாம். எலுமிச்சை சாறை பிழிந்து அதில் உப்பு, சர்க்கரை இரண்டையும் சேர்த்து குடிக்கலாம். இது உடல் உஷ்ணத்தையும் தணிக்கும். உடன் உடலுக்கு ஆற்றலையும் கொடுக்கும். எனினும் மாலை நேரங்களில் இதை குடிக்காமல் தவிர்க்க வேண்டும்.

நீர் ஆகாரம் :

நீர் ஆகாரம் என்பது உடலுக்கு ஆற்றல் தரும் பானம். உடலுக்கு சிறந்த ஆகாரம் என்பதால் தான் இதை நீர் ஆகாரம் என்று சொல்கிறார்கள். உடல் உஷ்ணம் தணிக்க வேண்டுமெனில் எப்போதும் எங்கள் வீட்டில் நீர் ஆகாரம் தான் மருந்தாக கொடுப்பார்கள்.

முன் தினம் வடித்த சாதத்தில் நீர் ஊற்றி மறுநாள் அந்த நீரில் மோர் கலந்து உப்பு கலந்து வைக்க வேண்டும். காலை 1 மணி வரையிலும் தாகம் எடுக்கும் போதெல்லாம் இதை குடிக்கலாம். தொடர்ந்து ஒரு வாரம் வரை இதை குடித்தால் உடல் உஷ்ணம் தணியும். கோடைக்காலத்தில் மட்டுமல்ல எல்லா காலங்களிலும் உடல் வெப்பநிலையை இப்படிதான் குறைக்க முடியும்.

​சருமத்தை குளிர்ச்சியாக வைக்கவும் :

சரும துவாரங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதன் மூலம் உடல் உஷ்ணத்தை குறைக்க செய்யலாம். அதனால் சருமத்தின் மீது கற்றாழை ஜெல் பயன்படுத்தலாம். அதே போன்று அசல் சந்தனத்தையும் சருமத்தின் மீது பயன்படுத்தலாம். ஆயுர்வேத முறைப்படி சந்தனத்தை உடலுக்கு குளிர்ச்சி தர பயன்படுத்தலாம். இதில் கற்றாழையை உள்ளுக்குள் எடுக்கலாம்.

fruits health natural vegitables
Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Email
Previous ArticleNatural Foods That Increase Hemoglobin levels
Next Article Natural Foods That Alleviate Body Heat in Tamil

Related Posts

Cotton Milk Benefits In Tamil

Beauty Benefits Cereals Cooking Drinks Food Health Juice Natural

Wood Apple Benefits In Tamil

Beauty Benefits Cereals Drinks Food Fruits Health Juice Natural Yam

Jamun Fruit Benefits In Tamil

Beauty Benefits Cooking Drinks Food Fruits Health Juice Leaves Natural

Turmeric Powder Benefits In Tamil

Beauty Benefits Cooking Drinks Food Health Natural
Translate
Advertisment
Categories
  • Beauty (70)
  • Benefits (179)
    • Cereals (33)
    • Drinks (36)
    • Fruits (56)
    • Juice (57)
    • Leaves (36)
    • Plants (19)
    • Vegitables (37)
    • Yam (7)
  • Cooking (78)
    • Briyani (5)
    • Chicken (1)
    • Food (35)
    • Mutton (1)
    • Non Veg (2)
    • Veg (20)
  • Drawings (2)
    • Pencil Drawing (1)
    • Watercolor Painting (1)
  • Health (181)
  • History (2)
  • Natural (202)
  • Places (48)
    • Beach (12)
    • Boat Ride (11)
    • Church (23)
    • Falls (17)
    • Hills (11)
    • Islands (10)
    • Market (14)
    • Swimming (10)
    • Temple (36)
    • Tourist (39)
  • Stories (19)
    • Hindu (19)
    • History (19)
    • Kamba Ramayanam (19)
Facebook Twitter Instagram Pinterest Vimeo YouTube
  • Home
  • Benefits
  • Health
  • Natural
  • Beauty
© 2023 TamilanWiki.Com. All Rights Reserved

Type above and press Enter to search. Press Esc to cancel.