• Home
  • Contact
  • Translator
  • Benefits
  • Category
    • Benefits
    • Health
    • Beauty
Facebook Twitter Instagram
Tamilanwiki.ComTamilanwiki.Com
  • Home
  • Contact
  • Translator
  • Benefits
  • Category
    • Benefits
    • Health
    • Beauty
Home»Benefits»Health Benefits Of Horse Gram in Tamil

Health Benefits Of Horse Gram in Tamil

WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email

 அறிமுகம் :

           மனிதர்களுக்கு பல வகையான  ஊட்டச்சத்துக்களை அளிக்கவல்ல ஒரு தானியம்  கொள்ளு ஆகும். கொள்ளு தானியத்தில் பல மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

            எனவே தான் நம் நாட்டின் பண்டைய மருத்துவ சிகிச்சை முறையான ஆயுர்வேதத்திலும் கொள்ளு பற்றி குறிப்புகள் இருக்கின்றன. அந்த கொள்ளு தானியங்களை நாம் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கொள்ளு பயன்கள்

 உடல் எடை குறைய :

           நமது நாட்டில் பண்டைய காலத்தில் இருந்தே உடல் எடையை குறைப்பதற்கான உணவாக கொள்ளு தானியம் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. 

             கொள்ளை நன்றாக பொடி செய்து, அதை தினமும் காலையில் நீரில் கலந்து குடித்து வருபவர்களுக்கு வெகு சீக்கிரத்தில் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை கட்டுப்பாட்டிற்க்குள் வருகிறது.         

அஜீரணம், செரிமான பிரச்சனைகள் தீர :

            ருசி மிகுந்த உணவுகளை நன்றாக சாப்பிட்ட பிறகு ஒரு சிலருக்கு நெஞ்சுப்பகுதியில் எரிச்சல், புளித்த ஏப்பம் போன்றவை ஏற்படுகிறது. இது அஜீரணத்திற்காண அறிகுறியாகும். 

           தினமும் காலையில் மற்ற எந்த உணவை சாப்பிடுவதற்கு முன்பாக வெறும் வயிற்றில் முளைவிட்ட கொள்ளு அல்லது கொள்ளை கொண்டு செய்யப்பட்ட சூப் அருந்துவதால் மேற்கூறிய செரிமான பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

ஜலதோஷம், ஜுரம் நீங்க :

      மனிதர்களின் உடலின் நோய் எதிர்ப்புத் திறன் வலுவிழக்கும் போது  ஜலதோஷம் மற்றும் ஜுரம்   உண்டாகிறது. 

            இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேதத்தில்  கொள்ளு ரசம் அல்லது கொள்ளை கொண்டு செய்யப்பட்ட சூடான உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் ஜலதோஷம் மற்றும் ஜுரம் போன்றவை வெகு சீக்கிரத்தில் குணமாவதோடு இந்த நோய்களால் உடல் இழந்த பலத்தையும் திரும்ப மீட்டுக்கொடுக்கிறது.

 மாதவிடாய் பிரச்சனைகள் தீர :

           மாதவிடாய் பிரச்சனைகளுக்கு கொள்ளை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டும்.கொள்ளு தானியங்களில் அதிக அளவில் இரும்புச்சத்து இருக்கின்றன. 

              இது பெண்களின் மாதவிடாய் காலத்தில் அதீத ரத்தப்போக்கு ஏற்படுவதால் உடல் இழந்த சத்துக்களை ஈடு செய்கிறது. மாதவிடாய் ஏற்படும் போது உண்டாகும் அதிக எரிச்சல் மற்றும் வலியையும் குறைக்கிறது.

சிறுநீரக கற்கள் நீங்க :

           கால்சியம் ஆக்சலேட் எனப்படும் தாதுப்பொருள் நமது சிறுநீரகத்தில் அதிக அளவு சேர்ந்து விடும் போது சிறுநீரகத்தில் கல்லாக மாறி நமக்கு கடும் துன்பத்தை தருகிறது. 

     கொள்ளு தானியங்களில்  இருக்கும் இரும்புச்சத்து மற்றும் பாலிபினால் வேதிப்பொருட்கள்  சிறுநீரக கற்களை கரைக்க பெருமளவு உதவி புரிகிறது. 

மலச்சிக்கல் தீர :

               மனிதர்களின் உடலில் வயிறு மற்றும் குடல்கள் ஒரே நேர்கோட்டில் இல்லாத போது மலமாக மாறியிருக்கும் திடக் கழிவுகளை வெளியேற்ற ஆசனவாய் குடல் சுருங்கி விரிவதற்கும் சிரமப்படுகிறது. 

                    தினமும் காலையில் சிறிதளவு முளைக்கட்டிய கொள்ளு தானியங்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு எப்படிப்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையும் விரைவில் தீரும். 

கொலஸ்ட்ரால் நீங்க :

       எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பு வகைகள் நமது ரத்தத்தில் படிவதை தடுக்கும் அரும்பணியை கொள்ளு தானியம் செய்கிறது.

             ஊறவைக்கப்பட்ட கொள்ளு தானியங்களை தினந்தோறும் இரண்டு வேளை சாப்பிட  ரத்த நாளங்களில் படிந்திருக்கின்ற எல்.டி.எல் கொலஸ்ட்ரால் சத்துகள் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு உடல்நலனை பேணுகிறது.

கண் நோய்கள் குணமாக :

          கொள்ளு தானியத்தை ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துகள் அதிகம் உள்ளன. எனவே கஞ்சைக்டிவைட்டிஸ் நோய் தாக்கம் ஏற்பட்டவர்கள் இரவில் கொள்ளு தானியங்களை ஒரு கிண்ணம் நீரில் ஊற வைத்து, காலையில் அந்த நீரை எடுத்து உங்கள் கண்களை கழுவி வருவதால் கண்களின் எரிச்சல் நீங்கி கஞ்சைக்டிவைட்டிஸ் நோயை ஏற்படுத்தி இருக்கும் கிருமிகள் அழிந்து மிக விரைவில் கண்கள் நலம் அடையும். 

நீரிழிவு கட்டுப்பட :

               கொள்ளு தானியங்களில் ஹைப்பர் – கிளைசீமிக் எதிர்ப்பு வேதிப் பொருட்கள் அதிகம் உள்ளன.அதனுடன் இன்சுலின் எதிர்ப்பு தன்மையை குறைக்கும் வேதிப்பொருட்களும் இந்த தானியங்களில் அதிகம் நிரம்பியுள்ளன. 

         கொள்ளு சூப் அல்லது கொள்ளு தானியங்களால் செய்யப்பட்ட உணவுகளை தினமும் ஒரு முறை அல்லது இரண்டு நாளைக்கு ஒரு முறை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டு வருவதால் அவர்களுக்கு நார்ச்சத்து அதிகம் கிடைக்கப் பெற்று, அவர்களின் ரத்தத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

diabetes fever health horse gram nature stones weight loss
Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Email
Previous ArticleBenefits of Mango Juice in Tamil
Next Article Healthy Benefits of Vellari Pazham in Tamil

Related Posts

Cotton Milk Benefits In Tamil

Beauty Benefits Cereals Cooking Drinks Food Health Juice Natural

Wood Apple Benefits In Tamil

Beauty Benefits Cereals Drinks Food Fruits Health Juice Natural Yam

Jamun Fruit Benefits In Tamil

Beauty Benefits Cooking Drinks Food Fruits Health Juice Leaves Natural

Turmeric Powder Benefits In Tamil

Beauty Benefits Cooking Drinks Food Health Natural
Translate
Advertisment
Categories
  • Beauty (70)
  • Benefits (179)
    • Cereals (33)
    • Drinks (36)
    • Fruits (56)
    • Juice (57)
    • Leaves (36)
    • Plants (19)
    • Vegitables (37)
    • Yam (7)
  • Cooking (78)
    • Briyani (5)
    • Chicken (1)
    • Food (35)
    • Mutton (1)
    • Non Veg (2)
    • Veg (20)
  • Drawings (2)
    • Pencil Drawing (1)
    • Watercolor Painting (1)
  • Health (181)
  • History (2)
  • Natural (202)
  • Places (48)
    • Beach (12)
    • Boat Ride (11)
    • Church (23)
    • Falls (17)
    • Hills (11)
    • Islands (10)
    • Market (14)
    • Swimming (10)
    • Temple (36)
    • Tourist (39)
  • Stories (19)
    • Hindu (19)
    • History (19)
    • Kamba Ramayanam (19)
Facebook Twitter Instagram Pinterest Vimeo YouTube
  • Home
  • Benefits
  • Health
  • Natural
  • Beauty
© 2023 TamilanWiki.Com. All Rights Reserved

Type above and press Enter to search. Press Esc to cancel.