TamilanWiki.Com
  • Home
  • Contact
  • Translator
  • Benefits
  • Category
    • Benefits
    • Health
    • Beauty
Facebook Twitter Instagram
TamilanWiki.Com TamilanWiki.Com
  • Home
  • Contact
  • Translator
  • Benefits

    A Breif Tips For Healthy Skin in Tamil

    August 23, 2022

    Nutmeg Benefits in Tamil

    August 23, 2022

    Benefits of Jasmine Flower in Tamil

    August 19, 2022

    Lotus Flower Benefits in Tamil

    August 19, 2022

    Rose Flower Benefits In Tamil

    August 19, 2022
  • Category
    1. Benefits
    2. Health
    3. Beauty
    4. View All

    A Breif Tips For Healthy Skin in Tamil

    August 23, 2022

    Nutmeg Benefits in Tamil

    August 23, 2022

    Benefits of Jasmine Flower in Tamil

    August 19, 2022

    Lotus Flower Benefits in Tamil

    August 19, 2022

    Benefits Of Castor Flower in Tamil

    August 28, 2022

    A Breif Tips For Healthy Skin in Tamil

    August 23, 2022

    Rose Flower Benefits In Tamil

    August 19, 2022

    Country Sugar Benefits in Tamil

    August 18, 2022

    A Breif Tips For Healthy Skin in Tamil

    August 23, 2022

    Nutmeg Benefits in Tamil

    August 23, 2022

    Benefits of Jasmine Flower in Tamil

    August 19, 2022

    Lotus Flower Benefits in Tamil

    August 19, 2022

    Top 10 Places to Visit at Goa in Tamil Part 1

    September 8, 2022

    Megamalai Famous Touriest Places

    September 7, 2022

    Brief Information About Kothagiri

    September 1, 2022

    Some Information About Kollimalai

    August 31, 2022
TamilanWiki.Com

Different Types of Bell Pepper (Capsicum) and its Benefits

July 19, 2021Updated:October 7, 2022No Comments5 Mins Read
WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email

அறிமுகம் :

குடமிளகாய் உலகில் மிகவும் பரவலாக பயன்படுத்தபடுகிறது. இது காய்கறிகளுக்கு சுவை மற்றும் மணம் தரும் வண்ணமயமான காயாகும். குடமிளகாய் சோலனேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கிறது. காரம் அதிகமில்லாத இம்மிளகாய், மிளகாயின் மணமும், மிளகிற்கு நிகரான சுவையும் உடையது. உயிரியல் ரீதியாக கருப்பு மிளகும், குடமிளகாயும் ஒரே குடும்பத்தை சேர்ந்தது இல்லை. ஆனால் இரண்டிலும் ஒரே மாதிரியான சில சத்துகளும், குணங்களும் உள்ளன.

தோற்றம் :

இது ஆயிரம் வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் தோன்றி உலகெங்கும் பரவியுள்ளதாக சொல்லப்படுகிறது. பச்சை வண்ண குடைமிளகாய் குடை மிளகாயில் பல வண்ணங்கள் மார்கு்கெட்டுகளில் கிடைக்கின்றன. அதாவது பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன. ஆனால் நாம் பெரும்பாலும் சமையலில் பயன்படுத்துவது இந்த பச்சை வண்ண குடமிளகாயைத் தான்.

சத்துக்கள் :

எடை அதிகரிக்காமல் இருக்க எல்லோரும் எடையை குறைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தில் உள்ளோம். ஏனெனில் அதிக எடை ஆபத்தானது. பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடியது. குடைமிளகாயில் குறைந்த அளவே கலோரியும் கொழுப்பும் உள்ளது. இதை சாப்பிடுவதால் எடை அதிகரிக்காது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதை தினசரி எடுத்து கொண்டால் பசியை குறைத்து எடை அதிகரிக்காமல் தடுக்கிறது. குடமிளகாய் சாறு எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது. நன்கு மசித்த குடமிளகாயுடன் வினிகரை சேர்த்து சாறு எடுக்கலாம். மாத்திரைகள் தயாரிக்கவும் இது பயன்படுகிறது.

புற்றுநோய்க்கு சிறந்தது :

புற்றுநோயானது மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்றாகும், ஆரம்ப காலங்களில் கண்டறியப்பட்டால் மட்டுமே சிகிச்சையளிக்கப்பட முடியும். இது முதலில் ஒரு கட்டி போன்றே தொடங்குகிறது. இறுதியில் செல்கள் ஒரு கட்டுப்பாடற்ற நிலையில் பெருகுகிறது. குடமிளகாயில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை புற்று நோய் வராமல் தடுக்கிறது. தினமும் குடமிளகாயை உணவில் சேர்த்துக்கொண்டால் சிறுநீர்ப்பை, கணையம், கருப்பை வாய், புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் ஆகியவற்றைத் தடுக்கலாம்.

வலி நிவாரணி :

உடல் வலி குடமிளகாயில் அழற்சி எதிர்ப்பு தன்மை இருப்பதால் உடல் வலிக்கு மிகவும் ஏற்றது. எலும்பு இணைப்புகளில், மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தையும், வலியையும் குறைக்கிறது. இதை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் பல்வேறு விதமான வலிகளுக்கும் உடனடி நிவாரணம் கிடைக்கும். இது மிகச் சிறந்த வலி நிவாரணி ஆகும். குடமிளகாய் கிரீமை பாதிக்கப்பட்ட உடல் பகுதியை மசாஜ் செய்வதற்கு பயன்படுத்தலாம். உடனடி நிவாரணம் தரும். இந்த கிரீமானது சிவப்பு குடமிளகாய் பயன்படுத்தி செய்யப்பட்டதாகும். மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

தோல் வலிமை :

தோல்தான் நம் உடலில் வெளியில் தெரியும் மிக முக்கியமான உறுப்பு. இன்றைய மாசுபட்ட, தீங்கு நிறைந்த சுற்றுச் சூழலில் வாழும் நாம் நமது தோலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். வைட்டமின் C மற்றும் வைட்டமின் E அதிகம் உள்ள குடமிளகாய் நம் தோலுக்கு தேவையான சத்துகளை தந்து ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. தோலில் ஏற்படும் சுருக்கத்தை போக்கி வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது. செல்களின் வளர்ச்சியை துரிதப்படுத்தி தோலுக்கு உறுதியளிக்கிறது. குடமிளகாயை பசை போல் செய்து 10-15 நிமிடங்கள் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மீது தடவினால் அவை நீங்கி முகம் பொலிவு பெறும்.

கூந்தல் பராமரிப்பு :

கூந்தல் வளர்ச்சிக்கு குடமிளகாய் ஒருவருக்கு அழகு சேர்ப்பதில் தலை முடிக்கு முக்கிய பங்குண்டு. குடமிளகாய் தலை முடிக்கு மிகவும் நன்மை செய்யும். குடமிளகாயில் உள்ள சத்துக்கள் தலை முடியின் வேரை வலிமையாக்கி, தலை முடியை ஆரோக்கியமாக வைக்கிறது. இதை உபயோகித்ததால் பொடுகுத் தொல்லை அறவே ஒழியும். இது மண்டை ஒட்டிற்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியையும், மண்டை ஓட்டையும் ஆரோக்கியமான வைக்கிறது. குடமிளகாய் எண்ணெய் தலைமுடி வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது. இதை வீட்டிலேயே தயார் செய்யலாம். பாதி குடமிளகாயை ஆலிவ் எண்ணையில் ஊற வைத்து மூன்று நாட்கள் கழித்து வடிகட்டி உபயோகிக்கலாம். இது, பச்சை குடமிளகாயால் நாம் பெரும் ஒரு நல்ல பயன். குடமிளகாய் பசையை கூட கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்.

நல்ல செரிமானத்திற்கு :

எளிதில் செரிக்க அஜீரணம் என்பது பலரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினையாகும். நாம் சாப்பிடும் உணவு சரியாக உடைக்கப்படாமல் உடலால் பயன்படுத்த முடியாது. அத்தகைய சந்தர்ப்பங்களில் கனிமங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதில்லை. குடமிளகாய் செரிமானத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். இது வாய்வு தொல்லையை போக்கி மலச்சிக்கலை தடுக்கிறது. இதை ஸாலட் செய்து சாப்பிடும் முன் உணவில் சேர்த்துக்கொண்டால், இரைப்பையில் சுரக்கும் ஜீரண நீரை தூண்டி செரிமானத்தை துரிதப்படுத்துகிறது.

இதயத்தை பாதுகாக்க :

இதயத்திற்கு நல்லது அதிகப்படியான கொழுப்பும், உயர் ரத்த அழுத்தமுமே மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணங்கள். இதய நாளங்களில் அடைப்பு ஏற்படும் போது ரத்த ஓட்டம் தடைபடுகிறது. குடமிளகாயில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. இதில் கெட்ட கொழுப்பு இல்லை. அதனால் இதயத்தை ஆரோக்கியமாகவும், அதிக செயல் திறனுடனும் வைத்துக் கொள்கிறது.

குடற்புண் சரி செய்ய :

வயிறு, குடற்புண் உறுப்புகளின் உட்புற சுவர்களில் ஏற்படும் உடைப்பு, அந்த குறிப்பிட்ட உறுப்பை செயல்பட விடாமல் செய்யும். இவை வலியையும் ஒருவித எரிச்சலையும் ஏற்படுத்தும். இதை நீண்ட நாட்கள் கவனிக்காமல் விட்டு விட்டால் அது புற்று நோயாக மாறும் அபாயம் உண்டு. குடமிளகாயில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் C அதிகமாக உள்ளது. இவை இரண்டும் குடற்புண் வராமல் காப்பதில் பெரும் பங்காற்றுகிறது. குடமிளகாய், மிளகு இரண்டையும் பயன்படுத்துவது குடற்புண்ணுக்கு மிகவும் நல்லது.

கர்ப்பகாலத்தில் :

சிவப்பு குடமிளகாயில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் உள்ளது. இது வைட்டமின் A உடலால் உறிஞ்சப்பட மிகவும் அவசியம். வைட்டமின் A கருவில் உள்ள குழந்தையின் தோல், கண்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் தேவை. பச்சை குடமிளகாயை விட சிகப்பு குடளகாயில் மூன்று மடங்கு வைட்டமின் C அதிகம். இது உடைந்த திசுக்களை சரி செய்யவும், ஆரோக்கியமான பிரசவ காலத்திற்கும், கருவில் உள்ள குழந்தையின் உறுப்புகளின் சரியான வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாதது. பச்சை குடமிளகாய் கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதும் தீங்கற்றதுதான். என்றாலும் பச்சை குடமிளகாயை விட சிவப்பு குடமிளகாய் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது தான்.

மஞ்சள் குடமிளகாயின் நன்மைகள்:

மஞ்சள் குடமிளகாயில் வைட்டமின் C அபரிமிதமான அளவு உள்ளது. இதை சாலட், சூப் மற்றும் பிற உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். இதை பச்சையாக சாப்பிட்டால் சிறிது கசப்பாக இருக்கும். மஞ்சள் குடமிளகாயை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் ஆஸ்துமா போன்ற சுவாச சம்பந்தமான கோளாறுகளை நீக்கும். சளி தொந்தரவுகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். இதயத்தை பாதுகாக்கும். நரம்பியல் கோளாறுகளை சரி செய்து ஆரோக்கியமாக இயங்கச் செய்யும். குடமிளகாயில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளதால், நம் உடலில் உள்ள நீர்ச்சத்தை சமன் செய்யும். நம் தசைகளை வலுப்பெறச் செய்யும். சுவாசக் கோளாறுகளை சரி செய்யும்.


குடமிளகாய் பொரியல்

தேவையான பொருட்கள் :

  • 200 கிராம் குடமிளகாய்,
  • 100 கிராம் தக்காளி,
  • இரண்டு பச்சை மிளகாய்,
  • உப்பு,
  • 2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்,
  • அரை தேக்கரண்டி மஞ்சள்,
  • 1 தேக்கரண்டி சீரகம்,
  • 4 தேக்கரண்டி எண்ணெய்.

செய்முறை:

  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  • மிளகாய் சேர்த்து அதன் நிறம் மாறும் வரை காத்திருக்கவும்.
  • மஞ்சள் தூள், சீரகம், சிவப்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
  • நறுக்கப்பட்ட குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • நறுக்கப்பட்ட தக்காளி மற்றும் உப்பு சேர்க்கவும்.
  • சிறிது நேரம் வேக விட்டு, காரம் தேவை எனில் சிறிது மிளகாய் பொடி சேர்க்கவும்.
  • சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • எண்ணெய் பிரிய ஆரம்பித்தவுடன், குடமிளகாய் பொரியல் தயார்.


குடமிளகாய் கிரேவி

தேவையான பொருட்கள் :

  • 3 தக்காளிகள்,
  • 1 பெரிய வெங்காயம்,
  • 1 குடமிளகாய்,
  • 1 தேக்கரண்டி தயிர்,
  • கொத்தமல்லி தூள்,
  • மிளகாய் தூள்,
  • கரம் மசாலா (மசாலா அரைக்க தேவையானவை 2 பிரியாணி இலைகள், 2 இலவங்கப்பட்டை, 3 கிராம்பு, 1 ஏலக்காய் மற்றும் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரைத்துக்கொள்ளவும்)
  • மஞ்சள் தூள்,
  • முந்திரி பருப்புகள்,
  • கசகசா,
  • பெருஞ்சீரகம்.

செய்முறை:

முந்திரி பருப்புகள், கசகசா, பெருஞ்சீரகம் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
எண்ணையை சூடாக்கி கரம் மசாலா சேர்க்கவும் 3 நறுக்கிய வெங்காயம், மற்றும் குடமிளகாயை சேர்க்கவும்.
நன்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்.
தக்காளி விழுதை சேர்த்து கலக்கவும் 6. 5 நிமிடங்கள் வேக விட்டு, ஒரு கப் நீர் சேர்க்கவும்.
முந்திரி விழுது மற்றும் மற்ற மசாலாக்களையும், உப்பையும் சேர்க்கவும்.
எல்லாவற்றையும் கலந்து 15 நிமிடங்கள் அப்படியே கொதிக்க விடவும்.
எண்ணெய் பிரிய ஆரம்பித்தவுடன் இறக்கலாம்.

இதை ரொட்டி, சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

cooking health vegitables
Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Email
Previous ArticleTasty and Healthy Radish Juice in Tamil
Next Article Various benefits of Snake gourd

Related Posts

Top 10 Places to Visit at Goa in Tamil Part 1

September 8, 2022

Megamalai Famous Touriest Places

September 7, 2022

Brief Information About Kothagiri

September 1, 2022

Some Information About Kollimalai

August 31, 2022
Add A Comment

Comments are closed.

Translate
Advertisment
Categories
  • Beauty (31)
  • Benefits (135)
    • Cereals (12)
    • Drinks (4)
    • Fruits (32)
    • Juice (26)
    • Leaves (22)
    • Plants (5)
    • Vegitables (28)
    • Yam (6)
  • Cooking (41)
    • Briyani (2)
    • Chicken (1)
    • Food (3)
    • Mutton (1)
    • Non Veg (2)
    • Veg (3)
  • Drawings (2)
    • Pencil Drawing (1)
    • Watercolor Painting (1)
  • Health (143)
  • History (2)
  • Natural (163)
  • Places (41)
    • Beach (10)
    • Boat Ride (11)
    • Church (23)
    • Falls (17)
    • Hills (11)
    • Islands (10)
    • Market (9)
    • Swimming (10)
    • Temple (36)
    • Tourist (39)
  • Uncategorized (1)
Facebook Twitter Instagram Pinterest Vimeo YouTube
  • Home
  • Benefits
  • Health
  • Natural
  • Beauty
© 2023 TamilanWiki.Com. All Rights Reserved

Type above and press Enter to search. Press Esc to cancel.