Browsing: Health

அறிமுகம் : வெப்பமண்டல மழைக்காடு பழம்தரும் மரங்களிலிருந்து பெறப்பட்ட ஒரு பெரிய பழமாகும். பசிபிக் தீவுகளில் இருந்து ஆப்பிரிக்கா வரை பரவிய ஒரு பிரதான உணவு, ரொட்டிப்பழம் பலாப்பழத்தைப் போலவே உள்ளது, ஆனால் ஊட்டச்சத்தில் உயர்ந்த இடத்தில் உள்ளது. இது முட்கள் நிறைந்த தோல், ஒரு கட்டியான பச்சை சதை மற்றும் உருளைக்கிழங்கு போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. இரத்த அழுத்தம் : இது கொழுப்பைக் குறைக்கிறது, நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது, இளமை தோல் மற்றும் ஆரோக்கியமான கூந்தலை ஊக்குவிக்கிறது. குளுக்கோஸ் உறிஞ்சுதல் விகிதத்தை குறைக்கும் நல்ல அளவு நார்ச்சத்து இருப்பதால், இது நீரிழிவு நோய்க்கு உகந்த உணவாகும் . இது இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தும் இதயத்திற்கு உகந்த பொட்டாசியம் சத்து நிறைந்தது . நோய் எதிர்ப்பு சக்தி : ஏராளமான ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை நோய்த்தொற்றுகளுக்கு எதிராக எதிர்ப்பை உருவாக்குகின்றன மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.…

Read More

அறிமுகம் : வாழை மரம். ஒரு பொருள் சற்றும் வீணாகாமல் நம்மால் பயன்படுத்த முடியும் என்றால் அது வாழை மட்டும் தான். வாழை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம் என எல்லாமே நிறைவான நன்மைகளை தரக்கூடியவை. நீரிழிவு : இதன் ஒவ்வொரு பகுதியும் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நன்மைகளால் நிறைந்துள்ளது. வாழை இலையில் சாப்பிடுவதன் மூலம் செரிமானம் சீராகும். வாழைப்பழங்கள் பொட்டாசியம் மற்றும் வைட்டமின்களின் சிறந்த மூலம். வாழைப்பூ நீரிழிவு மற்றும் வயதான எதிர்ப்பு குணங்களுக்கு நன்மை செய்கிறது. ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் : வாழைத்தண்டு நார்ச்சத்து அதிகம் நிறைந்தவை இது புண்கள் அல்லது வயிற்றில் அமிலத்துக்கு சிகிச்சை அளிக்க உதவும். வாழைப்பழங்கள் போன்று வாழைத்தண்டுகளும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 6 போன்றவற்றை கொண்டுள்ளது. இது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான நன்மைகள் : இது தசைகள் சேதமில்லாமல் அதன் வளர்ச்சிக்கு உதவுகிறது. வாழைத்தண்டு…

Read More

அறிமுகம் : நம் நாட்டிலும் நமது முன்னோர்கள் பயன்படுத்திய ஏராளமான உணவுப் பொருட்கள் காலமாற்றத்தில் மறைந்து போய் உள்ளன. ஆனால் தற்போது அவை ஆர்வம் உள்ள மக்களால் மீட்டெடுக்கப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட உணவுகளில் ஒன்று தான் கருப்பட்டி ஆகும்.இன்று உலகெங்கிலும் உள்ள மக்கள் செயற்கையான உணவுகளை விடுத்து, உடல் நலத்தை மேம்படுத்துகின்ற பாரம்பரியமான உணவுகளை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கின்றனர். கால்சியம் சத்து : கருப்பட்டி கால்சியம் மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் கொண்டதாக இருக்கிறது.இனிப்பு உணவுகளில் நாம் பெரும்பாலும் வெள்ளை சர்க்கரையை சேர்த்து பயன்படுத்தும் இந்த வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை இனிப்பு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கால்சியம் அதிகம் கிடைத்து நமது உடலில் பற்களும், எலும்புகளும் வலுப்பெறும் . பருவ வயது பெண்கள் : பெண்களின் வாழ்வில் ஒரு முக்கியமான பருவம் பூப்படையும் காலமாகும். இக்காலத்தில் பெண்களின் கருப்பை பலம் பெறும் வகையிலான உணவுகளை சாப்பிட வேண்டும். பருவம்…

Read More

அறிமுகம் : தமிழ்நாட்டில் அதிகம் பயிரிடப்படும் ஒரு பிரபலமான அரிசி வகையாகும். இது தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பழமையான அரிசியாகும். இது புலாவ் மற்றும் பிரியாணி, குறிப்பாக விருந்துகளுக்கு பயன்படுத்தப்படும் அயல்நாட்டு மற்றும் விலையுயர்ந்த அரிசி வகைகளில் ஒன்றாகும். தமிழில் சீரகம் என்று அழைக்கப்படும் சீரக விதைகளை ஒத்திருப்பதால் இந்த அரிசி வகைக்கு சீரக அரிசி என்று பெயர் வந்தது. இந்த பிரபலமான அரிசி இந்தியாவில் பெயர்களால் அழைக்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் இல்லாத உணவு : கொலஸ்ட்ரால் இல்லாத உணவுகளைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு ஜீரா அரிசி அல்லது சீரக சாம்பா மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் நல்ல அளவு ஆற்றல் அல்லது கலோரிகள் இருந்தாலும், இதில் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு இல்லை. இது கார்டியோ தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கவும் ஆற்றல் செலவை மேம்படுத்தவும் உதவுகிறது. இதில் குறைந்த அளவு கொழுப்பு, சோடியம் மற்றும் கொலஸ்ட்ரால் இருப்பதால், உடல் பருமன் மற்றும்…

Read More

அறிமுகம் : உணவு பொருட்கள் சில உடனடியாக உட்கொள்ளப்படுவதாக இருக்கிறது. மற்ற சில பொருட்கள் எக்காலத்திலும் உண்பதற்கு ஏற்றவாறு பதப்படுத்தி உண்பதாக இருக்கிறது. அப்படி ஒரு உணவு பொருள் தான் காய்ந்த திராட்சை. காய்ந்த திராட்சைகள் பல உடல் குறைபாடுகளுக்கு சிறந்த உணவாக இருக்கிறது. ஆண்மை குறைபாடுகள் : நரம்புகள் பாதிப்படைவதால் சில ஆண்களுக்கு நரம்பு தளர்ச்சி மற்றும் உடலுறவு சார்ந்த குறைபாடுகள் ஏற்படுகின்றன. காய்ந்த திராட்சைகளை சூடான பசும்பாலில் சிறிது ஊற வைத்து அருந்தி வர நரம்புகள் வலுவடைந்து, ஆண்மை குறைபாடுகள் நீங்கும். அதீத மனஅழுத்தம் : அவசரமான இன்றைய வாழ்க்கை முறையால் பலரும் அதீத மனஅழுத்ததால் பாதிக்கப்படுகின்றனர். இரவு உறங்கும் முன்பு காய்ந்த திராட்சைகளை பாலில் ஊறவைத்து அருந்தி வர கூடிய விரைவில் மன அழுத்தங்கள் குறையும். சிறுநீரகம் : உடலின் கழிவுகளை வெளியேற்றி உடலின் வெப்பநிலையை சீராக வைப்பதில் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுகின்றன. காய்ந்த திராட்சைகள் சிறுநீரகங்களின்…

Read More

அறிமுகம் : பொதுவாக நட்ஸ் என அழைக்கப்படும் விதை வகையை சேர்ந்த முந்திரி, பாதாம் போன்ற உணவுகள் அதிக ஆரோக்கிய சத்துக்களைக் கொண்டவை. எனவே மக்கள் பல்வேறு உணவுகளிலும், பலகாரங்களிலும் இவற்றை சேர்ப்பதைப் பார்க்க முடியும். எனவே முந்திரியும் கூட ஒரு ஆரோக்கியமான உணவாகவே பார்க்கப்படுகிறது. சத்துக்கள் : முந்திரியில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற சத்துக்கள் உள்ளன. இவ்வளவு சத்துக்கள் உள்ளபோதும் முந்திரி சில சமயங்களில் ஆபத்தை விளைவிக்கலாம் என சில ஆய்வுகள் கூறுகின்றன. சிறுநீரகத்தில் பாதிப்பு : அதிகமாக முந்திரியை சாப்பிடும்போது அது உங்களுக்கு ஒவ்வாமை அல்லது மலச்சிக்கலை ஏற்படுத்தலாம். அதிக அளவு முந்திரியை சாப்பிடும்போது அது சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். மேலும் நாள்பட்ட உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதய ஆரோக்கியம் : முந்திரி பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்தல், இதய ஆரோக்கியம், உடல் எடையைக் குறைத்தல் போன்றவற்றிற்கு…

Read More

அறிமுகம் : இந்த அரிசியில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு அரிசியை சாப்பிடுவதால் ஒவ்வொரு வகையான உடல் நலன் சார்ந்த பலன்களை நாம் பெறலாம். அந்த வகையில் மிகவும் பாரம்பரியமான கருப்பு கவுனி அரிசி குறித்தும், அந்த அரிசியை நாம் உணவாக செய்து சாப்பிடுவதால், நமக்கு ஏற்படக்கூடிய உடல் நலன் சார்ந்த நன்மைகள். கல்லீரலில் ஆரோக்கியம் : இந்த அரிசியில் அதிகம் நிறைந்துள்ள ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் எனப்படும் ஊட்ட பொருட்கள், நமது இரத்தத்தில் இருக்கின்ற பிரீ ராடிகல் எனப்படும் மூலக்கூறுகளால் ஏற்படுகின்ற நச்சுக்களை நீக்குகின்றது. மேலும் மனிதர்களின் கல்லீரலில் அதிகளவில் சேர்ந்திருக்கின்ற நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலில் ஆரோக்கியமான செயல்பாட்டை உறுதி செய்கிறது. நீரிழிவு நோய் : நீரிழிவு நோய் தங்களுக்கு ஏற்படக்கூடாது என நினைப்பவர்கள், அவ்வப்போது கருப்பு கவுனி அரிசியில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டும் எனவும் இந்த அரிசியின் மேல் இருக்கும் கருப்பு நிற பொட்டுகளில் குளுக்கோஸ் சத்து அதிகம்…

Read More

அறிமுகம் : கொத்தமல்லி இலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கொத்தமலை இலைகளை அரைத்து முகத்தில் பூசுவதால் தோல் சுருக்கம் மற்றும் கருமை மறையும். மிக எளிதாகவும், விலை மளிவாகவும் கிடைக்கக்கூடிய ஒன்று கொத்தமல்லியாகும். கண் பிரச்சனைகள் : கொத்தமல்லி அரைத்து கண்களுக்கு மேலெ பற்று போடுவதால், கண் பிரச்சனைகள் குறைகிறது. கண்களுக்கு பலம் கிடைக்கிறது. கண்கள் பிரகாசம் ஆகிறது. கண்களுக்கு கீழே உள்ள சுருக்கங்கள் மற்ரறும் கண்களில் உள்ள கருவளையங்கள் ஆகியவை முகத்திற்கு முதிச்சியான தோற்றத்தை தரக்கூடியது. வயிற்று வலி : வயிற்று வலி, அஜீரண கோளாறுகல் போன்றவற்றை போக்குகிறது, இது ஈரலை பலப்படுத்துகிறது. கொத்தமல்லி ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இது அம்மை நோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது. இந்த மருத்துவம் வெளிநாடுகளில் கூட மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. சிறுநீர் : கொத்தமல்லி விதைகளை தேநீராக்கி குடித்தால், சிறுநீர் உடலில் தேக்கி வைக்கப்படாமல் உடலை விட்டு வெளியேறும். சிறுநீர்…

Read More

அறிமுகம் : புதினாவை பக்குவம் செய்து சாப்பிட்டு வரும்போது ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம் குறையும். அதே நேரம் ஒரு சமயத்தில் அளவுக்கதிகமாக புதினாவை ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டவர்களும் சிறிதளவு புதினாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் வயிற்றுப்போக்கு நீங்குவதாக மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. வயிற்றுப் கோளாறு : ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும், சிறிது புதினா இலைகளை வாயில் போட்டு நன்கு மென்று தின்பதால் வாய் துர்நாற்றம் நீங்குகிறது. புதினாவை துவையல் செய்து சாதத்துடன் சாப்பிட்டு வர வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, செரியாமை ஆகியன தீரும். புதினாவில் இருந்து தயாரிக்கப்படும் ‘மென்தால்’ என்ற எண்ணெய் தலைவலிக்கு நல்லது. புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அருந்தலாம்.புதினா, வயிற்றுவலி, அஜீரணம், வாயுத் தொல்லை, மலச்சிக்கல், உப்புசம், வயிற்றிப் போக்கு உள்பட பல வயிற்றுப் கோளாறுகளை தீர்த்து விடுகிறது. வயிற்றில் உள்ள கிருமிகள் : புதினா…

Read More

அறிமுகம் : உங்கள் உணவுகளில் சிறிது காரத்தை அதிகரிக்க விரும்பினால், அதற்கு பச்சை மிளகாய் சரியான பொருளாக இருக்கும். சமைக்கும் போது பச்சை மிளகாயை சேர்ப்பதால், அது உணவிற்கு ஒரு தனிசுவையைத் தருவதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. எனவே இவ்வளவு நன்மைகளைத் தன்னுள் கொண்ட பச்சை மிளகாயை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. உடல் எடை : பச்சை மிளகாய் எடையை இழக்க நினைப்போருக்கு ஒரு அற்புதமான உணவுப் பொருள். ஏனெனில் இதில் கலோரிகள் குறைவு மற்றும் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். மெட்டபாலிசம் என்னும் செயல்முறையில் தான் உணவுகளானது உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றப்படுகின்றன. இதன் போது கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடையை இழக்கச் செய்கின்றன. இதய ஆரோக்கியம் : பச்சை மிளகாயில் பீட்டா-கரோட்டின் உள்ளது. இது இதய செயல்பாட்டை முறையாக பராமரிக்க உதவுகிறது. மேலும் இது இரத்த கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவையும் குறைக்க உதவி,…

Read More