முன்னுரை :
தினந்தோறும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடமே செல்ல வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு பல எக்கச்சக்கமான மருத்துவ நன்மைகளை கொண்டது ஆப்பிள்.

சுவை மற்றும் சத்து என இரண்டிலும் சிறந்த பழம் தான் ஆப்பிள் பழம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆப்பிள் பழம் எண்ணற்ற மகத்துவங்களைக் கொண்ட பழம் ஆகும்.
ஆப்பிள் பழத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் மகத்துவங்களில் சிலவற்றை இந்த பதிவின் மூலம் தெரிந்து பயன்பெறுங்கள்.
ஆப்பிள் பழத்தின் பயன்கள்
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});மூடி வளர்ச்சி :
இயற்கை ஸ்டீராய்டு என்று அழைக்கப்படும் பயோட்டின் ஊட்டச்சத்து ஆப்பிள் பழத்தில் உள்ளது. இந்த பயோட்டின் உங்கள் முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமான ஊட்டச்சத்தாகும்.

எனவே நீங்கள் வலிமையான மற்றும் ஆரோக்கியமான தலைமுடியை பெற ஆப்பிள் மிகவும் உறுதுணையான பழமாகும்.
சுருக்கங்களை போக்கும் :
முகச்சுருக்கங்களை போக்க ஆப்பிள் பழம் ஒரு சிறந்த நிவாரணி என்றே சொல்லலாம். ஆப்பிளை அரைத்து தொடர்ந்து சில நாட்கள் உங்கள் முகத்தில் தேய்த்துவந்தால், விரைவில் முகச்சுருக்கங்கள் நீங்கி உங்களது சருமம் புதுப்பொலிவு பெறும்.

இதயத்தை காக்கும் ஆப்பிள் :
ஆப்பிளில் உள்ள ஃபைபர் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. இது இதயம் சார்ந்த நோய்களில் இருந்து உங்களை காக்க மிகவும் உதவும்.

நமது ரத்த நாளங்களை தளர்த்துவதற்கு ஆப்பிள் பழத்தில் உள்ள பொட்டாசியம் உதவுகிறது.உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆப்பிள் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்ல பயனளிக்கும்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});ஆப்பிள் பழத்தில் உள்ள ‘வைட்டமின் சி’ இதய ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய ஒன்று.
பற்களை ஒளிரச்செய்யும் :

ஆப்பிள் பழத்தை கடித்து சாப்பிடுவது உங்கள் பற்களை பளிச்சென்று ஒளிரச்செய்யும். மேலும் வாய் மற்றும் தொண்டைப் பகுதியில் உள்ள கிருமிகளை அழிக்கவும் ஆப்பிள் உதவும்.
புற்றுநோயை விரட்டும் :

குடல் புற்றுநோய்,மார்பகப் புற்றுநோய்,நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பலவிதமான புற்று நோய்கள் நம்மை நெருங்காமல் இருக்க ஆப்பிள் பழம் மிகவும் உதவுகிறது.
மாரடைப்பில் இருந்து காக்கும் :

தினமும் இரண்டு ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வருவது மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய் நம்மை நெருங்காமல் காத்துக் கொள்ள பெரிதும் உதவும்.
அறிவுத்திறனை மேம்படுத்தும் :

மூளை சார்ந்த நோய்களில் இருந்து நம்மை காக்க ஆப்பிள் பழம் உதவுகிறது.மேலும் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உங்களின் மூளைத் திறனை அதிகரிக்கச் செய்யும்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});எடையை குறைக்க உதவும் :
உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆப்பிள் பழம் ஒரு அருமருந்தாகும். ஆப்பிள் பழத்தில் உள்ள பயோ ஆக்டிவ் சேர்மங்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க உதவுகிறது.

இது உடல் பருமன் உள்ளவர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கக் செய்யும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தாராளமாக ஆப்பிளை சாப்பிடலாம்.
இரத்த சோகையை நீக்கும் :

ஆப்பிள் பழத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ள காரணத்தினால் ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் தொடர்ந்து ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வருவது அந்த நோயிலிருந்து விடுபடுவதற்கு கண்டிப்பாக வழிவகுக்கும்.
சர்க்கரை நோய்க்கு அருமருந்து :

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க ஆப்பிள் பழம் பெரிதும் உதவுகிறது. எனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வருவது நல்லது.
ஆஸ்த்துமாவை குணப்படுத்தும் :

ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபட ஆப்பிள் பழம் உதவுகிறது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});ஆப்பிள் வாங்கும்போது கவனமாக இருங்கள்…!!
ஆப்பிளை தோல் உடனேயே சாப்பிடுவது தான் மிகச்சிறந்தது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் ஆப்பிள் பழம் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கவேண்டும் என்பதற்காக அதன்மேலே மெழுகு பூசப்படுகிறது.

இந்த மெழுகு நம் உடல் நலத்திற்கு பேராபத்துக்களை விளைவிக்கக்கூடும். எனவே நீங்கள் ஆப்பிள் பழத்தை கடைகளில் வாங்கும் போது மிகவும் சிகப்பாகவும், கவர்ச்சிகரமாகவும் இருக்கும் ஆப்பிள்களை வாங்குவதை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.

ஏனெனில் அவை மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்களாகும். உங்கள் விரல் நகங்களை பயன்படுத்தி லேசாக சுரண்டி பார்த்தாலே அவை மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்களா அல்லது நல்ல ஆப்பிள்களை என்பதை உங்களால் தெரிந்து கொள்ள முடியும்.