• Home
  • Contact
  • Translator
  • Benefits
  • Category
    • Benefits
    • Health
    • Beauty
Facebook Twitter Instagram
Tamilanwiki.ComTamilanwiki.Com
  • Home
  • Contact
  • Translator
  • Benefits
  • Category
    • Benefits
    • Health
    • Beauty
Home»Benefits»Advantages Of Sesame Seeds in Tamil

Advantages Of Sesame Seeds in Tamil

WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email

 அறிமுகம் : 

            நமது நாட்டில் பல வகையான தானியங்கள் பயிர்செய்யப்படுகின்றன. அரிசி, கோதுமை போன்ற முக்கிய உணவு தானியங்கள் தவிர்த்து சமையல் எண்ணெய், இன்ன பிற உணவு பொருட்கள் தயாரிப்புக்காகவும் பல வகையான தானியங்கள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. 

       அந்த வகையில் சமையல் எண்ணெய் தயாரிக்கவும், உடலுக்கு பல்வேறு நன்மைகளை புரியும் ஒரு தானியமாக “எள்” இருக்கிறது.

        வெள்ளை எள், சிவப்பு எள், கருப்பு எள் என எள்ளில் பல வகைகள் உள்ளன. எந்த வகையான எள் சாப்பிட்டாலும் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

எள் பயன்கள் 

சருமம் :    

       எள்ளில் இருக்கும் எண்ணெய்கள் உடலின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது.

        தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி, சிரங்கு, படை பாதிப்புகளை கூடிய விரைவில் நீக்கும் தன்மை எள்ளுக்கு உண்டு. தோலில் சுருக்கங்கள் ஏற்படும் தன்மையும் நீங்கும்.

சத்து உணவு :

          மாமிசம் சாப்பிடாதவர்கள் மற்றும் மாமிச உணவுகள் சாப்பிடுவதை கைவிட்டவர்கள் அவ்வப்போது எள் சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்ல பலத்தை அளிக்கும். 

        எள் இரும்புச்சத்து, ஜிங்க் எனப்படும் துத்தநாக சத்து அதிகம் கொண்டது. 

எலும்புகள் :

        எள் அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும். எள்ளில் செம்பு அதிகம் உள்ளது. 

        மேலும் எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற குறைபாடுகளையும் எள் மூலம் போக்க முடியும்.

 ஆஸ்துமா :

       ஒவ்வாமை, சுற்று சூழல் மாசு மற்றும் இன்ன பிற காரணங்களாலும் சிலருக்கு ஆஸ்துமா  நோய் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சு காற்றை சுவாசிக்கும் போது சிரமத்திற்குள்ளாவார்கள். 

        இந்த ஆஸ்த்மாவினால் அவதிப்படுபவர்கள் தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம் குறையும்.

புரதம் :

      எள் புரத சத்தை தன்னகத்தே அதிகம் கொண்டது. உடல் சக்தி குறைந்திருப்பவர்கள், உடல் எடை சராசரி அளவிற்கும் கீழாக இருப்பவர்கள் தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் அவர்களின் உடல் சக்தி அதிகரிக்கும். 

      உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையை பெறுவார்கள். உடல் விரைவில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் பெறுவார்கள்.  

 

புண்கள் :

          உடலில் பலருக்கும் புண்கள் வெட்டுக்காயங்கள் ஏற்படுகின்றன. 

           இப்படிப்பட்ட காயங்கள் கொண்டவர்கள் எள் சாப்பிட்டு வந்தால், அந்த எள் கொண்டிருக்கும் இயற்கை சத்துக்கள் உடலில் ஏற்பட்டிருக்கும் புண்கள், வெட்டுக்காயங்கள், அதனால் ஏற்பட்ட தழும்புகள் போன்றவற்றை விரைவாக ஆற்றுகிறது. 

          மேலும் பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்புகளையும் குணப்படுத்துகிறது.

போதை பழக்கம் :

       மது, சிகரட் போன்ற போதைப்பொருட்களை அதிகம் உபயோகிப்பவர்களின் உடலில் அதிகளவு நச்சுக்கள் தங்கியிருக்கும்.

        இந்த போதை பழக்கத்தை வீட்டொழிக்க நினைப்பவர்கள் தினந்தோறும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் அவர்கள் உடலில் ஏறியிருக்கும் போதை இறங்கி, உடல் தூய்மையடையும்.

 படபடப்பு :

      சிலர் எப்போதும் ஒருவித பதட்டமான மனநிலையிலேயே இருப்பார்கள். எள் மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்துக்களை அதிகம் கொண்டது.

       இப்படி படபடப்பு தன்மை மிகுந்தவர்கள் தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் அவர்கள் உடலில் மூளை மற்றும் நரம்புகளில் இறுக்கம் தளர்ந்து, உடல் மற்றும் மனம் அமைதியடையும் படபடப்பு தன்மை மறையும்.

நோய் ஆற்றும் தன்மை :

       எள் நோய் எதிர்ப்பு ரசாயனங்கள் மற்றும் கிருமி நாசினி தன்மை கொண்ட வேதி பொருட்கள் அதிகம் கொண்டது. 

       குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு எள் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை கொடுத்து வந்தால், அவர்கள் அடிக்கடி நோய்களால் பாதிக்கப்படுவது குறையும். 

          ஜுரம், சளி போன்ற பாதிப்புகளை விரைவில் நீக்கும். குழந்தைகளின் உடல்வளர்ச்சி மேம்படும். 

சிறுநீரகம் :

           சிலருக்கு முதுமையின் காரணமாகவும், சரிவர நீர் அருந்தாமல் இருப்பதாலும் சிறுநீர் கழிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

          இப்படிப்பட்டவர்கள் தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அதிகளவு வெளியேறும். சிறுநீரகங்களின் கற்கள் உருவாவதையும் தடுக்கும்.

food health natural
Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Email
Previous ArticleBenefits Of Radish Leaves in Tamil
Next Article Ginger Benefits in Tamil

Related Posts

Cotton Milk Benefits In Tamil

Beauty Benefits Cereals Cooking Drinks Food Health Juice Natural

Wood Apple Benefits In Tamil

Beauty Benefits Cereals Drinks Food Fruits Health Juice Natural Yam

Jamun Fruit Benefits In Tamil

Beauty Benefits Cooking Drinks Food Fruits Health Juice Leaves Natural

Turmeric Powder Benefits In Tamil

Beauty Benefits Cooking Drinks Food Health Natural
Translate
Advertisment
Categories
  • Beauty (70)
  • Benefits (179)
    • Cereals (33)
    • Drinks (36)
    • Fruits (56)
    • Juice (57)
    • Leaves (36)
    • Plants (19)
    • Vegitables (37)
    • Yam (7)
  • Cooking (78)
    • Briyani (5)
    • Chicken (1)
    • Food (35)
    • Mutton (1)
    • Non Veg (2)
    • Veg (20)
  • Drawings (2)
    • Pencil Drawing (1)
    • Watercolor Painting (1)
  • Health (181)
  • History (2)
  • Natural (202)
  • Places (48)
    • Beach (12)
    • Boat Ride (11)
    • Church (23)
    • Falls (17)
    • Hills (11)
    • Islands (10)
    • Market (14)
    • Swimming (10)
    • Temple (36)
    • Tourist (39)
  • Stories (19)
    • Hindu (19)
    • History (19)
    • Kamba Ramayanam (19)
Facebook Twitter Instagram Pinterest Vimeo YouTube
  • Home
  • Benefits
  • Health
  • Natural
  • Beauty
© 2023 TamilanWiki.Com. All Rights Reserved

Type above and press Enter to search. Press Esc to cancel.